விருமன் டிரைலர் எப்படி இருக்கு ?...ரசிகர்கள் கொடுத்த ரெவ்யூ என்ன?

சென்னை : டைரக்டர் முத்தையா இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள விருமன் படம் ஆகஸ்ட் 12 ம் தேதி ரிலீசாக உள்ளது. கார்த்தி, அதிதி ஷங்கர், பிரகாஷ் ராஜ், சூரி, ராஜ்கிரண், சரண்யா பொன்வண்ணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு யுவன்சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

சூர்யாவின் 2டி என்டர்டைன்மென்ட் தயாரித்துள்ள இந்த படம் தந்தை - மகன் உறவை சொல்லும் முழு நீள கிராமத்து பொழுதுபோக்கு, காதல், சென்டிமென்ட் படமாக உருவாக்கப்பட்டுள்ளது.

விருமன் படத்தின் டீசர், பாடல்களைத் தொடர்ந்து நேற்று டிரைலர் மற்றும் ஆடியோ வெளியிடப்பட்டது. ஆடியோ வெளியீட்டு விழா மதுரை ராஜா முத்தையா மன்றத்தில் நடைபெற்றது. இதில் கார்த்தி, சூர்யா, பாரதிராஜா ஆகியோருடன் டைரக்டர் ஷங்கர் குடும்பத்துடன் கலந்து கொண்டார்.

விருமன் கதை இதுவா

விருமன் கதை இதுவா

நேற்று வெளியிடப்பட்ட விருமன் டிரைலரின் படி பார்த்தால், பிரகாஷ் ராஜிற்கு 4 மகன்கள். இதில் நான்காவது மகன் கார்த்தி. கார்த்திக்கும் பிரகாஷ் ராஜிற்கும் பிடிக்காது.இவர்கள் இருவரிடையே நடக்கும் மோதல்கள் தான் விருமன் படத்தின் கதை என தெரிகிறது. இதற்கிடையே சூரியின் காமெடி, அதிதியுடன் காதல் ஆகியனவும் உண்டு.

ரசிகர்கள் ரெவ்யூ என்ன

ரசிகர்கள் ரெவ்யூ என்ன

இந்த டிரைலரை சாதாரணமாக பார்த்தால், எங்கேயோ பார்த்தது போன்ற எண்ணம் வந்து போகிறது. கார்த்தி நடித்த பருத்தி வீரன், கொம்பன் போன்ற படங்களை மிக்ஸ் செய்து பார்த்தது போல் உள்ளது. படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியான சமயத்திலேயே இந்த விமர்சனம் எழுந்தது. கார்த்தி, நாக்கை மடித்து படு லோக்கலாக குத்தாட்டம் போடுவது பருத்திவீரனை பட காட்சிகள் நினைவில் வருவதை தவிர்க்க முடியாததாக உள்ளது.

இத்தனை மில்லியன் வ்யூவா

இத்தனை மில்லியன் வ்யூவா

இருந்தாலும் ரசிகர்கள் இந்த டிரைலரை மிகவும் ரசித்து வருகின்றனர். டிரைலர் வெளியிடப்பட்ட 24 மணி நேரத்தில் 3 மில்லியன் பார்வைகளை பெற்றுள்ளது. நீண்ட இடைவேளைக்கு பிறகு ஒரு கமர்ஷியல், கார்ப்பரேட் வில்லன்கள் இல்லாத ஒரு படத்தை பார்க்க போகிறது எதிர்பார்ப்பு உணர்வு ஏற்பட்டுள்ளது. சோஷியல் மெசேஜ் இல்லாத, முழுக்க முழுக்க கிராமத்து எமோஷனல் படமாக உருவாக்கப்பட்டுள்ளது.

பிளாக் பஸ்டர் நிச்சயம்

பிளாக் பஸ்டர் நிச்சயம்

டிரைலர் பிஜிஎம் செமயாக உள்ளது. கார்த்தி, சூரி காம்போ நிச்சயம் கிளிக் ஆகும். பாடி பில்டர் ராஜ்கிரண் வேறு புதிய லுக்கில் செமயா இருக்கார். ஒரு நடிகரா பிரகாஷ் ராஜை அடிச்சுக்க ஆளே இல்லை. நிச்சயம் பிளாக் பஸ்டர் படம், வழக்கமான முத்ததையாவின் சினிமாடிக் படமாக உள்ளது என ரசிகர்கள் கமெண்ட் செய்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X