கேஜிஎஃப் 2 ஒளிப்பதிவு மிரட்டலா இருக்க என்ன காரணம் தெரியுமா? ஹீரோயின் சொன்ன சூப்பர் சீக்ரெட்!

பெங்களூரு: ரிலீசான 7 நாட்களில் 700 கோடி வசூலை வாரி குவித்து வசூல் சுனாமியாக ஒட்டுமொத்த இந்திய பாக்ஸ் ஆபிஸையும் தெறிக்க விட்டு இருக்கிறது கேஜிஎஃப் 2 திரைப்படம்.

இந்தி பெல்ட்டில் 7 நாட்களில் அதிவேகமாக 250 கோடி ரூபாயை வசூல் செய்து பாகுபலி 2ம் பாகம் 8 நாட்களில் செய்த சாதனையையே இந்த படம் முறியடித்துள்ளது.

இந்த அளவுக்கு படம் ஹிட் அடிக்க ஹாலிவுட் தரத்தில் இருந்த படத்தின் ஒளிப்பதிவு தான். அது தொடர்பாக கேஜிஎஃப் 2 ஹீரோயின் ஸ்ரீநிதி ஷெட்டி பதிவிட்டுள்ள குறும்புத்தனமான போஸ்ட் டிரெண்டாகி வருகிறது.

இந்திய சினிமாவின் சிஇஓ

இந்திய சினிமாவின் சிஇஓ

இந்திய சினிமாவின் புதிய சிஇஓவாக மாறியுள்ளார் ராக்கி பாய். இயக்குநர் ராஜமெளலியின் RRR வசூலை எல்லாம் அசால்ட்டாக கடந்து பாகுபலி 2 மற்றும் தங்கல் படத்திற்கே டஃப் கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த அளவுக்கு நாளுக்கு நாள் 100 கோடி வசூலை வாரி குவித்து வருகிறது கேஜிஎஃப் 2 திரைப்படம்.

புவன் கெளடா

புவன் கெளடா

வெறும் 37 வயதாகும் இளைய ஒளிப்பதிவாளர் புவன் கெளடா தான் கேஜிஎஃப் முதல் மற்றும் கேஜிஎஃப் 2 படங்களுக்கு ஒளிப்பதிவு செய்து கேஜிஎஃப் உலகத்தையும் ராக்கி பாயின் ராஜ்ஜியத்தையும், அதிராவின் ஆக்ரோஷத்தையும், ராமி சென்னின் அதிகாரத்தையும் காட்சிப்படுத்தியவர். தேசிய விருதுகள் உள்ளிட்ட பல விருதுகள் நிச்சயம் இவரது உழைப்புக்கு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஒளிப்பதிவு சூப்பரா இருக்க காரணம் என்ன

ஒளிப்பதிவு சூப்பரா இருக்க காரணம் என்ன

இந்நிலையில், கேஜிஎஃப் 2 படத்தில் ஹீரோயினாக நடித்துள்ள நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி தனது ட்விட்டர் பக்கத்தில் கேஜிஎஃப் 2 படத்தின் ஒளிப்பதிவு இந்த அளவுக்கு சூப்பரா இருக்க காரணம் என்ன தெரியுமா? என கேள்வி எழுப்பி அதற்கு அவர் ஷேர் செய்துள்ள போட்டோ ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தி உள்ளது.

நான் தான்

நான் தான்

கேமரா வியூ பாயின்ட்டரை நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி பார்ப்பது போல எடுக்கப்பட்ட BTS புகைப்படத்தை ஷேர் செய்து இந்த அளவுக்கு படத்தின் ஒளிப்பதிவு இருக்க காரணமே அவர் தான் என்பது போல குறும்புத்தனம் கலந்து பதிவிட்டுள்ள போஸ்ட் கேஜிஎஃப் 2 ரசிகர்கள் மத்தியில் டிரெண்டாகி வருகிறது.

செல்லத்த சுட்டுட்டாங்களே

செல்லத்த சுட்டுட்டாங்களே

கேஜிஎஃப் 2 படத்தின் கிளைமேக்ஸ் காட்சியில் வில்லன் அதீரா ஹீரோயினை சுட்டுக் கொல்லும் காட்சி ரசிகர்களை பதற வைத்திருக்கும். செல்லத்த சுட்டு கொன்னுட்டானே அதீரா என அத்தனை ரசிகர்களுக்கும் ராக்கி பாய்க்கு கோவம் வருவதற்கு முன்பாக வருவது தான் படத்தின் பலமே, கேஜிஎஃப் 3வது பாகத்தில் ராக்கி பாய் இருந்தால், ஸ்ரீநிதி ஷெட்டியின் கதாபாத்திரமும் கண்டிப்பாக இடம்பெறும் என்கிற நம்பிக்கையுடன் ரசிகர்கள் காத்துக் கிடக்கின்றனர்.

Recommended Video

Beast VS KGF 2 | Box Office Collection | Filmibeat tamil
கோப்ரா படத்தில்

கோப்ரா படத்தில்

கேஜிஎஃப் முதல் பாகத்தில் அசத்தலாக ராங்கிக்காரியாக நடித்திருந்த ஸ்ரீநிதி ஷெட்டியை உடனடியாக சியான் விக்ரம் நடிக்கும் கோப்ரா படத்திற்கு புக் செய்தனர். ஆனால், கேஜிஎஃப் 2 படமே வெளியாகி விட்ட நிலையில், கோப்ரா படத்தில் எப்போது ஸ்ரீநிதி செல்லத்தை பார்க்கப் போகிறோம் என ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். சீக்கிரமே கோப்ரா வந்து மிரட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X