twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    இந்த கொரோனாவுல.. மாநாடு படத்துக்கு எப்படி கூட்டத்த கூட்டப் போறேனோ.. இது வெங்கட் பிரபு புலம்பல்!

    |

    சென்னை: 'மாநாடு'ன்னு டைட்டில் வச்சிட்டு, இந்த கொரோனா காலத்துல எப்படி கூட்டத்த கூட்டப் போறேனோன்னு இயக்குநர் வெங்கட் பிரபு சமீபத்தில் புலம்பி உள்ளார்.

    Recommended Video

    Simbhu, VJ Ramya, Rhema Ashok Lock Down Birthday celebration

    போன வருஷம் ஆரம்பிச்ச அந்த படத்துக்கு, ஹீரோ சிம்புவாலயே ஏகப்பட்ட பிரச்சனை வந்து ட்ராப் ஆனது.

    மறுபடியும் நான் திரும்பி வந்துட்டேன்னு அவர் சொன்ன நேரத்துல கொரோனா வந்து இப்போ டார்ச்சர் பண்ணுது.

    யூடியூப் டாப் 100 பாடல்களில்.. சூரரைப் போற்று யூடியூப் டாப் 100 பாடல்களில்.. சூரரைப் போற்று "காட்டுப் பயலே" பாட்டுக்கு கிடைத்த சூப்பரான இடம்!

    வெங்கட் பிரபுவின் அரசியல்

    வெங்கட் பிரபுவின் அரசியல்

    வெங்கட் பிரபு கேம், வெங்கட் பிரபு ஹாலிடே, வெங்கட் பிரபு ட்ரீட் என சென்னை 28, கோவா, சரோஜா, மங்காத்தா, பிரியாணி என இளைஞர்களை கவரும் விதமாக பல படங்களில் இயக்கி உள்ள இயக்குநர் வெங்கட் பிரபு, நடிகர் சிம்புவை வைத்து அரசியல் விளையாட்டு நடத்த மாநாடு என்ற டைட்டிலில் படத்தை ஆரம்பித்தார்.

    பிரச்சனைக்கு மேல் பிரச்சனை

    பிரச்சனைக்கு மேல் பிரச்சனை

    தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பில் ‘மாநாடு' என்ற டைட்டிலில் கடந்த ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த படம், நடிகர் சிம்பு சரியாக ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வருவதில்லை என்ற பிரச்சனைகளால் டிராப் ஆகும் நிலைமைக்கு போனது. பின்னர் நடத்தப்பட்ட சமரச பேச்சுவார்த்தைகளுக்குப் பின்னர், கடந்த பிப்ரவரி மாதம் பூஜைப் போட்டு தொடங்கப்பட்ட இந்த படம் கொரோனா காரணமாக மீண்டும் கிடப்பில் கிடக்கிறது.

    ஷூட்டிங் தொடங்கினாலும்

    ஷூட்டிங் தொடங்கினாலும்

    கொரோனாவுக்குப் பின்னர் ஷூட்டிங் தொடங்கினாலும், கொஞ்ச ஆட்களையே வைத்து பாதுகாப்பான முறையில் தான் ஷூட்டிங் நடத்தவே அனுமதி கிடைக்கும். இந்நிலையில், மாநாடு படத்தை கூட்டம் கூட்டாமல், பெரிய மேடைகளையும், செட்களையும் அமைக்காமல் எப்படி தான் நடத்தப் போகிறேன் என்ற கவலையில் சமீபத்தில் ரசிகர்களுடன் கலந்துரையாடிய போது இயக்குநர் வெங்கட் பிரபு புலம்பி உள்ளார்.

    பெரிய லிஸ்ட்

    பெரிய லிஸ்ட்

    மாஸ்டர் படத்தை போல சிம்புவின் மாநாடு படத்தில் நடிக்கப் போகும் நடிகர்களின் மிகப்பெரிய லிஸ்டை கடந்த பிப்ரவரி மாதம் படக்குழு வெளியிட்டு இருந்தது. பாரதி ராஜா, பாரதி ராஜா மகன் மனோஜ், எஸ்.ஜே. சூர்யா, நாயகியாக கல்யாணி பிரியதர்ஷன், எஸ்.ஏ. சந்திரசேகர், கருணாகரன், அரவிந்த் ஆகாஷ், மற்றும் ஆல் டைம் ஃபேவரைட் பாசமான தம்பி பிரேம்ஜி அமரன் என இத்தனை பேரையும் வைத்து எப்படித் தான் மாநாடு படத்தை இயக்கப் போகிறாரோ வெங்கட் பிரபு.

    பிரம்மாண்ட படங்களுக்கு

    பிரம்மாண்ட படங்களுக்கு

    மாநாடு படத்தை இயக்கும் வெங்கட் பிரபுவுக்கு மட்டுமல்ல, பொன்னியின் செல்வன், இந்தியன் 2 போன்ற மல்டி ஸ்டார்கள் நடிக்கும் படங்களை இயக்கும் இயக்குநர்களுக்கும் ஹாலிவுட் முதல் கோலிவுட் வரை உருவாகவுள்ள பிரம்மாண்ட படங்களுக்கும் இந்த பிரச்சனை உருவாகும் என தெரிகிறது. ஆயிரம், 2000 பேர்களை வைத்து சண்டைக் காட்சிகளை நடத்தியவர்கள் இனிமேல், சிஜியின் உதவியை பெரிதும் நாட வேண்டியது வரும் என்றே தெரிகிறது.

    English summary
    Venkat Prabhu got really upset, after the lockdown also how Maanadu shooting will happen, because it must contain lot of people for making big sets, and crowd of actors in this project.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X