'தலைவா பட்டர் மசாலா' தயாரிப்பது எப்படி? செஃப் விஜய் விளக்கம்- ஃபேஸ்புக்கில் கலகல!
சென்னை: நடிகர் விஜய்-ன் தலைவா படம் வெளியானதும் போதும்.. இப்படியெல்லாம் கூட விமர்சனம் எழுத முடியுமா? என்ற ரேஞ்சில் சவால்களும் சாடல்களும் ரெக்கை கட்டி பறக்கின்றன.
ஃபேஸ்புக்கில் மாய்ந்து மாய்ந்து விமர்சனங்கள் விழுந்து கொண்டே இருக்கின்றன. அப்படி விழுந்த விமர்சனங்களில் ஒன்றுதான் 'தலைவா பட்டர் மசலா' தயாரிப்பு முறை.. நீங்களும் அதை படித்து பாருங்கள்..
https://www.facebook.com/yahooragav என்ற ஃபேஸ்புக் பக்கத்தில் இடம்பெற்றிருக்கும் தலைவா பட்டர் மசலா தயாரிப்பு முறை இதுதான்!

தலைவா பட்டர் மசால் - செஃப் .விஜய்
நாயகன் - ஒரு கிலோ
சர்க்கார் - அரை கிலோ
பாம்பே -1 துண்டு
தேவர்மகன் - 6 பல்
இந்திரா - ஒரு தேக்கரண்டி
பில்லா - அரை கப்
புதிய பறவை - கோபால் கோபால் மிக்ஸ் ஒரு டீஸ்பூன்
பொல்லாதவன் - தேவையான அளவு
கதாபாத்திரத்தில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் இந்திரா, பம்பாய் சேர்த்து வதக்கவும்.
இத்துடன் நைசாக அரைத்து வைத்திருக்கும் தேவர்மகன் சேர்த்து பொன்னிறமாக வரும் வரை வதக்கவும் .
பொன்னிறமாக வரும் போது கோபால் கோபால் மிக்ஸ் சிறிது சேர்த்து மிதமான சூட்டில் வேகவைக்கவும்.
நன்றாக வதங்கியதும் சுத்தபடுத்தி வைத்திருக்கும் நாயகன் துண்டுகளை சேர்த்து பிரட்டி மூடி வேக விடவும்.
நாயகன் வெந்ததும் அரைத்த சர்க்கார் சேர்த்து கொதிக்க விடவும்.
நன்றாக கொதித்ததும் பொல்லாதவன் தூவி இறக்கவும். தலைவா ரெடி.


Click it and Unblock the Notifications











