»   »  கோஹ்லி-அனுஷ்கா காதல் முறிய காரணமான 'சுல்தான்'

கோஹ்லி-அனுஷ்கா காதல் முறிய காரணமான 'சுல்தான்'

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: கிரிக்கெட் வீரர் கோஹ்லி, பாலிவுட் நடிகை அனுஷ்கா இடையே பிரச்சனை ஏற்பட சல்மான் கான் நடிக்கும் சுல்தான் படம் காரணம் என்று தெரிய வந்துள்ளது.

கிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லியும், பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மாவும் காதலித்து வந்தனர். இந்நிலையில் கோஹ்லி அனுஷ்காவை இந்த ஆண்டே திருமணம் செய்து மனைவியாக்க விரும்பினார்.

இதனால் திருமணத்திற்கு நேரம் ஒதுக்குமாறு அவர் அனுஷ்காவிடம் கேட்டுள்ளார்.

சுல்தான்

சுல்தான்

ஏ தில் ஹை முஷ்கில் படத்தை தவிர்த்து புதுப் படங்கள் எதையும் ஒப்புக் கொள்ளாமல் இருந்தார் அனுஷ்கா. புதிய வாய்ப்புகளை யோசித்தே ஒப்புக் கொள்வேன் என்று அவர் கோஹ்லியிடம் தெரிவித்திருந்தார்.

கோஹ்லி

கோஹ்லி

சல்மான் கான் நடித்து வரும் சுல்தான் படத்தில் நடிக்கிறீர்களா என்று அனுஷ்காவிடம் கேட்டுள்ளனர். சுல்தானில் நடிக்க வேண்டாம் என்று கோஹ்லி தெரிவித்துள்ளார்.

சல்மான் கான்

சல்மான் கான்

கோஹ்லி படித்துப் படித்து கூறியும் சூப்பர் ஸ்டார் சல்மான் கானுடன் நடிக்க வந்த வாய்ப்பை அனுஷ்கா தவறவிட விரும்பவில்லை. இதனால் காதலரை பகைத்துக் கொண்டு படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டார்.

திருமணம்

திருமணம்

படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டுவிட்டாய் அப்போ திருமணம் என்று கோஹ்லி கேட்டதற்கு, எனக்கு சினிமா தான் முக்கியம் என்று கூறி காதல் முறிவுக்கு வழிவகுத்துவிட்டார் அனுஷ்கா.

English summary
Salman Khan starrer Sultan has allegedly put an end to Kohli-Anushka's love.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil