விஜயகாந்த் எப்படி புரட்சி கலைஞர் ஆனார் தெரியுமா?.. எம்ஜிஆர் பாதி, கலைஞர் பாதி கலந்து செய்த கலவை!

சென்னை: பல கோடி தமிழக மக்களை கண்ணீர் கடலில் ஆழ்த்தி விட்டு மீளா உரக்கத்திற்கு சென்று விட்டார் கேப்டன் விஜயகாந்த். தன்னை தேடி வருபவர்களை பட்டினியோடு அனுப்பக் கூடாது என்றும் மற்ற படப்பிடிப்பு தளங்களில் காபி, டீ குடித்தால் என்னோட படப்பிடிப்பு தளத்தில் எல்லோருக்கும் ஹார்லிக்ஸ், பூஸ்ட் கொடுங்க என சொன்ன விஜயகாந்த் எம்ஜிஆர் போலவே வள்ளலாகவே கடைசி வரை வாழ்ந்து மறைந்தார்.

புரட்சி தலைவர் என எம்ஜிஆர் கொண்டாடப்பட்டார். அதே போல புத்திக் கூர்மையில் சிறந்து விளங்கிய மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் அளவுக்கு தொலைநோக்குப் பார்வையும் புத்திக் கூர்மையும் கொண்டு சினிமாவை சீராக வழி நடத்தியதை போலவே அரசியலிலும் தேமுதிக எனும் கட்சியை ஆரம்பித்து மாபெரும் கட்சியாக உயர்த்தினார்.

How VIjayakanth got Puratchi Kalaignar name?

புரட்சியும் கலைஞரும் சேர்ந்து விஜயகாந்துக்கு புரட்சி கலைஞர் என்கிற பட்டம் வைக்கப்பட்டது. அந்த பட்டத்தை தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு தான் விஜயகாந்துக்கு வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

விஜயகாந்த் எம்ஜிஆர் மற்றும் கலைஞரின் தீவிர ரசிகர் என்பதால் தான் சினிமாவில் சிறந்து விளங்க வேண்டும் விஜயகாந்த் என புரட்சி கலைஞர் என்கிற பட்டத்தை சரியாக பார்த்து வைத்தேன் என தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணுவே த்ரோபேக் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

விஜயகாந்தின் மறைவு சினிமா உலகத்தினரையும் பொதுமக்களையும் எந்தளவுக்கு வேதனை அடைய செய்திருக்கிறதோ, அவருடன் பல ஆண்டுகள் நண்பராக பழகி வந்த தயாரிப்பாளர் தாணுவையும் இந்த இழப்பு தலையில் இடியாக இறங்கி உள்ளது.

புரட்சி கலைஞர் என்று மட்டுமில்லாமல் கருப்பு எம்ஜிஆர் என்றும் அழைக்கப்பட்டவர் கேப்டன் விஜயகாந்த். இல்லை என்ற சொல்லே அவரது வாயில் இருந்து வராது என்றும் எந்த உதவியாக இருந்தாலும் கண்டிப்பா செய்றேன், கவலைப்படாம போங்க என்று மட்டுமே சொல்லி வந்த விஜயகாந்த் இன்று நம்மிடையே இல்லாதது மிகப்பெரிய துயரமான விஷயம் தான். அவரது ஆன்மா சாந்தியடைய ரசிகர்களும் பிரபலங்களும் தொடர்ந்து இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X