மணிரத்னம், அரவிந்த் சாமி, மாதவன், கௌதம்: இவர்களுக்குள் என்ன சம்பந்தம்?

By Siva

சென்னை: கடந்த 22 ஆண்டுகளில் இயக்குனர் மணிரத்னம் தன் படங்களில் 3 ஹீரோக்களை தான் அறிமுகம் செய்து வைத்துள்ளார்.

மணிரத்னம் 1983ம் ஆண்டு பல்லவி அனுபல்லவி என்ற படம் மூலம் இயக்குனர் ஆனார். மோகன், ரேவதி, கார்த்திக் நடிப்பில் வந்த மௌன ராகம் மணிரத்னத்தை திரும்பிப் பார்க்க வைத்தது. அவர் உலக நாயகன் கமல் ஹாசனை வைத்து எடுத்த நாயகன் படம் அவருக்கு பெரும் புகழ் வாங்கிக் கொடுத்தது.

நாயகன் படம் ரிலீஸாகி 25 ஆண்டுகள் ஆகியும் இன்றும் பேசப்படுகிறது, அவர் சிறுவர், சிறுமியரை வைத்து எடுத்த அஞ்சலி படத்தை பார்க்கும்போதெல்லாம் இந்த மணியால் எப்படி இத்தனை வாண்டுகளை நடிக்க வைக்க முடிந்தது, அதிலும் குறிப்பாக பேபி ஷாமிலியை என்று வியக்க வைத்தார். இப்படி பெயர் எடுத்த மணிரத்னத்தின் படங்கள் அண்மை காலமாக ஓடுவதில்லை.

மணிரத்னம் 1991ம் ஆண்டு முதல் இன்றைய தேதி வரை எத்தனை ஹீரோக்களை தனது இயக்த்தில் அறிமுகப்படுத்தியுள்ளார் என்பதை பார்ப்போம்.

1991ல் அறிமுகமான அரவிந்த் சாமி

1991ல் அறிமுகமான அரவிந்த் சாமி

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், மம்மூட்டி நடித்த தளபதி படத்தில் அறிமுகமானவர் அரவிந்த் சாமி. அந்த படத்தில் அவரது கதாபாத்திரம் ஒன்றும் பெரியது அல்ல. ஆனால் அதன் பிறகு மணிரத்னம் அரவிந்த் சாமியை வைத்து எடுத்த ரோஜா, பாம்பே படங்கள் சூப்பர் ஹிட் ஆகியது. அரவிந்த் சாமி அறிமுகமான முதல் படமே சூப்பர் ஹிட். ரொமான்ட்டிக் ஹீரோவான அவருக்கு ஏகப்பட்ட ரசிகைகள்.

2000ல் அறிமுகமான மணியின் மனம்கவர்ந்த மாதவன்

2000ல் அறிமுகமான மணியின் மனம்கவர்ந்த மாதவன்

அரவிந்த் சாமிக்கு அடுத்தபடியாக மணிரத்னம் அறிமுகம் செய்து வைத்த ஹீரோ மாதவன் தான். மாதவன், ஷாலினியை வைத்து மணி இயக்கிய அலைபாயுதே சூப்பர் ஹிட்டானது. மாதவனுக்கு 40 வயதாகியும் இன்றும் அவருக்கு ஏகப்பட்ட ரசிகைகள்.

2013ல் கௌதம் கார்த்திக் அறிமுகம்

2013ல் கௌதம் கார்த்திக் அறிமுகம்

13 ஆண்டுகள் கழித்து மணிரத்னம் தனது படத்தில் அறிமுகப்படுத்திய ஹீரோ கார்த்திக்கின் மகன் கௌதம். ஆனால் கௌதம் அறிமுகமான கடல் படம் ப்ளாப்.

அரவிந்த்சாமி, மாதவன் போன்று ஜெயிப்பாரா கௌதம்?

அரவிந்த்சாமி, மாதவன் போன்று ஜெயிப்பாரா கௌதம்?

அரவிந்த்சாமி, மாதவன் அறிமுகமான படங்கள் சூப்பர் ஹிட். அதன் பிறகும் அவர்கள் பல வெற்றிப் படங்களில் நடித்தனர். ஆனால் கௌதமுக்கு முதல் படமே ஊத்திக் கொண்டது. இதை தாண்டி வந்து ஜெயித்துக் காட்டுவாரா கௌதம்?

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X