போதை பொருள் வழக்கில் கைதான நடிகர் ஸ்ரீகாந்த்... எத்தனை ஆண்டு சிறை தண்டனை கிடைக்கும்?

சென்னை: ரோஜாக்கூட்டம் திரைப்படத்தில் ஹீரோவாக அறிமுகமான நடிகர் ஸ்ரீகாந்த், முதல் படத்திலேயே தமிழ் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். அந்த படத்தை தொடர்ந்து, பார்த்திபன் கனவு, கனா கண்டேன், ஏப்ரல் மாதத்தில், பூ போன்ற படங்களில் நடித்துள்ளார். தற்போது, ஸ்ரீகாந்த் போதை பொருள் பயன்படுத்தியது ரத்த மாதிரி சோதனையில் தெரியவந்ததை அடுத்து, போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் மதுபாரில் நடந்த சண்டையில், முன்னாள் அதிமுக பிரமுகரான பிரசாத்தை போலீசார் கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பிரசாத்திற்கு, பல்வேறு வழக்குகளில் தொடர்பு இருப்பது தெரியவந்ததால், அவரின் செல்போனை வாங்கி ஆய்வு செய்த போது, பிரசாத் போதைப்பொருள் சப்ளை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து, போலீசார் அவரிடம் துருவி துருவி நடத்திய விசாரணையில் பிரதீப்பிடம் இருந்து போதை பொருளை வாங்கியதாக கூறியதை அடுத்து, இரண்டு தினங்களுக்கு முன் போலீசார் பிரதீப்பை கைது செய்தனர்.

Srikanth drug case
Photo Credit:

ஸ்ரீகாந்திற்கு தொடர்பு: பிரதீப்பிடம் நடத்திய விசாரணையில், பல அதிர்ச்சியான தகவல்கள் வெளியானது. அதாவது, முன்னாள் அதிமுக நிர்வாகியான பிரசாத், நடிகர் ஸ்ரீகாந்தை வைத்து தீக்கரை என்ற படத்தை தயாரித்த போது, நடிகர் ஸ்ரீகாந்துக்கு போதைப் பொருள் தேவைப்பட்டதால், தன்னிடம் இருந்து போதை பொருளை வாங்கி சென்றதாக அண்மையில் கைது செய்யப்பட்ட பிரதீப் கூறினார். நடிகர் ஸ்ரீகாந்த் தன்னிடம் இருந்து பலமுறை போதை பொருளை வாங்கி பயன்படுத்தி உள்ளார். ஒருமுறை வாங்கியது மட்டுமல்லாமாலும் பலமுறை என்னிடம் இருந்து போதை பொருளை வாங்கி பயன்படுத்தினார். சில நேரம், தன்னிடம் போதைப்பொருள் இல்லை என்று கூறிய போதும் தனக்கு மிகவும் அவசரமாக போதை பொருள் தேவை என கூறியதால், நான் பெங்களூருக்கு சென்று அதிக விலை கொடுத்து ஸ்ரீகாந்திற்கு போதை பொருளை வாங்கி சப்ளை செய்து இருக்கிறேன். இதுவரை 40 முறை பிரசாத்திற்கும் நடிகர் ஸ்ரீகாந்திற்கும் கொடுத்து இருக்கிறேன். அவர்கள், அதை சினிமா பிரபலங்கள் கலந்து கொண்ட பார்ட்டிகளுக்கும், கிளப்புக்களுக்கும் கொடுத்ததாக பிரதீப் தனது வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.

அதிக விலைக்கு விற்றாரா: தன்னிடம் ஒரு கிராம் போதை பொருளை 12 ஆயிரம் ரூபாய் கொடுத்து வாங்கிவிட்டு, அதிக தொகைக்கு , மாற்ற நண்பர்களுக்கு கொடுத்தாரா... அல்லது நண்பர்களுக்காக வாங்கி கொடுத்தாரா என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை தொடங்கினர். இதைத்தொடர்ந்து, நேற்று காலை 8 மணியில் இருந்து ரகசிய இடத்தில் ஸ்ரீகாந்த்தை வைத்து விசாரணை நடத்தினார். அப்பொழுது அவர், தான் போதை பொருளை பயன்படுத்தவில்லை என்று கூறியதால் அவருக்கு சென்னை ராஜூவ் காந்தி மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. அதில், நடிகர் ஸ்ரீகாந்த் போதை பொருளை உட்கொண்டது தெரியவந்தது அடுத்த அவரை போலீசார் கைது செய்தனர்.

எத்தனை ஆண்டு சிறை: ஸ்ரீகாந்தின் வங்கி பரிவர்த்தனை, ஜீபை பரிவர்த்தனை மேலும் நண்பர்கள் யார் யாருக்கு இவர் போதை பொருளை சப்ளை செய்தார் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தியதில், இயக்குநர் விஷ்ணுவர்தனின் தம்பியும் நடிகருமான கிருஷ்ணாவிற்கும் இந்த விவகாரத்தில் தொடர்பிருப்பதாக தெரியவந்துள்ளது. அவரிடமும் போலீசார் விசாரணை நடத்த உள்ளனர். மேலும், நடிகர் ஸ்ரீகாந்த்தின், வீடு அலுவலகம் உள்ளிட்ட இடங்களிலும் போதைப்பொருள் எதாவது இருக்கிறதா என்பதை பார்க்க வீட்டில் சோதனை நடத்த அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். இதில், பிரதீப் முதல் குற்றவாளியாகவும், கானா நாட்டை சேர்ந்த ஜான் இரண்டாவது குற்றவாளியாகவும், நடிகர் ஸ்ரீகாந்த் மூன்றாவது நபராகவும் சேர்க்கப்பட்டுள்ளார். பொதுவாக போதைப்பொருள் வழக்கில் கைதானால், பத்து ஆண்டுகள் வரை சிறு தண்டனை கிடைக்கும் என்கிற நிலையில் நடிகர் ஸ்ரீகாந்திற்கு 10 ஆண்டு வரை சிறை தண்டனை கிடைக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X