கட்டப்பாவிற்கு காமெடியா என்று யோசித்த பிரின்ஸ் இயக்குநர்... அவருக்கு வேற முகம் இருக்கு என்ற எஸ்.கே
சென்னை: தெலுங்கு இயக்குநர் அணுதீப் இயக்கத்தில் நடிகர்கள் சிவகார்த்திகேயன், சத்யராஜ், வெளிநாட்டு நடிகை மரியா உள்ளிட்டோர் முன்னணி நடிகர்களா நடித்துள்ள திரைப்படம் பிரின்ஸ்.
வரும் தீபாவளி அன்று இந்தப் படம் திரைக்கு வருகிறது. சிவகார்த்திகேயன் திரைப்படம் முதன்முதலாக தீபாவளிக்கு வருவது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் நடிகர் சத்யராஜை முதலில் வேண்டாம் என்று இயக்குநர் யோசித்ததாக நடிகர் சத்யராஜ் சுவாரசியமான சம்பவம் ஒன்றை கூறியுள்ளார்.

தெலுங்கு படங்கள்
நடிகர் சத்யராஜ் நடித்த தெலுங்கு படங்களை பொருத்தவரை பாகுபலி மட்டும்தான் தமிழக மக்களுக்கு நன்கு தெரியும். ஆனால் 1980-களிலேயே இரண்டு, மூன்று தெலுங்கு படங்களில் நடித்துள்ளார் சத்யராஜ். அதன் பின்னர் கடந்த 2013-ஆம் ஆண்டு பாகுபலி கதாநாயகன் பிரபாஸ் முன்னதாக நடித்திருந்த மிர்ச்சி என்கிற திரைப்படத்தில் அவருக்கு தந்தையாக நடித்திருந்தார் சத்யராஜ். ஆனால் அவருடைய தோற்றத்திற்கு ஏற்றார் போல கம்பீரமான கதாபாத்திரங்களே தொடர்ச்சியாக அவருக்கு தெலுங்கு சினிமாவில் கொடுக்கப்பட்டது. பாகுபலி திரைப்படம் அவருக்கு வாழ்நாள் கதாபாத்திரமாக அமைந்துவிட்டது.

தமிழ் நடிகர்கள்
பாகுபலி திரைப்படத்தை பொருத்தவரை அனைத்து கதாபாத்திரங்களும் வலுவாக இருக்கும். அந்த வகையில் நடிகர் சத்யராஜ் நடித்த கட்டப்பா, நடிகர் நாசர் நடித்திருந்த பிஜிலதேவா உள்ளிட்ட கதாபாத்திரங்களும் சிறப்பாக எழுதப்பட்டிருக்கும். அதில் நடித்த சத்யராஜ் மற்றும் நாசர் சிறப்பாக நடித்திருப்பார்கள். ஆனால் அந்தப் படம் வந்த புதிதில் தெலுங்கு நடிகர்களுக்கு தெலுங்கு படத்தில் வாய்ப்பு குறைந்து விட்டது என்று ஒரு குற்றச்சாட்டு அந்த ஊர் நடிகர்களால் வைக்கப்பட்டது. அதுவும் தமிழ் மொழி படங்களில் நடித்த சிலராலேயே அப்படிப்பட்ட குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

பிரின்ஸ்
இருப்பினும் எப்படி இங்கு பிறமொழி நடிகர்கள் நடிக்கிறார்களோ, அதே போல நம் ஊர் நடிகர்களும் அங்கு தொடர்ச்சியாக நடித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். அந்த வகையில் முழுக்க முழுக்க நகைச்சுவை திரைப்படமாக உருவாகி இருக்கும் பிரின்ஸ் திரைப்படத்தில் ஒரு கதாபாத்திரத்திற்கு நடிகர் சத்யராஜை இயக்குநரிடம் கூறியிருக்கிறார் சிவகார்த்திகேயன். ஆனால்,"சார் அவரா... அவர் கட்டப்பா ரோல் பண்ணவராச்சே அவரு எப்படி காமெடி ரோல் பண்ணுவாரு" என்று அனுதீப் கேட்டாராம்.

அவருக்கு இன்னொரு முகம் இருக்கு
அப்போது சிவகார்த்திகேயன் அவரிடம்,"உங்களுக்கு சத்யராஜ் அவர்களை கட்டப்பாவாகத்தான் தெரியும். ஆனால் தமிழில் நடிகர்கள் கவுண்டமணி, மணிவண்ணன் போன்றவர்களுடன் கூட்டணி அமைத்து ரிக்க்ஷா மாமா, நடிகன் போன்ற பல நகைச்சுவை திரைப்படங்களில் நடித்துள்ளார் என்று கூறிய பின்னர்தான் தான் அந்தப் படத்தில் நடித்ததாக சத்யராஜ் அவர்கள் கூறியிருக்கிறார்.


Click it and Unblock the Notifications











