»   »  கபாலீ ஈஈஈஈஈஈ... யோசிங்க மக்கழே..!

கபாலீ ஈஈஈஈஈஈ... யோசிங்க மக்கழே..!

Posted By:
Subscribe to Oneindia Tamil

பிரம்மிச்சு பேசுறவங்க...

பிரம்மை பிடிச்சு பேசுறவங்க...
பெருமையா பேசுறவங்க...
அமைதியா பேசுறவங்க...
ஆத்திரமா பேசுறவங்க...
ஆர்வமா பேசுறவங்க...
அதிகமா பேசுறவங்க...
அறிவா பேசுறவங்க...
அறிவில்லாம பேசுறவங்க...


How Kabali grows like a giant?


பொதுவா பேசுறவங்க...
பொறுப்பா பேசுறவங்க..
பொறுப்பே இல்லாம பேசுறவங்க...
வெறுப்பா பேசுறவங்க...
வேணும்ணு பேசுறவங்க...
வேண்டாம்னு பேசுறவங்க...
விபரமா பேசுறவங்க...
விபரம் தெரியாம பேசுறவங்க...
புள்ளி விபரம் சொல்லிப் பேசுறவங்க...
புத்திசாலித்தனமா பேசுறவங்க...
கத்திப் பேசுறவங்க...
கத்தி தீட்டிக்கிட்டே பேசுறவங்க..
புத்திசொல்லிப் பேசுறவங்க...
புலம்பிப் பேசுறவங்க...
புகழைப் பேசுறவங்க...
புகழுக்காக பேசுறவங்க....
புதுசா புதுசா பேசுறவங்க...
ரசிச்சு பேசுறவங்க...
ராங்கா பேசுறவங்க...
ரஜினிக்காக பேசுறவங்க
ரஜினி பிடிக்காம பேசுறவங்க
ரஞ்சித்துக்காக பேசுறவங்க
ரஞ்சித்தை பிடிக்காம பேசுறவங்க
ரசிகனா பேசுறவங்க...
ரசிகனையே பிடிக்காம பேசுறவங்க..
சினிமா பேசுறவங்க...
சினிமாவையே பேசுறவங்க...
சீரழிவுன்னு பேசுறவங்க...
கவலையா பேசுறவங்க...
கலையா பேசுறவங்க...
கொலையா பேசுறவங்க..
வக்கணையா பேசுறவங்க....
வம்படியா பேசுறவங்க..
வரலாறு பேசுறவங்க...
பொண்டாட்டிகிட்ட பேசுறவங்க..
புள்ளைகிட்ட பேசுறவங்க...
காதலிகிட்ட பேசுறவங்க...
கள்ளமனசோட பேசுறவங்க...
வெள்ளமனேசோட பேசுறவங்க...
வழக்கமா பேசுறவங்க...
வழவழன்னு பேசுறவங்க...
இசையை பத்தி பேசுறவங்க...
இசையே தெரியாம பேசுறவங்க...

எரிச்சல்ல பேசுறவங்க..
தெறிக்கும்னு பேசுறவங்க...
அடங்கும்னு பேசுறவங்க...
அலறும்னு பேசுறவங்க...
நல்லவனா பேசுறவங்க...
நல்லவன் மாதிரி பேசுறவங்க...
நல்லதுன்னு பேசுறவங்க...
நல்லதுக்கில்லன்னு பேசுறவங்க....
வேலை செய்யும்போது பேசுறவங்க...
வேலையாவே பேசுறவங்க...
செய்திக்காக பேசுறவங்க..
செய்தியைப் பார்த்து பேசுறவங்க...
விளம்பரத்தைப் பத்திப் பேசுறவங்க...
விளம்பரத்துக்காகவே பேசுறவங்க....
வியாபாரம்னு பேசுறவங்க...
வியாபாரத்துக்காக பேசுறவங்க....
வெங்காயம்னு பேசுறவங்க....
வெங்காயம் மாதிரி பேசுறவங்க....
வெட்டியா பேசுறவங்க...
வெறித்தனமா பேசுறவங்க....
வௌக்கமா பேசுறவங்க...
வௌக்குமாறுன்னு பேசுறவங்க....
வௌங்காதுன்னு பேசுறவங்க...வராதுன்னு பேசுறவங்க...
வரணும்னு பேசுறவங்க...
வரக்கூடாதுன்னு பேசுறவங்க...
வரும்னு பேசுறவங்க
வரம்னு பேசுறவங்க...
சாபம்னு பேசுறவங்க....
சந்தியில பேசுறவங்க...
சந்தையில பேசுறவங்க
சண்டைக்காக பேசுறவங்க...
சாதின்னு பேசுறவங்க..
சாதனைன்னு பேசுறவங்க...
சகாப்தம்னு பேசுறவங்க...
சரித்திரம்னு பேசுறவங்க..
தரித்திரம்னு பேசுறவங்க...
உருப்படாதுன்னு பேசுறவங்க...
ஒப்பேறாதுன்னு பேசுறவங்க...
ஓடும்னு பேசுறவங்க
ஓடணும்ணு பேசுறவங்க...
ஓடாதுன்னு பேசுறவங்க...
ஓடக்கூடாதுன்னு பேசுறவங்க....
ஓடுனா பார்ப்போம்னு பேசுறவங்க...
கிண்டிப் பேசுறவங்க...
கிண்டலாப் பேசுறவங்க...
கிறுக்குன்னு பேசுறவங்க...
கிறுக்கன்னு பேசுறவங்க...
கிறுக்கு புடிச்சு பேசுறவங்க....
நறுக்னு பேசுறவங்க...
நக்கலா பேசுறவங்க...
நல்லாருக்கும்ணு பேசுறவங்க...
நாசமா போகும்ணு பேசுறவங்க....
தப்பா பேசுறவங்க...
தப்புத்தப்பா பேசுறவங்க...
டைமிங்கா பேசுறவங்க...
டைம்பாசுக்கு பேசுறவங்க...
அரணி பேசுறவங்க...
புரணி பேசுறவங்க...
அரசியல் பேசுறவங்க...
அழகா பேசுறவங்க...
அற்புதமா பேசுறவங்க...
அற்புதம்னு பேசுறவங்க...
அவமானம்னு பேசுறவங்க...
அவசியம்னு பேசுறவங்க...
அவசியமே இல்லாம பேசுறவங்க...
சிறப்பா பேசுறவங்க..
சிரிப்பா பேசுறவங்க....
சிந்திக்கப்பான்னு பேசுறவங்க....
குசும்பா பேசுறவங்க...
கொழுப்பா பேசுறவங்க....
கூட்டமா பேசுறவங்க...
கொண்டாட்டமா பேசுறவங்க
திட்டிப் பேசுறவங்க...
திருத்தமா பேசுறவங்க...
திருந்தணும்னு பேசுறவங்க...
தீர்ப்பு மாதிரி பேசுறவங்க..


விமானமான்னு பேசுறவங்க...
வீணாப்போகும்னு பேசுறவங்க...


தமிழ்ல பேசுறவங்க..
தங்கிலீஷ்ல பேசுறவங்க...
இந்தில பேசுறவங்க..
இங்கிலீஷ்ல பேசுறவங்க....


ஃபேஸ்புக்ல பேசுறவங்க..
டாஸ்மாக்குல பேசுறவங்க...
ட்விட்டர்ல பேசுறவங்க....
டூட்டில பேசுறவங்க...
வாட்ஸ்அப்ல பேசுறவங்க...
வாட்ஸ் அப்னு பேசுறவங்க...


முடியுமான்னு பேசுறவங்க
முடியாதுன்னு பேசுறவங்க
முடியலன்னு பேசுறவங்க
முறுக்கி பேசுறவங்க...
முனகிப் பேசுறவங்க...


கபாலிடான்னு பேசுறவங்க...
காவாலிடான்னு பேசுறவங்க...
காலிடான்னு பேசுறவங்க...


வரலாறுன்னு பேசுறவங்க...
தகராறுன்னு பேசுறவங்க....
தாறுமாறா பேசுறவங்க...
தன்மையா பேசுறவங்க...
தம்பட்டதுக்காக பேசுறவங்க...


இதுக்காகவே லீவுன்னு பேசுறவங்க....
இதுக்கெல்லாம் லீவான்னு பேசுறவங்க...


தெருவுல பேசுறவங்க....
திண்ணையில பேசுறவங்க
தியேட்டர்ல பேசுறவங்க
தியேட்டர்காரங்களைப் பத்தி பேசுறவங்க
டிக்கெட்டைப் பத்திப் பேசுறவங்க...
டிக்கெட்டுக்காக பேசுறவங்க...
கொள்ளைன்னு பேசுறவங்க...
கொடுமைன்னு பேசுறங்க...
கொடுப்பினைன்னு பேசுறவங்க...


ரோட்டுல பேசுறவங்க...
வீட்டுல பேசுறவங்க...
நாட்டுல பேசுறவங்க...


இப்டி பூரா பேரும்
கபாலி பத்தியே பேசுனா....
கபாலி, வானத்து மேல தலையும்
பூமி மேல காலுமா வாமனன் மாதிரி வளர்ந்து....
மகாபலி கிட்ட மூணு அடி கேட்டு......
வானத்தையும் பூமியையும் இரண்டே அடியா அளந்து...
மூணாவது அடிக்கு...
உங்க தலையைக் காட்டுங்க மக்கழேன்னு கேட்காம என்ன செய்வாரு?


யோசிங்க மக்கழே!


-முருகன் மந்திரம்,


பாடலாசிரியர்

English summary
Here is Murugan Manthiram's poetry on Kabali.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil