ஓயாத சர்ச்சையில் ஃபேமிலிமேன் 2...சமந்தா வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா ?

சென்னை : சமீபத்தில் ஓடிடி.,யில் வெளியிடப்பட்ட ஃபேமிலிமேன் 2 என்ற வெப்சீரிஸ் ஒரு பக்கம் கடும் எதிர்ப்பையும், மறு பக்கம் பாராட்டையும் பெற்று வருகிறது. பெரும்பாலானவர்கள் சமந்தாவின் நடிப்பை பாராட்டி வருகின்றனர்.

Recommended Video

Family Man 2 -காக Samantha வாங்கிய சம்பளம் | Bollywoodல் கணவருக்கும் சிபாரிசு

மனோஜ் பாஜ்பாய், சமந்தா, பிரியாமணி உள்ளிட்டோர் நடித்துள்ள தி ஃபேமிலிமேன் 2, தமிழர்களின் உணர்வுகளை காயப்படுத்துவதாக உள்ளதாக தமிழகத்தில் கடும் எதிர்ப்பை பெற்றுள்ளது. இதனால் அமேசான் நிறுவனத்தை எதிர்த்து போராட்டமும் நடத்தப்பட்டு வருகிறது.

பாராட்டை பெற்ற சமந்தாவின் நடிப்பு

பாராட்டை பெற்ற சமந்தாவின் நடிப்பு

சமந்தா நடித்துள்ள ராஜி கேரக்டர் தான் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. சமந்தாவின் நடிப்பு, ஆக்ஷன் காட்சிகள் பெரிய அளவில் பாராட்டை பெற்றுள்ளன. இந்த வெப் சீரிஸ் எதிர்பார்த்ததை விட நல்ல வரவேற்பை பெற்றுள்ளதால், இதற்காக சமந்தா பெற்ற சம்பளம் பற்றிய ரகசியத்தை படக்குழு வெளியிட்டுள்ளது.

3 மடங்கு சம்பளம் வாங்கிய சமந்தா

3 மடங்கு சம்பளம் வாங்கிய சமந்தா

இந்த வெப் சீரியசிற்காக வழக்கமாக பெறும் சம்பளத்தை விட 3 மடங்கு அதிகம் பெற்றுள்ளாராம் சமந்தா. வழக்கமாக தனது படங்களுக்கு ரூ.1 கோடி முதல் ரூ.1.5 கோடி வரை தான் சம்பளம் வாங்குவாராம். தமிழ், தெலுங்கு என இரு மொழி படங்களுக்கும் இந்த தொகையை தான் சம்பளமாக பெற்று வருகிறார்.

வெப் சீரிசிற்கு இவ்வளவு சம்பளமா

வெப் சீரிசிற்கு இவ்வளவு சம்பளமா

ஆனால் தி ஃபேமிலிமேன் 2 வெப் சீரிசிற்காக ரூ.3 முதல் 4 கோடிகளை சம்பளமாக வாங்கி உள்ளாராம். இந்த தகவல்கள் தான் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. சமந்தாவை போன்ற மற்ற நடிகர், நடிகைகளும் இந்த வெப் சீரிசிற்காக பெற்ற சம்பள தொகையும் வெளியிடப்பட்டுள்ளது.

மலைக்க வைத்த மனோஜின் சம்பள தொகை

மலைக்க வைத்த மனோஜின் சம்பள தொகை

இதில் ஹீரோவாக நடித்த மனோஜ் பாஜ்பாய் ரூ.10 கோடியை சம்பளமாக பெற்றுள்ளார். பிரியாமணிக்கு ரூ.80 லட்சம் சம்பளமாக கொடுக்கப்பட்டுள்ளது. இவர்களின் சம்பள தொகையை கேட்டு பலரும் அதிர்ச்சி தெரிவித்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X