பிகில் மிரட்டல் அப்டேட்.. விஜய் பந்தாடப் போவது எத்தனை வில்லன்களை தெரியுமா? ‘அக்கா’ சொன்ன ரகசியம்!
Recommended Video
சென்னை: பிகில் படத்தில் விஜய்க்கு மொத்தம் எத்தனை வில்லன்கள் என்பது குறித்த புதிய தகவல் தெரிய வந்துள்ளது.
பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே வரும் 25ம் தேதி வெளியாக உள்ளது விஜய் - அட்லீ வெற்றிக்கூட்டணியில் மூன்றாவதாக உருவாகியிருக்கும் பிகில் திரைப்படம். தீபாவளிக்கு இரு தினங்களுக்கு முன்பே படம் ரிலீசாவதால் விஜய் ரசிகர்கள் கொண்டாட்டத்திற்கு தயாராகி வருகின்றனர்.
சுமார் ரூ.180 கோடியில் உருவாகியுள்ள பிகில் படத்தை தயாரித்திருப்பது ஏஜிஎஸ் நிறுவனம். இதன் கிரியேட்டிவ் புரொடியூசரான அர்ச்சனா கல்பாதி தான் பிகில் படத்தை பற்றிய ஒவ்வொரு அப்டேட்களையும் வெளியிட்டு வருகிறார். இதனால் விஜய் ரசிகர்கள் அவரை அக்கா என பாசமாக அழைக்க தொடங்கிவிட்டனர்.

அன்பு அக்காவின் பிறந்தநாள்
இந்நிலையில் அர்ச்சனா கல்பாதி தனது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். இதையொட்டி விஜய் ரசிகர்கள் அக்கா (#Akka) என ஹேஷ்டேக் போட்டு அர்ச்சனாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறி வருகிறார்கள். இதனால் செம ஹேப்பியாக இருக்கிறார் அர்ச்சனா.

அர்ச்சனாவின் பேட்டி
இதற்கிடையே பிகில் படம் குறித்து அதில் பணியாற்றியவர்கள் ஊடகங்களுக்கு பேட்டி அளித்து வருகின்றனர். அதன்படி, அர்ச்சனா கல்பாதியும் படத்தை விளம்பரப்படுத்தும் வகையில் தனது பேட்டிகளில் பல சுவாரஸ்யத் தகவல்களை வெளிப்படுத்தி வருகிறார். அதன்படி, வார இதழ் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் படத்தில் விஜய்க்கு எத்தனை வில்லன்கள் எனும் ரகசியத்தை அவர் போட்டு உடைத்துள்ளார். மேலும் பிகில் படம் நல்லா வந்ததுல விஜய் செம ஹேப்பியாக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

பெரிய பட்ஜெட்
இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது, "பிகில் ஒரு பக்கா ஸ்போர்ட்ஸ் ஆக்ஷன் மூவி. ரூ.180 கோடி பட்ஜெட்டில் மிக பிரமாண்டமாக இப்படத்தை தயாரிச்சிருக்கோம். ஃபேமிலி ஆடியன்சையும், யங்ஸ்டர்ஸ்சையும் ஒருசேர இந்த படம் ஈர்க்கும்.

பிகில் பறக்கும்
விஜய் ரசிகர்களுக்கு நிச்சயம் பிகில் செம ட்ரீட்டா இருக்கும். ஒவ்வொரு பிரேமிலும் விஜய் சாருக்கு விசில் பறக்கும். அட்லீ அப்படி ஒரு சரவெடியை உருவாக்கியிருக்கிறார். ஒவ்வொரு பிரேமிலும் அவருடைய உழைப்பு தெரியும்.

ஃபாரின் கோரியோகிராப்பர்ஸ்
மலேசியாவில் சில போர்ஷன்ஸ் ஷூட் பண்ணிருக்கோம். படத்துக்கு புட்பால் தெரிஞ்ச கோரியோகிராப்பர்ஸ் தேவைபட்டாங்க. ஏமி மெக் டேனியல், ஜஸ்டின் ஸ்கின்னர்னு ரெண்டு பேர் இதுல மிரட்டியிருக்காங்க. பாரின்ல இருந்து நிறைய கேமரா எக்யூப்மெண்ட்ஸ் இறக்குமதி பண்ணினோம்.

க்ளைமாக்ஸ் காட்சி
க்ளைமாக்ஸ் காட்சியை மிகப் பெரிய புட்பால் மைதானத்தில் ஷூட் செய்ய வேண்டியிருந்தது. இந்தியா முழுவதும் அலைஞ்சு பார்த்தோம். ஆனா எதுவும் செட்டாகல. கடைசியில செட் போட்டு ஷூட் செய்தோம். முதல்ல ரூ.125 தான் பட்ஜெட் போட்டோம். ஆனால் அது ரூ.55 கோடி அதிகமாகிடுச்சு.

மூன்று வில்லன்கள்
படத்துல ஆறு நிஜ புட்பால் பிளேயர்கள், ஆறு நடிகர்கள் நடிச்சிருக்காங்க. கதிர், விவேக், ஆனந்தராஜ், டேனியல் பாலாஜி உள்பட நிறைய ஆர்டிஸ்ட் இதுல இருக்காங்க. படத்துல மொத்தம் மூன்று வில்லன்கள். அதுல ஜாக்கி ஷெராஃப்பும் ஒருவர்.

விஜய் செம ஹேப்பி
பிகில் நல்லா வந்ததுல விஜய் சார் செம ஹேப்பி. படப்பிடிப்பின் கடைசி நாள் எங்க எல்லோருக்கும் கோல்ட் காயின் கொடுத்தார். ஒரு புட்பாலில் அவரோட ஆட்டோகிராஃப் வாங்கி வெச்சுருக்கேன். படத்தின் ரிலீசில் இதுவரை எந்த பிரச்சினையும் இல்லை. நிச்சயமாக திட்டமிட்டப்படி ரிலீசாகும்", என அர்ச்சனா கல்பாதி கூறியுள்ளார்.

புதிய டிரெண்ட்
பிகில் படத்தில் விஜய் இரண்டு கதாபாத்திரங்களில் நடிப்பது ஏற்கனவே நாம் அறிந்தது தான். அதன்படி பார்க்கையில் அப்பாவுக்கு ஒரு வில்லனும், மகனுக்கு இரண்டு வில்லன்களும் இருப்பார்கள் எனத் தெரிகிறது. சமீபகாலமாக தமிழ் சினிமாவில் கதாநாயகிகளைப் போலவே ஒரே படத்தில் வில்லன்களும் இரண்டு மூன்று பேர் வந்து மிரட்டுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











