கேங்கர்ஸ் வடிவேலுவுக்கு இத்தனை கெட்டப்பா.. ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடித்த சுந்தர் சி
சென்னை: சுந்தர் சி இயக்கத்தில் உருவாகியுள்ள கேங்கர்ஸ் திரைப்படம் இன்று திரையரங்கில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில், இப்படத்தின் முதல் காட்சியை பார்த்த ரசிகர்கள் மணி ஹெய்ஸ்ட் மற்றும் தெலுங்கு படத்தில் உள்ள காட்சியை அப்படியே காபி அடித்து எடுத்திருப்பதாக கருத்து தெரிவித்துள்ளனர்.மேலும், வடிவேலுக்கு கேங்கர்ஸ் படத்தில் இருக்கும் கெட்டப்பை பார்த்து சுந்தர் சி மிரட்டி விட்டதாகவும் தெரிவிக்கின்றனர்.
சுந்தர் சி இயக்கி நடித்திருக்கும் கேங்கர்ஸ் படத்தில் வடிவேலு, கேத்ரின் தெரசா, வாணி போஜன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இப்படம் இன்று வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில், இப்படத்தில் வடிவேலு போட்டிருக்கும் கெட்டப்புகள் பெரிய அளவில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறதாம். குறிப்பாக டிரைலரில் இடம்பிடித்த சார்லஸ் கதாப்பாத்திரம் சிரிப்பு வெடியாக இருந்தன. கழுத்துக்கு கீழே யோகா பன்றேன் என்ற வசனமும் வடிவேலு கம்பேக் கொடுத்துவிட்டார் என்றும் பேச தொடங்கினர். இந்நிலையில், கேங்கர்ஸ் படத்தில் வடிவேலுவிற்கு மொத்தம் கெட்டப்புகள் எப்படியெல்லாம் சிரிக்க வைத்துள்ளார் என்பதை ரசிகர்களே தெரிவித்துள்ளார்கள்.

வடிவேலுவிற்கு எத்தனை கெட்டப்?: சார்லஸ் கதாப்பாத்திரம் ஒரு துருப்பு சீட்டு போலத்தான் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. ஆனால், அதையும் தாண்டி வடிவேலு சார் இப்படத்தில் ஒரு விஷயம் செய்திருக்கிறார் என்றும் ரசிகர்கள் தெரவித்துள்ளனர். கேங்கர்ஸ் படத்தில் சார்லஸ், போலீஸ் கான்ஸ்டபிள், வயதான பாட்டி, அம்மன் காளி வேடத்தில் வந்து அமர்க்களப்படுத்துவது என 5 கெட்டப்புகளில் ரசிகர்களை குஷிப்படுத்தியிருப்பதாகவும் தெரிவித்துள்ளனர். சார்பட்டா பரம்பரை படத்தில் வரும் வசனத்தை போன்று இது வடிவேலு காலம் யாரும் பக்கத்துல வரமுடியாது என்றும் தெரிவிக்கின்றனர். பழைய வடிவேலை ரீ கிரியேட் செய்யாமுடியாவிட்டாலும், இப்படத்தில் வடிவேலு கம்பேக் கொடுத்துள்ளார் என்பதை ரசிகர்களே உறுதிப்படுத்திவிட்டனர். மேலும், வாய்ஸ் மாடுலேஷனில் பின்னி பெடல் எடுத்திருக்கிறார். ஹீரோவுக்கு இணையாக மாறு வேடத்தில் சென்றது வடிவேலுதான் என்றும் புகழ்ந்து பேச தொடங்கிவிட்டனர்.
ஹாலிவுட் படங்களின் காபி: கேங்கர்ஸ் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில் படத்தின் சில சீன்கள் அப்படியே தெலுங்கு படத்தை பார்ப்பது போன்றும், பின்னர், மணி ஹெய்ஸ்ட், பாஸ்ட் அண்ட் பியூரியஸ், போன்ற பல படங்களின் எஃபெக்ட் இருப்பதாகவும் கிசுகிசுக்கப்படுகிறது. குறிப்பாக இந்த சீன் மட்டும் அல்ல ஒரு பிளாஸ்பேக் காட்சிகளையும் தெலுங்கு படத்தில் இருந்தே சுந்தர் சி உருவியிருப்பதாகவும் நெட்டிசன்கள் கருத்து தெரிவித்துள்ளனர். கடந்த 2022ஆம் ஆண்டு தெலுங்கு நடிகர் ரவிதேஜா நடிப்பில் வெளியான கில்லாடி படத்தில் ஒரு பிளாஸ்பேக் காட்சிகள் வரும். ஜெயிலில் இருக்கும் ரவிதேஜா அங்கிருந்து தப்பி செல்வதற்காக ஹீரோயின் மீனாட்சி சவுத்ரியிடம் ஒரு பொய்யான ப்ளாஷ்பேக் ஒன்றை கூறுவார். அதில், ரவிதேஜாவின் மனைவி மற்றும் அவரது குடும்பத்தினரை வில்லன்கள் பணத்திற்காக கொலை செய்வார்கள். வில்லன்களின் சதி வலையில் சிக்கிய ரவிதேஜா ஜெயிலுக்கு செல்வது போன்று அமைக்கப்பட்டிருக்கும். ஆனால், போலீஸாக வரும் அர்ஜூன் விசாரணை நடத்தும்போது ரவிதேஜா ஒரு இன்டர்நேஷனல் மாஃபியா என்பதும் அவர் பணத்தை கொள்ளையடிக்கும் கூட்டத்தின் தலைவன் என்பது தெரியவரும். மேலும், கில்லாடி படத்தில் இதுதான் இன்டர்வல் சீனாகவும், மிகப்பெரிய ட்விஸ்ட் உள்ள காட்சியாக இருக்கும். இந்நிலையில், அந்த படத்தின் ஒட்டுமொத்த காட்சியை கொஞ்சம் உல்டா வேலை செய்து சுந்தர் சி கேங்கர்ஸ் படத்தை எடுத்திருப்பதாகவும் நெட்டிசன்கள் தெரிவிக்கின்றனர்.
பழிவாங்கிய சுந்தர் சி: முன்னதாக சுந்தர் சி அளித்த பேட்டியில் என் படத்தை எனக்கே தெரியாமல் தெலுங்கு திரையுலகினர் காபி அடித்துவிட்டனர். அவர்களை பழிவாங்க ஒரு படம் எடுத்தேன். ஆனால், அவர்களை தாண்டி காபி அடிக்க முடியாது என்பதை நிரூபித்துவிட்டனர் என தெரிவித்திருந்தார். அந்த வகையில், கேங்கர்ஸ் படத்தின் மூலம் தெலுங்கு திரையுலகை சுந்தர் சி பழிவாங்கிவிட்டார் என்றும் நெட்டிசன்கள் தெரிவிக்கின்றனர்.


Click it and Unblock the Notifications











