“கேஜிஎஃப் 2“ படத்திற்காக யாஷ் வாங்கிய சம்பளம் … அபாரமான நடிப்புக்கு இது கம்மிதான் !

பெங்களுர் : கேஜிஎஃப் சேப்டர் 2 திரைப்படத்திற்காக யாஷ் வாங்கிய சம்பளம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

பிரபல கன்னட நடிகர் நடித்த கேஜிஎப் 2 திரைப்படம் உலகெங்கும் பிரமாண்டமாக வெளியாகி உள்ளது. இந்த திரைப்படத்தில், சஞ்சய் தத், பிரகாஷ் ராஜ், ரவீணா டாண்டன், ஸ்ரீநிதி ஷெட்டி உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

Recommended Video

KGF 2 First Day Second Show Audience Review | Yash | KGF 2 Public Review | Filmibeat tamil

பிரசாந்த் நீல் இயக்கியுள்ள இத்திரைப்படத்தில், தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி என பான் இந்தியா திரைப்படமாக வெளியாகி உள்ளது.

ராக்கி பாய்

ராக்கி பாய்

ஒரு நடிகரை சூப்பர் ஸ்டார் ஆக்குவது எது என்றால், ரசிகர்களின் அன்பும் ஆதரவும் தான். கன்னட நட்சத்திரம் யாஷ்யை, ராக்கி பாய் என்ற பெயர் நாடு முழுவதும் தீயாக பரவி வருகிறது. கேஜிஎஃப் சாப்டர் 2, யாஷின் ரசிகர் பட்டாளத்தை உலகம் முழுவதும் பன்மடங்காக்கி உள்ளது. கேஜிஎஃப் 2 படத்தைப்பார்த்த ரசிகர்கள் அவரை தலையில் தூக்கிவைத்து கொண்டாடி வருகின்றனர்.

கே.ஜி.எஃப் 2

கே.ஜி.எஃப் 2

கே.ஜி.எஃப் படத்தின் முதல் பாகத்தில் தங்க சுரங்கத்தை தன் வசம் வைத்திருந்த கருடனை கொலை செய்து கே.ஜி.எஃப்யை யாஷ் கைப்பற்றினார். அதன் தொடர்ச்சியாக 2ஆம் பாகம் தொடர்கிறது. கே.ஜி.எஃப் பில் வாழ்ந்து வரும் மக்களுக்கு நல்லது செய்து தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்து வருகிறார் யாஷ். கே.ஜி.எஃப் பை பிடிக்க யாஷ்க்கு முன்னால் ஆசைப்பட்டு வந்தவர்கள், யாஷை கொலை செய்ய திட்டம் போடுகிறார்கள். இறுதியில் கே.ஜி.எஃப்பை யார் கைப்பற்றுகிறார்கள் என்பது தான் கதை.

மாஸ் ஹீரோ

மாஸ் ஹீரோ

கன்னட சினிமாவின் பிராண்ட் அம்பாஸிடராக உருவெடுத்திருக்கிறார் யாஷ். 'சலாம் ராக்கி பாய்' என மற்ற மொழி ரசிகர்களும் அவரை உச்சி முகர்ந்து கொண்டாடி வருகிறார்கள். அவர் வரும் ஒவ்வொரு காட்சியில் திரையில் ஒரு பிரளையத்தை ஏற்படுத்தி மிரட்டுகிறது. நீளமான தாடியும், வாட்டசாட்டமான தேகம் என இளம் ரசிகைகளின் மாஸ் ஹீரோவாக மனதில் பதிந்துள்ளார்.

யாஷ் சம்பளம்

யாஷ் சம்பளம்

கேஜிஎஃப் 2திரைப்படம், புஷ்பா மற்றும் RRR படத்தின் சாதனைகளை முறியடித்து இன்னும் ஓரிரு நாட்களில் இப்படம் ரூ.1000 கோடி கிளப்பில் சேர உள்ளது. இந்நிலையில், இத்திரைப்படத்திற்காக யாஷ் வாங்கிய சம்பளம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி கேஜிஎஃப் 2ல் நடிக்க 25 கோடி முதல் 27 கோடி வரை சம்பளம் பெற்றிருக்கலாம் என்று உறுதிப்படுத்தப்படாத தகவல் வெளியாகி உள்ளது. ஆனால், ,இந்த படத்தின் வெற்றிக்கே யாஷ் தான் காரணம் அவருக்கு இந்த சம்பளம் கம்மிதான் என்று கருத்து கூறிவருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X