twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கொரோனா இப்படி மிரட்டுதே.. சினிமா ஷுட்டிங் ஆரம்பிச்சாலும் 'அந்தக் காட்சிலாம்' எப்படி எடுப்பாங்க?!

    |

    சென்னை: கொரோனா பாதிப்பால் படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் மீண்டும் படப்பிடிப்பு தொடங்கினால் சில காட்சிகள் எப்படி படமாக்கப்படும் என்ற கேள்வி எழுந்துள்ளது.

    Recommended Video

    கொரோனா.. இறைவன் ரிலீஸ் செய்த படம்.. வைரலாகும் வடிவேலுவின் வீடியோ!

    நாடு முழுவதும் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் இதுவரை ஒன்றரை லட்சத்திற்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    மகாராஷ்டிராவுக்கு அடுத்தப்படியாக தமிழகத்தில் 18 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் தமிழகம் இரண்டாம் இந்திய அளவில் இரண்டா இடத்தில் உள்ளது.

    அனுமதித்தால் புதுச்சேரி..இல்லையெனில் ஏவிஎம்.. பொன்னியின் செல்வன் முதல் பார்ட் ரிலீஸ் எப்போது?அனுமதித்தால் புதுச்சேரி..இல்லையெனில் ஏவிஎம்.. பொன்னியின் செல்வன் முதல் பார்ட் ரிலீஸ் எப்போது?

    சின்னத்திரை..

    சின்னத்திரை..

    கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் 4வது கட்டமாக ஊரடங்கு நீடித்து வருகிறது. இந்த ஊரடங்கு வரும் 31ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. இந்நிலையில் சின்னத்திரை படப்பிடிப்புக்கு தமிழக அரசு பல்வேறு நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கியிருக்கிறது.

    நெருக்கமான காட்சிகள்

    நெருக்கமான காட்சிகள்

    ஆனால் சினிமா ஷுட்டிங்குகள் தொடங்க தமிழகத்தில் இதுவரை அனுமதி வழங்கப்படவில்லை. அதே நேரத்தில் பாலிவுட்டில் சில படங்களின் படப்பிடிப்புகள் கட்டுப்பாடுகளுடன் தொடங்கியுள்ளது. இந்நிலையில் தமிழ் சினிமாவில் படப்பிடிப்புகள் தொடங்கினாலும் நெருக்கமான காட்சிகளை எப்படி எடுக்கப் போகிறார்கள் என்ற சவால் நிறைந்துள்ளது.

    அந்தக் காட்சிகள்..

    அந்தக் காட்சிகள்..

    இப்போது வெளியாகும் பெரும்பாலான படங்கள் காதலை மையப்படுத்தியே உள்ளது. அப்படி இருக்கையில் டூயட் பாடல்களில் கட்டியணைப்பது, முத்தக்காட்சி, லீப்லாக் உள்ளிட்ட நெருக்கமான காட்சிகளை எப்படி எடுப்பபார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது.

    அந்தக் காட்சிகள் இல்லாமல்?

    அந்தக் காட்சிகள் இல்லாமல்?

    குறிப்பாக வெப்சீரிஸ் போன்றவைகளுக்கு சென்சார் இல்லை என்பதால் முழுக்க முழுக்க ஆபாசம் நிறைந்தவைகளாக உள்ளன. படுக்கையறை காட்சிகள் இல்லாத வெப் சீரிஸ்கள் வெகு சொற்பமே. அப்படி இருக்கையில் தற்போதைய சூழலில் சோஷியல் டிஸ்டன்ஸ் மிக முக்கியம் என்றும் கருதப்படும் அந்த காட்சிகள் இல்லாமல் எப்படி படங்களை எடுக்கப் போகிறார்கள் என்றும் கேள்வி எழுந்துள்ளது.

    கிராபிக்ஸ் மூலம்?

    கிராபிக்ஸ் மூலம்?

    காதல் காட்சிகளில் ரொமான்ஸ் சீன்களை எப்படி எடுக்கப் போகிறார்கள் என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. நெருக்கமான காட்சிகளை கிராபிக்ஸ் மூலம் எடுப்பார்களா அல்லது வருவது வரட்டும் என தற்போதைய ஃபார்முலாவையே தொடரப் போகிறார்களா என்ற கேள்வியும் எழுந்தது. அனைவருக்கும் அவரவர் உடல் நலம் முக்கியம் என்பதால் நெருக்கமான காட்சிகளில் நடிக்க நடிகர்கள் மற்றும் நடிகைகள் சம்மதிப்பார்களா என்ற அச்சமும் எழுந்துள்ளது.

    English summary
    How some close romatic scenes will be shot in movies at this Corana time? Graphics work will be used for some close scenes?
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X