For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  கட்டயில போறவளே... நீ வௌங்கமாட்டே - டிவி சீரியல் அலப்பறைகள்

  |

  சென்னை: இன்றைக்கு உள்ள பெரும்பாலான டிவிக்கள் அனைத்துமே, தங்களுடைய டி.ஆர்.பி ரேட்டிங்கை கூட்டுவதற்காகவும், விளம்பர வருவாயை அதிகரிக்கவும் ஒரே டயலாக்கை வைத்துக்கொண்டு நேரத்தை கடத்துகின்றன. டிவி சீரியல் நேரம் மொத்தமே அரை மணி நேரம்தான் என்றாலும் அதை மூன்று பகுதியாக பிரித்து ஒரு அதில் 5 நிமிடம் மட்டுமே சீரியல் ஒளிபரப்பாகிறது மீதி நேரங்களில் விளம்பரங்களின் ஆதிக்கம்தான். இன்றைக்கு டிவி சேனல்கள் சீரியல் என்ற பெயரில் செய்யும் அலப்பறைகள் தாங்க முடியவில்லை.

  தில் திரைப்படத்தில் நடிகர் விவேக் டிவி சீரியல் கதாசிரியராக நடித்திருப்பார். அதில் ஒரு காட்சியில் ஒரு டிவி சீரியலுக்கு அனுப்ப வேண்டிய டயலாக் பற்றி வையாபுரி கேட்பார். அதற்கு விவேக், போன வாரம் எந்த சீன்ல எபிசோட் முடிஞ்சது என கேட்க, அதற்கு வையாபுரி, போன வாரம் ஹீரோயின் மாடிப்படியில ஏறுவதோட முடிச்சிட்டோம் என்று சொல்ல, பதிலுக்கு விவேக், அப்படியா, இந்த வாரம் மாடிப்படியில இருந்து இறங்குறது மாதிரி எடுத்து முடிச்சிட சொல்லு என்பார்.

  How to make TV serial - Exclusive filmibeat Tamil

  மற்றொரு காட்சியில், ஒரு டிவி சீரியல் தயாரிப்பபாளர், விவேக்கிடம் வந்து பொம்பள மனசை டச் பண்றது மாதிரி ஒரு கதை தயார் பண்ணி கொடுங்க என்று கேட்பார்.

  அதற்கு விவேக் எத்தனை எபிசோட் தேவை என்று கேட்க, ஒரு குழந்தை பிறந்து வளர்ந்து பெரியவனாக வர்றது வரைக்கும் அந்த சீரியல் வரணும் என்று தயாரிப்பாளர் சொல்வார்.

  இன்றைக்கு உள்ள பெரும்பாலான டிவிக்கள் அனைத்துமே, தங்களுடைய டி.ஆர்.பி ரேட்டிங்கை கூட்டுவதற்காகவும், விளம்பர வருவாயை அதிகரிக்கவும் ஒரே டயலாக்கை வைத்துக்கொண்டு, விவேக் சொன்னது போலவே, சீரியல் பார்க்கும் அனைவரையும் கொலையாக கொன்று வருகிறார்கள்.

  நல்ல வேளையாக இன்றைக்கு நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நம்மிடையே இல்லை. ஒரு வேளை அவர் உயிரோடு இருந்து, இந்த சீரியல்களை பார்க்க நேர்ந்தால், நிச்சயம் தற்கொலை செய்துகொண்டு செத்திருப்பார். அந்த அளவுக்கு டிவி சீரியல்களில் நடிக்கும் பெரும்பாலானவர்கள் தங்களின் நடிப்புத் திறனை வெளிப்படுத்தி(?) வருகிறார்கள்.

  காலையில் ஒரு சீரியலில் போலீஸ் ஸ்டேஷனில் ஒரு சீன் எடுப்பதாக காட்டினால். தொடர்ந்து அடுத்தடுத்து சீரியல்களிலும் அதே மாதிரியான காட்சிகள் தான் எடுத்து பார்வையாளர்களின் ப்ளட் ப்ரஷரை அதிகரிக்கின்றனர்.

  ஒரு சீரியலில் நாயகனையோ அல்லது நாயகியையோ போலீஸ் பிடித்துக்கொண்டு போனால், அடுத்தடுத்து சீரியல்களிலும் அது போலவே காட்சிகளை அமைக்கின்றனர். அதிலும், போலீஸ் பிடித்துக்கொண்டு போன தகவலை அவரது தம்பியோ அல்லது தங்கையோ வீட்டில் வந்து சொல்லும் காட்சியை ஒரு வாரத்திற்கு எடுக்கின்றனர்.

  உதாரணத்திற்கு நாயகனை போலீஸ் பிடித்துக்கொண்டு செல்வதை நாயகனின் தம்பி அதிர்ச்சியோடு வீட்டில் சொல்லும் காட்சியில், நம்ம.. என்று சொல்வதையே குடும்ப உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் அதிர்ச்சியோடு நம்ம.... நம்ம என திரும்ப சொல்லும் போதே விளம்பர இடைவேளை விடுகின்றனர். இடைவேளைக்கு பின்பு மீண்டும் நம்ம.... அண்ணனை என்று டயலாக் பேச, திரும்ப குடும்ப உறுப்பினர்கள் ரிபீட்டாக நம்ம அண்ணனை என்று கேட்க, உடனே கேமரா வேறு அத்தனை குடும்ப உறுப்பினர்களின் முகத்தையும் க்ளோசப்பில் காட்டும்போது யப்பா போதும்டா சாமியோவ் என்று பார்வையாளர்கள் நினைக்கின்றனர்.

  இன்னொன்று வேறு வாரம் தோறும் நடக்கும். அதாவது, சரியாக வெள்ளிக்கிழமை அன்று தான் பெரும்பாலான சீரியல்களில், வில்லி பேசும், நீ நாசமா தான் போவே, உருப்படவே மாட்டே, நீ எல்லாம் நல்ல குடும்பத்து பெண்ணே இல்லை, நீ வௌங்கவே மாட்டே, கட்டையில போறவ... இந்த மாதிரியான அமங்கலமான டயலாக் தவறாமல் இடம்பெறும் வகையிலேயே சீரியல்களை எடுக்கின்றனர்.

  ஆனால், அனைத்து டிவிக்களிலும் இந்த மாதிரியான சீரியல்கள் இடம்பெறுவது கிடையாது. எத்தனையோ திறமையான நடிகர்கள் சரியான வாய்ப்பு கிடைக்காமல் வறுமையில் வாடுகின்றனர். ஆனால், சில டிவிக்கள் தங்களின் டிஆர்பி ரேட்டிங்கை கூட்டவும் வருமானத்தை கூட்டவும் இந்தமாதிரியான அபத்தமான சீரியல்களை எடுத்து மக்களின் ப்ளட் ப்ரஸரை ஏற்றி வருகின்றன. இதற்கு எப்பொழுது தான் விடிவு காலம் வருமோ தெரியவில்லை.

  English summary
  Nowadays Many TV channels pass the same dial to increase their TRP rating and increase advertising revenue. TV serial time is only half an hour, but it is divided into three parts and only one 5 minute serial broadcast. here troll tv serial how to make.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X