»   »  கசமுசாவை நேரில் பார்த்த மருமகனை ஆள் வைத்து அடித்த ராம் ரஹீம் சிங்

கசமுசாவை நேரில் பார்த்த மருமகனை ஆள் வைத்து அடித்த ராம் ரஹீம் சிங்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சன்டிகர்: கள்ளத்தொடர்பை கண்டுபிடித்த விஷ்வாஸ் குப்தாவை தனக்கு இருக்கும் அதிகாரத்தை வைத்து அமைதி காக்க வைத்துள்ளார் சாமியாரும், நடிகருமான ராம் ரஹீம் சிங்.

பாலியல் பலாத்கார வழக்கில் 20 ஆண்டு சிறை தண்டனை பெற்றுள்ள சாமியாரும், நடிகருமான ராம் ரஹீம் சிங் தனது வளர்ப்பு மகளான ஹனிப்ரீத் இன்சானுடன் தகாத உறவு வைத்திருந்ததாக அவரின் மருமகன் விஷ்வாஸ் குப்தா தெரிவித்துள்ளார்.

ஹனிப்ரீத்தை விஷ்வாஸுக்கு திருமணம் செய்து வைத்ததே ரஹீம் சிங் தான். இந்நிலையில் இது குறித்து விஷ்வாஸின் வழக்கறிஞர் ஜோஷி கூறியிருப்பதாவது,

ஹனிப்ரீத்

ஹனிப்ரீத்

ஹனிப்ரீத் சிங் விஷ்வாஸின் மனைவியாக இருந்தாலும் எப்பொழுது பார்த்தாலும் ராம் ரஹீமுக்கு சேவை செய்வது தான் அவரின் வேலையாக இருந்தது.

சாமியார்

சாமியார்

ஹனிப்ரீத்துடன் சேர்ந்து விஷ்வாஸை பாங்காக் மற்றும் இந்தியாவில் உள்ள மலை வாசஸ்தலங்களுக்கு அழைத்துச் சென்றனர். அங்கு எல்லாம் ஹனிப்ரீத் ராம் ரஹீமின் அறையில் தங்கியிருந்தார்.

உறவு

உறவு

2001ம் ஆண்டு ஹனிப்ரீத் ராம் ரஹீமுடன் கொடைக்கானல் ஹோட்டலில் தங்கியிருந்தார். அதே ஆண்டு ஜூன் மாதம் அவர்கள் உறவு வைத்ததை விஷ்வாஸ் பார்த்துவிட்டார்.

அடி

அடி

கள்ளத்தொடர்பை பார்த்த விஷ்வாஸை ராம் ரஹீமின் ஆட்கள் அடித்து உதைத்து இது பற்றி வெளியே சொல்லக் கூடாது என்று மிரட்டினார்கள். திருமணமாகி 11 ஆண்டுகள் கழித்து விஷ்வாஸ் தேராவில் இருந்து வெளியேறி பஞ்ச்குலாவில் தனது பெற்றோருடன் தங்கினார்.

மிரட்டல்

மிரட்டல்

விஷ்வாஸை அடித்து மிரட்டியதோடு இல்லாமல் அவரை ராம் ரஹீமின் அடியாள் பிரதீப் சிங் தலைமையிலான குழு கண்காணித்துள்ளது. ராம் ரஹீம், ஹனிப்ரீத்தின் கள்ளத்தொடர்பு குறித்து விஷ்வாஸ் பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

அதிகாரம்

அதிகாரம்

விஷ்வாஸ் மனு தாக்கல் செய்த உடன் அவர் மீது வரதட்சணை கொடுமை வழக்கு தொடர்ந்தார் ஹனிப்ரீத். ரூ. 2 லட்சம் வரதட்சணை கேட்டதாக தெரிவித்தார் ஹனிப்ரீத். பெரிய பணக்காரர்களான குப்தாக்கள் ஏன் ரூ. 2 லட்சம் கேட்கப் போகிறார்கள்.

செக் பவுன்ஸ்

செக் பவுன்ஸ்

குஜராத் மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் விஷ்வாஸ் மீது செக் பவுன்ஸ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இது எல்லாம் ராம் ரஹீம் சிங்கின் வேலை என்கிறார் ஜோஷி.

Read more about: bollywood cinema
English summary
A new development has surfaced in which Ram Rahim Singh is alleged to have sexual relations with his adopted daughter, Honeypreet Insaan. And the claims have been made by Vishwas Gupta, who was Honeypreet's husband. Now, a Chandigarh-based lawyer, MS Joshi has told Hindustan Times, how the guru used his power to silence Vishwas.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil