For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இப்படித்தான் இழந்தேன், ரஜினியின் நட்பை! - கே டி குஞ்சுமோன்

By Shankar
|

ரஜினியும் நானும் நெருங்கிய நண்பர்களாக இருந்தோம். ஆனால் நான் கொடுத்த ஒரு பேட்டியால் ரஜினியுடனான நட்பை இழந்தோன் என்று கூறியுள்ளார் தயாரிப்பாளர் கேடி குஞ்சுமோன்.

கேரளாவில் ரஜினி படங்களை வாங்கி வெளியிட்டு நல்ல லாபம் பார்த்து, பின்னர் தயாரிப்பாளராக உயர்ந்தவர் கேடி குஞ்சுமோன். சூரியன், ஜென்டில்மேன், காதலன் என பல வெற்றிப் படங்கள் தந்தவர்.

இப்போது படங்கள் எடுக்கவில்லை. ரஜினியின் லிங்கா பட புகைப்படங்களைப் பார்த்து உணர்ச்சிவசப்பட்டு பேஸ்புக்கில் அவர் எழுதியுள்ள ஒரு கடிதம் இது:

பழைய நண்பன்

பழைய நண்பன்

ஸ்டைல் சக்கரவர்த்தி சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்கள் 'லிங்கா' படத்தில் நடித்து வருவதை அறிந்து அவரது தீவிர ரசிகன் என்ற முறையிலும், பழைய நண்பன் என்ற முறையிலும் நான் மிகவும் மகிழ்ச்சி கொள்கிறேன்.

காலம் தமிழ்சினிமாவுக்கு மட்டுமல்ல இந்திய சினிமாவுக்கே அளித்த வரப்பிரசாதம் தான் ரஜினி அவர்கள். அவர் சூப்பர் ஸ்டார் என்பதை விட ஒரு சகாப்தம். ரஜினியைப் போல ஆண்டவனின் பூரண அருள் கிடைத்த வேறொருவரை உலகில் காணக்கிடைப்பது அரிது.

25 வயது குறைந்த ரஜினி

25 வயது குறைந்த ரஜினி

'லிங்கா' படத்தில் அவரது புகைப்படங்களைப் பார்க்கும் பொழுது ரஜினிக்கு 25 வயது குறைந்தது போல் காட்சியளிக்கிறார். மூன்றுமுகம், படிக்காதவன், முரட்டுக்காளை, தங்கமகன் போன்ற படங்களில் நடிக்கும்போது அவரது தோற்றம் எப்படி இருந்ததோ அதே தோற்றத்தை 'லிங்கா'விலும் காண முடிகிறது.

ரசிகன்

ரசிகன்

அவரது இளமை தோற்றத்தைக் காணும்பொழுது அவர் என்றும் நடித்துக் கொண்டே இருக்கலாம். இன்னும் 100 படங்களில் நடிக்கலாம் என்று தோணுகிறது. அதற்கான ஆயுள், ஆரோக்கியம், ஊக்கம், மனஉறுதி என அனைத்தையும் ஆண்டவன் அவருக்கு அருளியுள்ளார். எனவே தான் ஆண்டவன் அருளை பூரணமாகப் பெற்றவர் என்று நான் முன்பே கூறினேன். உலகத்தில் உள்ள கோடிக்கணக்கான ரஜினி ரசிகர்களில் நானும் ஒருவன்.

ஆசை

ஆசை

ரஜினி படம் வெளிவருகிறது என்றால் மக்களுக்கு அன்று தீபாவளி கொண்டாட்டம் என்று பொருள். அவர் தொடர்ந்து படங்கள் நடித்துக் கொண்டே இருக்க வேண்டும். உலகத்தில் உள்ள கோடானுகோடி ரசிகப்பெருமக்கள் என்றும் தீபாவளி கொண்டாட வேண்டும் என்பதேரஜினி ரசிகன் என்ற முறையிலும், அவரது நண்பன் என்ற முறையிலும் என்னுடைய ஆசை.

விரிசல்

விரிசல்

எனது இந்த ஆசையை சுமார் 15 வருடத்துக்கு முன்னதாகவே நான் தெரியப்படுத்தியிருந்தேன். ஆனால் ரஜினி அவர்கள் அதைத் தவறாகப் புரிந்து கொண்ட காரணத்தினாலே என்னவோ எங்களது நட்பில் விரிசல் ஏற்பட்டது.

கேரளாவில்

கேரளாவில்

ரஜினி ரசிகனாக இருந்த நான் அவரது ஸ்டைல், டயலாக் பேசும் விதம், நடிப்பு ஆகியவற்றால் ஈர்க்கப்பட்டேன். அதன் விளைவாக அவரது படங்களை வாங்கி கேரளாவில் விநியோகம் செய்து அங்கேயும் அவருக்கு பெரிய ஒரு ரசிகர் கூட்டத்தத்தை என்னால் உருவாக்க முடிந்தது. ரஜினியின், படிக்காதவன், தங்க மகன் என்று ஏராளமான படங்களை எனது நிறுவனம் வெளியிட்டது.

ஒன்றாக சாப்பிட்டோம்

ஒன்றாக சாப்பிட்டோம்

அந்த காலத்தில் எனக்கு ரஜினியுடனான நட்பு மிக ஆழமானதாக இருந்தது. தங்கமகன் படப்பிடிப்பு வேளையில் ஷூட்டிங் ஸ்பாட்டில் நாங்கள் ஒன்றாக அமர்ந்து உணவு அருந்துவோம். சினிமா மற்றும் தனிப்பட்ட விஷயங்களைக் கூட நாங்கள் பகிர்ந்து கொள்வோம். அவர் சூப்பர் ஸ்டாராக விஸ்வரூபம் எடுக்கும் வேளையில் நான் தமிழ் சினிமாவில் தயாரிப்பாளராகவும் முத்திர பதித்து விட்டேன்.

ரட்சகன்

ரட்சகன்

என்னுடைய ஒவ்வொரு படத்துக்கும் அவர் வாழ்த்து தெரிவிப்பார். படம் பார்த்து பாராட்டவும் தவற மாட்டார். எனது 'ரட்சகன்' படத்தை பார்க்க வேண்டும் என்று ரஜினி ஆசைப்பட்டார். ஆனால் அவருக்கு நேரம் இல்லை. பிறகு அவரது செளகரியத்தை அறிந்து அவருக்கு ஒரு தனிக்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டது. அவர் குடும்பத்துடன் படத்தைப் பார்த்து ரசித்து அன்று என்னைப் பாராட்டியது இன்றளவும் நான் வெகுமதியாகக் கருதுகிறேன்.

கதை அமையல

கதை அமையல

எங்களுக்கு இடையே உள்ள நட்பை அறிந்த பல சினிமா பிரபலங்களும் என்னிடம் ஏன் ரஜினியை வைத்து படம் தயாரிக்காமல் இருக்கிறீர்கள் என்று கேட்டதுண்டு. ஆனால் அன்று அதற்கான சூழ்நிலை அமையவில்லை. ரஜினி இமாலய வெற்றிகள் பெற்று உலகமே வியக்கும் அளவுக்கு சூப்பர் ஸ்டார் பதவி பெற்று ரசிகர்களின் பேராதரவோடு திரையுலகில் பவனி வந்து கொண்டிருந்ததால் அவரை வைத்து ஒரு பிரம்மாண்டப் படம் தயாரிக்க ஏற்ற கதையும் அமையவில்லை.

பேட்டி

பேட்டி

இந்த காலகட்டத்தில் தான் ரஜினி இனிமேல் நான் 3 வருடங்களுக்கு ஒரு படம் நடிக்கப் போவதாக ஒரு தீர்மானத்தை அறிவித்தார். அப்போது ஒரு தமிழ் வார இதழுக்கு நான் அளித்த பேட்டியில் இது ஒரு தவறான முடிவு, அப்படி படம் நடிக்காமல் இருப்பது ரஜினியை நேசிக்கும் ரசிகர்களுக்கு ஏமாற்றமும், மன வேதனையையும் அளிக்கும்.

ஆண்டுக்கு ஒரு படம்

ஆண்டுக்கு ஒரு படம்

ஆட்டோ டிரைவர்கள், சைக்கிள் ரிக்‌ஷா ஓட்டுபவர்கள், ஏழை, பணக்காரர்கள் என்று அனைத்து தரப்பு ரசிகர்களும் ஒரு ரஜினி படத்துக்காக ஏங்கிக் கொண்டு இருப்பவர்கள். அவர்கள் உண்டியலில் பணம் சேமித்து வைத்து ரஜினி படம் வெளியாகும் திருநாளைக் கொண்டாடக் காத்திருப்பவர்கள். எம்.ஜி.ஆருக்குப் பிறகு பாமரர் முதல் பண்டிதர், ஏழை முதல் பணக்காரர் வரை அனைத்து ரசிகர்களின் உள்ளத்திலும் குடியிருப்பவர் ரஜினி. அவரது படத்தை ஆவலுடன் காத்திருக்கும் ரசிகர்களுக்கு இது மன வேதனையையும், ஏமாற்றமும் அளிக்கும் என்றும் அதனால் தொடர்ச்சியாக வருடத்தில் ஒருபடம் நடித்து வெளிவர வேண்டும் என்று எண்ணத்தில் தான் அந்தப் பேட்டியில் நான் குறிப்பிட்டிருந்தேன்.

ஏன் இப்படிச் சொன்னார்?

ஏன் இப்படிச் சொன்னார்?

இதை அவர் வேறு விதமாகக் கருதி (குஞ்சுமோன் ஏன் இப்படிச் சொன்னார்) என்று பிரபல தயாரிப்பாளர் ஜி.வி சார் அவர்களிடம் வருத்தப்பட்டதாக கேள்விப் பட்டேன். அதிலிருந்து ரஜினியும் என்னிடம் பேசுவதில்லை. என்னுடைய அந்தப் பேட்டியை தவறாகப் புரிந்து கொண்ட காரணத்தால் எங்களது நட்பில் விரிசல் ஏற்பட்டது. ஆனால் என் மீது உள்ள அவரது வருத்தத்தையும் நான் அன்புடன் நேசித்துக் கொண்டிருந்தேன். நான் சொன்னதை அவர் தவறாக புரிந்து கொண்டாலும் அன்று நான் என்ன நினைத்து ரஜினி தொடர்ச்சியாக படங்களில் நடிக்க வேண்டும், இடைவெளி விடக்கூடாது என்று கருத்து தெரிவித்தேனோ அது இன்று நிஜமாகி இருக்கிறது என்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன்.

அடுத்து ஷங்கர் படம்

அடுத்து ஷங்கர் படம்

கோச்சடையானைத் தொடர்ந்து ரஜினி லிங்காவில் நடிக்கிறார். ஒரு புத்துணர்ச்சியும், பழைய வேகமும் அவரிடம் தெரிகிறது. லிங்காவைத் தொடர்ந்து எனது பிரம்மாண்டப் படமான 'ஜென்டின்மேன்' படத்தை இயக்கி இயக்குனராக அறிமுகமாகி இன்று பிரம்மாண்ட இயக்குனராக வலம் வரும் தம்பி ஷங்கரின் படத்தில் நடிக்க இருப்பதாகக் கேள்விப்பட்டு என் உள்ளம் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறது. மேலும் மேலும் அவர் இது மாதிரி நல்ல கதையம்சம் கொண்ட நல்ல படங்களை ரசிகர்களுக்கு அளித்து 100 வயதிலும் அவர் வெற்றி நாயகனாக நடித்துக் கொண்டே இருக்க வேண்டும் என்பது எனது ஆசையும்...! பிரார்த்தனையும்..!

அன்புடன் ரசிகன்,

'ஜென்டில்மேன்'

கே.டி.குஞ்சுமோன்

-இவ்வாறு அதில் குஞ்சுமோன் தெரிவித்துள்ளார்.

Read more about: rajini ரஜினி
English summary
Recently producer KT Kunjumon wrote a letter about his old friendship with Superstar Rajinikanth.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Filmibeat sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Filmibeat website. However, you can change your cookie settings at any time. Learn more