twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    தலைவர் 169 பஞ்சாயத்து எப்படி முடிவுக்கு வந்தது? இயக்குநர் நெல்சனுக்கு ஆதரவாக பேசியது அவரா?

    |

    சென்னை: ஏப்ரல் 13ம் தேதியே சன் பிக்சர்ஸ் அலுவலகத்தில் நடிகர் ரஜினிகாந்துக்கு பிரத்யேகமாக பீஸ்ட் படம் திரையிட்டுக் காட்டப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.

    ஆனால், அதன் பிறகு நடிகர் ரஜினிகாந்த் அந்த படத்தை பார்த்து பாராட்டியதாக எந்தவொரு தகவலும் வெளியாகவில்லை.

    ஆனால், அதற்கு பதிலாக, இயக்குநர் நெல்சன் படத்தில் இருந்து நீக்கப்படப் போவதாக தகவல்கள் வெளியாகி பரபரப்பை கிளப்பின. ஆனால், தற்போது அனைத்து பிரச்சனைகளும் முடிவுக்கு வந்து தலைவர் 169 படத்தை நெல்சன் தான் இயக்கப் போகிறார் என்பது உறுதி ஆகி உள்ளது. இந்நிலையில், நெல்சனுக்கு ஆதரவாக அந்த பிரபலம் பேசியதாக தகவல்கள் கசிந்துள்ளன.

    தேவர்மகன் தான் முதல் அட்டை படம்...30 ஆண்டு வெற்றியை சொல்லும் வர்கீஸ் சிறப்பு பேட்டி தேவர்மகன் தான் முதல் அட்டை படம்...30 ஆண்டு வெற்றியை சொல்லும் வர்கீஸ் சிறப்பு பேட்டி

    விஜய் சொல்லி

    விஜய் சொல்லி

    நடிகர் ரஜினிகாந்தின் அடுத்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிப்பது உறுதியான நிலையில், இயக்குநர் யார் என்கிற கேள்வி விஸ்வரூபம் எடுத்தது. தேசிங் பெரியசாமி, கார்த்திக் சுப்புராஜ், பாண்டிராஜ் உள்ளிட்ட பல பெயர்கள் அடிபட்டது. ஆனால், கடைசியாக விஜய் நெல்சனிடம் ரஜினி சாருக்கு ஒரு கதை சொல்லி பாருங்க என சொன்னதும், நெல்சன் சொன்ன கதை பிடித்துப் போக தலைவர் 169 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.

    நெல்சன் சொதப்பல்

    நெல்சன் சொதப்பல்

    டாக்டர் படத்தின் வெற்றிக்கு விஜய் ரசிகர்கள் பெரியளவில் பக்க பலமாக இருந்தனர். ஆனால், பீஸ்ட் படம் வெளியான நிலையில், ரஜினிகாந்த் ரசிகர்கள் மற்றும் அஜித் ரசிகர்கள் அதிக அளவில் நெகட்டிவ் விமர்சனங்கள் பரப்பியது தான் பீஸ்ட் படம் இந்த அளவுக்கு வசூல் பாதிப்படைய காரணம் என தகவல்கள் வெளியாகின. ஆக்‌ஷன் மற்றும் காமெடியை சரியான விதத்தில் கலந்து கொடுக்காதது தான் இயக்குநர் நெல்சன் செய்த தவறு என்கிற குற்றச்சாட்டுக்களும் முன் வைக்கப்பட்டன.

    இயக்குநர் மாற்றம்

    இயக்குநர் மாற்றம்

    பீஸ்ட் படத்தை பார்த்த ரஜினிகாந்த் அந்த படத்தை பாராட்டியதாக தகவல்கள் வெளியாகாத நிலையில், தலைவர் 169 படத்தின் இயக்குநரையே ரஜினிகாந்த் மாற்ற முடிவு செய்து விட்டதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகின. நெல்சனுக்கு பதிலாக தேசிங் பெரியசாமி அல்லது அட்லி இருவரில் யாராவது ஒருவர் தலைவர் 169 படத்தை இயக்கப் போவதாகவும் யூகங்கள் கிளம்பின.

    நெல்சன் தான் கன்ஃபார்ம்

    நெல்சன் தான் கன்ஃபார்ம்

    ஆனால், கடைசியாக இயக்குநர் நெல்சன் தான் தலைவர் 169 படத்தை இயக்கப் போகிறார் என்பது உறுதி ஆகி உள்ளது. வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக நடிகர் ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் தலைவர் 169 கவர் போட்டோவை மாற்றி உள்ளார். இந்நிலையில், இந்த முடிவு எப்படி சாத்தியமானது என்பது குறித்த தகவல்களும் வெளியாகி உள்ளன.

    அனிருத் தான் ஆதரவு

    அனிருத் தான் ஆதரவு

    கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட், தலைவர் 169 என தொடர்ந்து இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் உருவாகும் படங்களுக்கு இசையமைத்து வருகிறார் அனிருத். இந்த படங்கள் எல்லாம் நெல்சனுக்கு கிடைக்க முக்கிய காரணமே அனிருத் தான் என்கின்றனர். மேலும், தற்போது நடந்த பிரச்சனைகளை சமாளிக்கவும் நெல்சனுக்கு ஆதரவாக அனிருத் தான் இருந்து இந்த பஞ்சாயத்தை முடிவுக்கு கொண்டு வந்துள்ளார் என்றும் கூறுகின்றனர்.

    கண்டிப்பா மிஸ் ஆகாது

    கண்டிப்பா மிஸ் ஆகாது

    பீஸ்ட் படத்தின் மேக்கிங்கில் எந்தவொரு குறையும் இல்லை என்றும், திரைக்கதையில் ஏற்பட்ட சில சொதப்பல்கள் தான் படத்திற்கு பிரச்சனையாக மாறியது என்றும், இந்த பிரச்சனை தலைவர் 169 படத்தில் நிச்சயம் நடக்காது என்றும், கண்டிப்பா அடுத்த முறை ஹிட் மிஸ் ஆகாது என்கிற உத்தரவாதத்தையும் கொடுத்த பின்னரே ரஜினிகாந்த் இறுதி முடிவுக்கு வந்துள்ளார் என்றும் பேச்சுக்கள் அடிபட்டு வருகிறது.

    English summary
    No changes, Nelson Dhilipkumar will direct Rajinikanth’s Thalaivar 169 movie without any changes. Anirudh Ravichander supports Nelson in recent Beast movie issues.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X