ஓணம் கொண்டாட்டம்.. விக்னேஷ் சிவனுடன் தனி விமானத்தில் செல்ல நயன்தாரா செலவழித்தது எவ்வளவு?

By

சென்னை: நடிகை நயன்தாரா, காதலர் விக்னேஷ் சிவனுடன் தனி விமானத்தில் சென்றதற்கு எவ்வளவு செலவழித்தார் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது.

நடிகை நயன்தாராவும் இயக்குனர் விக்னேஷ் சிவனும் கடந்த சில வருடங்களாகக் காதலித்து வருகின்றனர்.

இருவரும் ஒன்றாக ஒரே வீட்டில் வசித்து வருகின்றனர். இருவருக்கும் ரகசிய திருமணம் நடந்துவிட்டதாக அவ்வப்போது தகவல் பரவி வருகிறது.

காதல் போரடித்தால்

காதல் போரடித்தால்

அடிக்கடி வெளிநாடுகளுக்கு சென்று அந்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவு செய்வதை வழக்கமாக வைத்துள்ளனர். அதை ரசிகர்கள் வைரலாக்குவார்கள். சமீபத்தில் அளித்த பேட்டியில் திருமணம் பற்றி கூறியிருந்த விக்னேஷ் சிவன், எப்போது காதல் போரடிக்கிறதோ, அப்போது திருமணம் செய்துகொள்வோம் என்று ஜாலியாக குறிப்பிட்டிருந்தார்.

தனி விமானம்

தனி விமானம்

இந்நிலையில், இருவரும் ஓணம் பண்டிகையை கொண்டாட கடந்த சில நாட்களுக்கு முன் கேரளாவுக்கு சென்றனர். இருவரும் தனி விமானம் மூலம் கொச்சி விமான நிலையத்திற்கு சென்றனர். கொரோனா அச்சுறுத்தலால் மற்ற பயணிகளோடு செல்வதைத் தவிர்த்து தனி விமானத்தை வாடகைக்கு எடுத்து பயணித்துள்ளனர்.

ஹாலிவுட் ஸ்டைலில்

ஹாலிவுட் ஸ்டைலில்

தனது காதலர் விக்னேஷ் சிவனுடன் கொச்சி விமான நிலையத்தில் இறங்கி, இருவரும் வெளிவரும் புகைப்படங்கள் வைரலாகின. நடிகை நயன்தாரா கறுப்பு நிற பேண்ட் சர்ட் மற்றும் கூலிங் கிளாஸ் அணிந்து ஹாலிவுட் நடிகை ஸ்டைலில் நடந்து சென்றார். இது பரபரப்பாகப் பேசப்பட்டது.

ரொமான்ஸ் லுக்

ரொமான்ஸ் லுக்

பின்னர், நயன்தாராவின் வீட்டில் இருவரும் ஒன்றாக சேர்ந்து ஓணம் கொண்டாடிய ரொமான்ஸ் லுக் போட்டோக்களையும் இயக்குனர் விக்னேஷ் சிவன் வெளியிட்டிருந்தார். இந்தப் புகைப்படங்களும் சோசியல் மீடியாவில் வேகமாக பரவின. இந்நிலையில் அவர்கள் தனி விமானத்தில் செல்ல எவ்வளவு செலவழித்துள்ளனர் என்ற தகவல் தெரியவந்துள்ளது.

ரூ.7 லட்சம் வாடகை

ரூ.7 லட்சம் வாடகை

பெங்களூரில் இருந்து, அந்த விமானம் வாடகைக்கு எடுக்கப்பட்டுள்ளது. விஆர்எல் லாஜிஸ்டிக் நிறுவனத்துக்குச் சொந்தமான இந்த விமானம் அங்கிருந்து சென்னைக்கு வந்திருக்கிறது. இங்கிருந்து இருவரும் கொச்சி விமான நிலையத்துக்குச் சென்றுள்ளனர். இதற்காக அவர்கள் சுமார் ரூ.7 லட்சம் வாடகை செலுத்தியுள்ளனர் என்று கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X