twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    அஜித், சூர்யா, விக்ரம், அருண் விஜய்க்கு உதவிய கந்த சஷ்டி கவசம்.. எப்படி தெரியுமா?

    |

    சென்னை: கந்த சஷ்டி கவசத்தை நிந்தனை செய்த கறுப்பர் கூட்டம் விஸ்வரூபமெடுத்து வருகிறது.

    Recommended Video

    Vijay யை சீண்டும் Meera Mithun, கொதிக்கும் ரசிகர்கள்.

    டிவிட்டரில், #வெற்றிவேல்_வீரவேல் என்ற ஹாஷ்டேக்கை உருவாக்கி இந்தியளவில் முருக பக்தர்கள் டிரெண்ட் செய்து வருகின்றனர்.

    இந்நிலையில், தல அஜித், சூர்யா, விக்ரம் மற்றும் நடிகர் அருண் விஜய்க்கு கந்த சஷ்டி கவசம் எந்த வகையில் உதவி இருக்கிறது என்பதை இங்கே காண்போம்.

    ஆஹா.. டூமச்சால்ல இருக்கு.. பரவசத்துக் கூட்டிட்டு போகணும்ல.. வைரலாகும் பிரபல நடிகையின் போட்டோ!ஆஹா.. டூமச்சால்ல இருக்கு.. பரவசத்துக் கூட்டிட்டு போகணும்ல.. வைரலாகும் பிரபல நடிகையின் போட்டோ!

    காக்க காக்க

    காக்க காக்க

    தேவராய சுவாமிகள் அருளிய கந்த சஷ்டி கவசத்தில் வரும் பிரபலமான வரிகளான "காக்க காக்க கனகவேல் காக்க" என்ற வரிகளில் இருந்து உருவானது தான் சூர்யாவின் "காக்க காக்க" படத்தின் டைட்டில் என்பது அனைவரும் அறிந்த ஒன்று தான். இந்த படத்திற்கு கெளதம் மேனன் முன்னதாக பாதி என்றும் களம் என்றும் பெயர்களை வைக்க ஆலோசனை செய்ததாகவும், கடைசியில், நல்லவர்களை காக்க தீயவர்களை போட்டுத் தள்ளும் என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட் ஹீரோ என்பதால் காக்க காக்க டைட்டில் பக்காவாக வந்து சேர்ந்திருக்கிறது. வேல், ஆறு என்ற டைட்டில்களிலும் நடிகர் சூர்யா படம் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. அவரது இயற்பெயரே சரவணன் தான்.

    தடையற தாக்க

    தடையற தாக்க

    மகிழ் திருமேனி இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் உருவான "தடையற தாக்க" படத்தின் டைட்டிலும் கந்த சஷ்டி கவசம் பாடலில் இடம்பெற்ற அற்புத வரிகள் தான். அருண் விஜய் தீவிர முருக பக்தர் என்றும், இந்த டைட்டில் பொருத்தமாக இருக்கு என்றும் கூறியதாக மகிழ் திருமேனி பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். மேலும், கெளதம் மேனனின் உதவி இயக்குநராக வேட்டையாடு விளையாடு படத்தில் பணிபுரிந்த போது, அந்த படத்திற்கு இந்த டைட்டிலை கொடுத்ததாகவும், ஆனால், சில பல காரணங்களுக்காக டைட்டில் மாற்றப்பட்டது என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

    கனகவேல் காக்க

    கனகவேல் காக்க

    கந்த சஷ்டி கவசம் பாடலில் வரும் வரிகளுடன் வெளியான மற்றொரு தமிழ் படம் நடிகர் கரண் நடிப்பில் வெளியான கனகவேல் காக்க படம் தான். கனகவேல் என்ற பெயர் கொண்ட ஹீரோ, ஊழல் வாதிகளிடம் இருந்து அப்பாவி மக்களை காப்பாற்றும் கதை என்பதால், இந்த டைட்டில் அந்த படத்திற்கு பக்கவாக பொருந்தியது.

    சியான் விக்ரம்

    சியான் விக்ரம்

    சியான் விக்ரம் நடித்த தில் படத்திலும் நடிகர் விக்ரமின் கதாபாத்திர பெயர் கனகவேல் தான். இயக்குநர் தரணி இயக்கத்தில் உருவான அந்த படம் தான் நடிகர் விக்ரமை ஆக்‌ஷன் ஹீரோவாக மாற்றியது. நடிகர் விக்ரமை அடித்து உதைத்து ரயில்வே டிராக்கில் போட்டு விட்டு செல்லும் காட்சியில், "காக்க காக்க கனகவேல் காக்க" என கந்த சஷ்டி கவசத்தை படித்து தன்னைத் தானே மோட்டிவேட் செய்து கொள்வார் விக்ரம்.

    பில்லா

    பில்லா

    தல அஜித் நடிப்பில் வெளியான பில்லா படத்தில், இடம்பெறும் ஓப்பனிங் பாடலான சேவல் கொடி பறக்குதுடா என்ற பாடல் முழுக்க முழுக்க முருகனை பற்றிய பாடலாகவே அமைந்திருக்கும். மேலும், பாடலாசிரியர் பா. விஜய், "காக்க காக்க காக்குமடா.. நோக்க நோக்க நோக்குமடா" என கந்த சஷ்டி கவச வரிகளை பாடல் வரிகளுக்கு ஏற்ப மாற்றி பயன்படுத்தி இருப்பார். இது மட்டுமின்றி, தமிழ் படங்களில் ஹீரோவுக்கு அதிகமாக கார்த்தி என்று முருகனின் பெயரையே சூட்டியிருப்பார்கள். ஏகப்பட்ட சினிமா பிரபலங்களும் முருக பக்தர்களாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Kollywood film makers and popular actors who used Kandha Sashti Kavasam song in their movies and songs here we look it up.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X