நடிகை யாஷிகா ஆனந்த் தற்போது எப்படி உள்ளார்? நேரில் சந்தித்த பிக்பாஸ் பிரபலம்!
சென்னை: நடிகை யாஷிகா ஆனந்தை அவரது நெருங்கிய தோழியான ஐஸ்வர்யா தத்தா நேரில் சந்தித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் வளரும் இளம் நடிகையாக வலம் வருபவர் நடிகை யாஷிகா ஆனந்த்.
நேற்று முன்தினம் இரவு யாஷிகா ஆனந்த் புதுச்சேரியில் இருந்து காரில் சென்னை திரும்பிக் கொண்டிருந்தார்

தோழி பலி
சூளேரிக்காடு அருகே அவரது கார் வந்தபோது எதிர்பாராத விதமாக விபத்துக்குள்ளாது. இதில் யாஷிகா ஆனந்த்தின் தோழி வள்ளி செட்டி பவானி காரில் இருந்து தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இடுப்பில் எலும்பு முறிவு
பின் இருக்கையில் அமர்ந்திருந்த சையது, அமீர் ஆகிய இரண்டு நண்பர்கள் லேசான காயங்களுடன் தப்பினர். இதில் யாஷிகா படுகாயமடைந்தார். யாஷிகாவின் இடுப்பில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது,

அப்பல்லோ மருத்துவமனை
இதேபோல் கை மற்றும் காலிலும் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. முதலில் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட யாஷிகா ஆனந்த் பின்னர் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

மது போதையில் இல்லை
யாஷிகா ஆனந்த் காரை வேகமாக ஓட்டிச்சென்றதே விபத்துக்கு காரணம் என்று தெரியவந்துள்ளது. அதே நேரத்தில் யாஷிகா ஆனந்த் மது போதையில் இல்லை என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

ஐஸ்வர்யா தத்தா சந்திப்பு
இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் யாஷிகாவுக்கு நெருங்கிய தோழியான ஐஸ்வர்யா தத்தா, அவரை மருத்துவமனைக்கு சென்று நேரில் பார்த்துள்ளார். அவரது உடல் நிலை குறித்து குடும்பத்தினரிடமும் மருத்துவர்களிடமும் விசாரித்துள்ளார்.
Recommended Video

நலமாக இருக்கிறார்
இந்நிலையில் நடிகை ஐஸ்வர்யா தத்தா, யாஷிகா ஆனந்த் குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் தகவல் தெரிவித்துள்ளார். அவர் பதிவிட்டிருப்பதாவது, என்னுடை ஃபிரண்ட் நலமாக இருக்கிறார். விரைவில் நலம்பெற்று விடுவார். அவருடைய மன உறுதி திடமாக உள்ளது என பதிவிட்டுள்ளார்.

3 பிரிவுகளில் வழக்கு
இதனைப பார்த்த நெட்டிசன்கள் அவர் விரைவில் நலம் பெற பிரார்த்தனைகள் என பதிவிட்டு வருகின்றனர். இதனிடையே அதிவேகமாக காரை ஓட்டியது. உயிர்சேதம் ஏற்படுத்தியது உள்ளிட்ட 3 பிரிவுகளில் நடிகை யாஷிகா ஆனந்த் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.


Click it and Unblock the Notifications