twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    தில்லாலங்கடி செய்து லஞ்ச ஒழிப்புத்துறையில் வேலை..மீரா மிதுன் 'ஐடி கார்டு' சாயம் வெளுத்துப் போச்சு!

    சட்டப்படி பணம் செலுத்தி தான் ஊழல் ஒழிப்புக் குழுவின் தமிழக தலைவராக நடிகை மீரா மிதுன் அடையாள அட்டை வாங்கியிருக்கிறார்.

    |

    Recommended Video

    Meera Mithun Kiss:

    சென்னை: நடிகை மீரா மிதுன் ஊழல் ஒழிப்புக் குழுவின் தமிழக தலைவர் ஆனது எப்படி என்ற ரகசியம் தெரியவந்துள்ளது.

    கடந்த 2016ம் ஆண்டு மிஸ் தமிழ்நாடு சவுத் பட்டம் வென்றவர் மாடல் மீரா மிதுன். 8 தோட்டாக்கள், தானா சேர்ந்த கூட்டம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். ஆனால் அப்போது கிடைக்காத பப்ளிசிட்டி எல்லாம் பிக் பாஸ் வீட்டுக்கு சென்ற பிறகு தான் மீரா மிதுனுக்கு கிடைத்தது.

    அந்த பப்ளிசிட்டியுடன் பணமோசடி வழக்கு, மிஸ் தமிழ்நாடு சவுத் பட்டம் பறிப்பு, ஜோ மைக்கேலின் புகார் என மீராவை சுற்றி வளைத்த சர்ச்சைகள், அவரை மேலும் பிரபலமாக்கியது. ஆனால் அவரால் அந்த நெகட்டிவ் பப்ளிசிட்டியுடன் கோலிவுட்டில் காலம் தள்ள முடியவில்லை.

    பறிபோன பட வாய்ப்புகள்

    பறிபோன பட வாய்ப்புகள்

    நம்ம வீட்டு பிள்ளையில் மீரா நடித்த காட்சிகள் நீக்கப்பட்டன. அக்னி சிறகுகள் உள்பட நடிக்க ஒப்பந்தமான அனைத்து படங்களில் இருந்தும் தூக்கப்பட்டார் அவர். இதனால் வேறு வழி இல்லாமல் தமிழ்நாட்டில் இருந்து வெளியேறிய மீரா, இந்தி படங்களில் நடித்து மும்பையில் செட்டிலாகும் முயற்சியில் இறங்கி இருக்கிறார்.

    லஞ்ச ஒழிப்பு அதிகாரி

    லஞ்ச ஒழிப்பு அதிகாரி

    இந்த நிலையில் மத்திய அரசின் லஞ்ச ஓழிப்பு ஆணையத்தின் தமிழக இயக்குனராக தான் நியமிக்கப்பட்டுள்ளதாக டிவிட்டரில் அறிவித்தார் மீரா. தமிழ்செல்வி எனும் அவரது சொந்த பெயரில் வழங்கப்பட்ட அடையாள அட்டையின் புகைப்படத்தை பதிவிட்டு ஷாக் கொடுத்தார் மீரா.

    ஷாக்கான ரசிகர்கள்

    ஷாக்கான ரசிகர்கள்

    மீரா மிதுன் மீது பல மோசடி வழக்குகள் நிலுவையில் இருக்கும் போது, மத்திய அரசு பதவி அவருக்கு எப்படி கிடைத்தது என ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதிலும் மீராவின் தில்லாலங்கடி வேலை இருப்பது இப்போது தெரியவந்துள்ளது.

     பணம் கட்டினால் போதும்

    பணம் கட்டினால் போதும்

    மீரா தற்போது வாங்கியுள்ள ஊழல் ஒழிப்புக் குழுவில் யார் வேண்டுமானாலும் சேரலாமாம். சம்மந்தப்பட்ட அந்த இணையதளத்தில் தங்களுடைய பெயரை பதிவு செய்து, பணம் செலுத்தினால் அடையாள அட்டை வழங்கப்படுமாம்.

    கட்டணம் எவ்வளவு

    கட்டணம் எவ்வளவு

    ஒவ்வொரு பதவிக்கும் ஒரு தொகை செலுத்த வேண்டும் என்பது விதிமுறை. மாவட்ட வாரியான அடையாள அட்டைக்கு ரூ. 10000, மாநில வாரியான அடையாள அட்டைக்கு ரூ.15000, தேசிய அளவிலான அடையாள அட்டைக்கு ரூ.20000 கட்டணமாக செலுத்த வேண்டும் என அந்த இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

     டம்மி பதவி

    டம்மி பதவி

    ஆனால் அந்த பதவியை/அடையாள அட்டையை வைத்து ஒன்றும் செய்ய முடியாது. யாரையும் தண்டிக்கவோ, தட்டிக்கேட்கவோ அந்த பதவிக்கு அதிகாரம் கிடையாது. சும்மா அந்த அடையாள அட்டையை வைத்துக்கொண்டு பந்தா காட்டலாம். அவ்வளவு தான்.

    ஒன்றும் செய்ய முடியாது

    ஒன்றும் செய்ய முடியாது

    இந்த விவரம் எல்லாம் அந்த அடையாள அட்டையிலேயே குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், விதிகளை மீறி அதனை தவறாக பயன்படுத்தினால், அந்த பதவி திரும்பப் பெறப்படும் என்றும் அதில் தெளிவாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    செம கலாய்

    செம கலாய்

    'இனி யாரும் ஓடவும் முடியாது, ஒளியவும் முடியாது' என பிக் பாஸ் டயலாக்கை சுட்டு மீரா பதிவிட்டதெல்லாம் வெத்து சீன் என கலாய்க்கிறார்கள் நெட்டிசன்கள். தன்னை கலாய்ப்பவர்களை பயமுறுத்துவதற்காக மீரா செய்த காரியம், பூமராங் போல் அவரது பக்கமே திரும்பி இருக்கிறது. நம்ம நெட்டிசன்கள் சும்மாவே மீராவை கலாய்ப்பார்கள், இப்போது வெறும் வாய்க்கு அவல் கிடைத்தது போல் ஆகிவிட்டது. சும்மா விடுவார்களா என்ன!

    English summary
    Recently, Meera Mitun’s announcement that she had become a Director for Chennai Tamilnadu State in Anti-corruption commission ( A.C.C ) shook everyone. Now it is said that the post Meera got has no power.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X