குக் வித் கோமாளி மாதம்பட்டி ரங்கராஜின் 2ஆவது காதல்?..அந்தப் பெண்ணுடன் இப்படித்தான் பழக ஆரம்பித்தாரா?

சென்னை: குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் நடுவராக இருப்பவர் மாதம்பட்டி ரங்கராஜ். இவர் பிரபல சமையல் கலைஞராகவும்; பிரபலங்கள் வீட்டில் நடக்கும் நிகழ்ச்சிகளுக்கு தனது டீமுடன் சமையல் செய்துகொடுப்பவராகவும் திகழ்பவர். அதுமட்டுமின்றி மெஹந்தி சர்க்கஸ் என்ற படத்தில் ஹீரோவாகவும் நடித்திருக்கிறார். ஏற்கனவே திருமணமாகி இரண்டு ஆண் குழந்தைகளுக்கு தந்தையான இவர் ஜாய் கிரிஸில்டா என்ற ஆடை வடிவமைப்பாளரை காதலித்துவருவதாக தகவல்கள் வட்டமடிக்க ஆரம்பித்திருக்கும் சூழலில்; அவர்களுக்குள் எப்படி பழக்கம் ஆரம்பமானது என்றும் பேச்சுக்கள் அடிபட ஆரம்பித்திருக்கின்றன.

தமிழ்நாட்டின் பிரபலமான சமையல் கலைஞராக இருப்பவர் மாதம்பட்டி ரங்கராஜ். பல திருமணங்கள், நிகழ்ச்சிகளுக்கு சமையல் செய்யும் அவர் பிரபலங்களுக்கும் சமையல் செய்துகொடுப்பவர். பிரதமர் முதல் தமிழ் சினிமா செலிபிரிட்டிகள்வரை பலருக்கும் சமையல் செய்துகொடுத்திருக்கிறார். இவரது சமையலுக்கு என்று டிமாண்ட் எப்போதுமே இருப்பதுண்டு. அதனை அவரும் சரியாக பயன்படுத்திக்கொண்டு தான் எடுக்கும் ஆர்டர்களில் நேர்த்தியாக சமையல் செய்து நல்ல பெயரை சம்பாதித்துவருகிறார்.

Cook With Comali Madhampatti Rangaraj Joy Crizildaa

மெஹந்தி சர்க்கஸ் ஹீரோ: செலிபிரிட்டிகளுக்கு சமையல் செய்துகொடுக்கும் அவர்; சரவணன் இயக்கிய மெஹந்தி சர்க்கஸ் படத்தில் ஹீரோவாகவும் அறிமுகமானார். அந்தப் படம் சூப்பர் ஹிட்டடித்தது. குறிப்பாக ரங்கராஜின் நடிப்புக்கும் ரசிகர்கள் தங்களது வரவேற்பை கொடுத்தார்கள். ஆனால் என்ன நடந்ததோ தெரியவில்லை அதற்கு பிறகு பெரிதாக எந்தப் படத்திலும் அவர் நடிக்கவில்லை. விரைவில் அவர் சில படங்களில் கமிட்டாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

குக் வித் கோமாளி நடுவர்: சூழல் இப்படி இருக்க விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் நடுவர்களில் ஒருவராக இருந்த வெங்கடேஷ் பட் அந்நிகழ்ச்சியிலிருந்து சில காரணங்களால் விலகினார். அவருக்கு பதிலாக ரங்கராஜ் அந்த நிகழ்ச்சியில் நடுவராக களமிறக்கப்பட்டார். நடுவராக அவர் நியாயமான முறையில் செயல்பட்டுக்கொண்டிருக்கிறார் என்று அந்த நிகழ்ச்சி மற்றும் அவரது ரசிகர்கள் தொடர்ந்து கூறிவருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

திருமணமான ரங்கராஜ்: மாதம்பட்டி ரங்கராஜுக்கு ஏற்கனவே திருமணமாகிவிட்டது. அவரது மனைவி பெயர் ஸ்ருதி. இந்தத் தம்பதிக்கு இரண்டு ஆண் குழந்தைகள் இருக்கிறார்கள். ஆனால் சமீப நாட்களாக ரங்கராஜுக்கும், ஸ்ருதிக்கும் இடையே மனஸ்தாபம் ஏற்பட்டிருப்பதாகவும்; இருவரும் விவாகரத்து செய்யவிருக்கிறார்கள் என்றும் முணுமுணுப்புகள் தொடர்ந்து கேட்டவண்ணம் இருக்கின்றன. இப்படிப்பட்ட சூழலில்தான் புது சர்ச்சை ஒன்று ரங்கராஜை சுற்றி எழுந்திருக்கிறது.

ஜாய் கிரிஸில்டா: அதாவது பிரபல ஆடை வடிவமைப்பாளரான ஜாய் கிரிஸில்டா சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், 'காதலர் தினத்தை மாதம்பட்டி ரங்கராஜுடன் கொண்டாடினேன்' என்று குறிப்பிட்டிருந்தார். அதுமட்டுமின்றி அவர் தனக்கு பூ வாங்கித்தந்ததாக கூறியிருக்கும் ஜாய், தனது பெயரை 'ஜாய் ரங்கராஜ்' என்றும் எழுதிய புகைப்படத்தை பகிர்ந்திருக்கிறார். இதன் காரணமாக அவர்கள் இரண்டு பேரும் காதலிக்கிறார்கள் என்று கிசுகிசுக்கள் பரவ ஆரம்பித்திருக்கின்றன.

எப்படி பழக்கம்?: இந்நிலையில் ரங்கராஜுக்கும், ஜாய் கிரிஸில்டாவுக்கு எப்படி பழக்கம் ஆரம்பமானது என்பது குறித்த தகவல் ஒன்றும் வட்டமடிக்க ஆரம்பித்திருக்கிறது. அதாவது மாதம்பட்டி ரங்கராஜுக்கு பர்சனல் ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றிவருகிறாராம் ஜாய் கிரிஸில்டா. குக் வித் கோமாளி நிகழ்ச்சியில்கூட ரங்கராஜ் அணியும் ஆடைகளை வடிவமைப்பது ஜாய்தான் என்று கூறப்படுகிறது. அப்போது ஏற்பட்ட பழக்கம் நாளடைவில் காதலாக மாறியிருக்கிறது என்று திரைத்துறையில் விவரமறிந்தவர்கள் பேச ஆரம்பித்திருக்கிறார்கள். ஆனால் இதில் எவ்வளவு உண்மை இருக்கிறது என்று தெரியவில்லை.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X