வடிவேலு கதையில் விஜய் ஹீரோவாக நடித்த காரணம் ... இயக்குனர் எழில் சொன்ன பதில்!
சென்னை : நடிகர் விஜய்யின் திரை வாழ்க்கையில் மிகப் பெரிய வெற்றிப் படமாக உள்ளது துள்ளாத மனமும் துள்ளும்
விஜய், சிம்ரன் காம்போவில் வெளியான இந்த படத்தை இயக்குனர் எழில் இயக்கி இருந்தார்
மாபெரும் வெற்றி பெற்ற இந்த படத்தில் முதலில் ஹீரோவாக நடிக்க இருந்த வடிவேலுவுக்கு பதிலாக விஜய் எப்படி ஹீரோவாக நடித்தார் என்ற காரணத்தை இயக்குனர் எழில் பகிர்ந்துள்ளார்.

துள்ளாத மனமும் துள்ளும்
தமிழில் தொடர்ந்து கமர்ஷியல் ஹிட் படங்களை கொடுத்து வருபவர் இயக்குனர் எழில். 1999 ஆம் ஆண்டு வெளியான துள்ளாத மனமும் துள்ளும் என்ற படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமான எழில்-க்கு இந்த படம் மாபெரும் வெற்றிப்படமாக அமைந்தது. விஜய் இந்த படத்தில் ஹீரோவாக நடித்திருந்தார்.

காதல் கதை களத்தில்
நடிகை சிம்ரன் கதாநாயகியாக நடித்திருந்தார். மணிவண்ணன், தாமு,வையாபுரி, மதன்பாப் எனது பிரபலமான நடிகர்கள் பலர் இப்படத்தில் நடித்து இருந்தனர். மிகவும் வித்தியாசமான காதல் கதை களத்தில் வெளியான துள்ளாத மனமும் துள்ளும் மாபெரும் வெற்றி பெற்றது தமிழ் நாட்டையும் கடந்து கேரளா உள்ளிட்ட பல மொழிகளில் இந்த படம் சூப்பர் ஹிட் வெற்றி பெற்று வருகிறது விஜய் ரசிகர்கள் மட்டுமல்லாமல் மற்ற ரசிகர்களும் இந்த படத்தை கொண்டாடினார்கள் இன்றுவரை ரசிகர்களின் பேவரிட் படமாக துள்ளாத மனமும் துள்ளும் இருந்து வருகிறது.

முதலில் நடிகர் வடிவேலு ஹீரோவாக
ரசிகர்களால் பெருமளவு ரசிக்க பட்ட விஜய்,சிம்ரன் ஜோடி இந்த படத்தில் மீண்டும் இணைந்து நடித்து இருந்தார்கள். எஸ் ஏ ராஜ்குமார் இசையில் பாடல்கள் அனைத்தும் சூப்பர் டூப்பர் வெற்றி பெற்றது விஜயின் திரை வாழ்க்கையில் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்த துள்ளாத மனமும் துள்ளும் படத்தில் முதலில் நடிகர் வடிவேலு தான் நடிக்க இருந்தாராம். ஒரு சில காரணங்களால் இந்த படத்தில் விஜய் நடித்து படம் சூப்பர் டூப்பர் வெற்றி பெற்றது.

வடிவேலுக்கு பதில் விஜய்
வடிவேலுவுக்கு பதிலாக விஜய் எதற்காக மாற்றப்பட்டார் என்ற காரணம் இதுவரை பலருக்கும் தெரியாமலேயே இருந்த நிலையில் இயக்குனர் எழில் துள்ளாத மனமும் துள்ளும் படத்தில் எதற்காக வடிவேலுக்கு பதில் விஜய் நடிக்க வைத்தார் என்ற உண்மையை பகிர்ந்துள்ளார்.
Recommended Video

தயாரிப்பாளர் கிடைக்காததால்
துள்ளாத மனமும் துள்ளும் கதை முதலில் ராவாக இருந்ததாம். அதாவது இயக்குனர் பாலாவின் படங்களைப் போல துள்ளாத மனமும் துள்ளும் கதையை ராவாக எழுதி இருந்தாராம் எழில். அதனால் அந்தப் படத்திற்கு சரியான தயாரிப்பாளர் கிடைக்காததால் கதையில் பல மாற்றங்கள் செய்து பின் அதில் நடிகர் விஜய் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். சூப்பர் ஹிட் பிலிம்ஸ் ஆர்பி செளத்ரி இந்த படத்தை தயாரித்திருந்தார். விஜய் நடிப்பில் வெளியாகி படமும் சூப்பர் டூப்பர் வெற்றி பெற்றது. துள்ளாத மனமும் துள்ளும் கதையில் வடிவேலுவுக்கு பதில் விஜய் எதற்காக மாற்றப்பட்டார் என்ற காரணத்தை பகிர்ந்துள்ளார்.


Click it and Unblock the Notifications











