Shalu Shamu Car: ஜாகுவார் கார் வாங்கும் அளவுக்கு ஷாலு ஷம்முவிற்கு வருமானம் வருவது எப்படி?
சென்னை: சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த 2013ம் ஆண்டு பொன்ராம் இயக்கிய வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் சூரிக்கு ஜோடியாக நடித்து காமெடியில் கலக்கிய ஷாலு ஷம்மு அதன் பின்னர் தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும், றெக்க, மிஸ்டர் லோக்கல், இரண்டாம் குத்து உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
1993ம் ஆண்டு டிசம்பர் 18ம் தேதி நாகர்கோயிலில் பிறந்த ஷாலு ஷம்முவுக்கு தற்போது 29 வயதாகிறது.
சினிமா பட வாய்ப்புகள் பெரிதாக கிடைக்காத நிலையிலும் ஜாகுவார் கார் வாங்கும் அளவுக்கு ஷாலு ஷம்முவுக்கு எப்படி வருமானம் வருகிறது என்கிற கேள்வியை நெட்டிசன்கள் கிளப்பி உள்ளனர்.

சினிமா வாய்ப்பு இல்லை: காமெடி நடிகையாக அறிமுகமான ஷாலு ஷம்மு கவர்ச்சி ரூட் பக்கம் திரும்பிய நிலையில், அவருக்கு பெரியளவில் சினிமா வாய்ப்புகளே இல்லாமல் போய் விட்டது.
சின்னத்திரை தொடர்கள், ரியாலிட்டி ஷோக்களிலும் அவர் கலந்து கொள்வதில்லை, சில விளம்பரங்கள் மற்றும் கடை திறப்பு விழாக்களில் மட்டுமே கலந்து கொள்ளும் நிலையில், எப்படி இவ்வளவு சம்பாதித்தார் என்கிற கேள்விகள் கிளம்பி உள்ளன.

காஸ்மெடிக் கிளினிக்: சுஹா (Suhaa) காஸ்மெடிக் கிளினிக்கின் எக்ஸ்க்யூட்டிவ் டைரக்டரே ஷாலு ஷம்மு தான். சினிமா பிரபலங்களின் ஸ்கின் தொடர்பான பிரச்சனைகளை சரி செய்யும் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை நடத்தி வருவதால் தால் ஷாலு ஷம்மு இந்த அளவுக்கு சம்பாதித்து வருகிறார் என்றும் தனது உழைப்பால் தான் தனது கனவான ஜாகுவார் காரை அவர் தற்போது வாங்கி உள்ளார் என்றும் கூறுகின்றனர்.

செகண்ட் ஹேண்ட் கார்: மேலும், நடிகை ஷாலு ஷம்மு 98 லட்சம் ரூபாய் கொடுத்து புதிய ஜாகுவார் கார் வாங்கவில்லை என்றும் அவர் 2018 மாடலான பயன்படுத்திய காரை செகண்ட் ஹேண்டாக வெறும் 45 லட்சத்துக்கு HF கார் நிறுவனத்தில் வாங்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
நடிகை ஷாலு ஷம்மு செகண்ட் ஹேண்டில் தான் கார் வாங்கி உள்ளார் என்கிற நிலையில், அவர் மீது நெட்டிசன்கள் வைத்த விமர்சனங்களும் கேள்விகளும் தவிடு பொடியாகி உள்ளன. 45 லட்சம் மதிப்புள்ள இந்த காரை இஎம்ஐ முறையிலும் வாங்கும் வசதி உள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











