யாஷிகா செய்த தவறு...தோழி காரிலிருந்து வீசி எறியப்பட்டது எப்படி...வெளியான பதற வைக்கும் தகவல்

சென்னை : கோரமான கார் விபத்தில் சிக்கிய யாஷிகா ஆனந்த், ஏராளமான எலும்பு முறிவுகள், படுகாயங்களுடன் ஐசியு.,வில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது தோழி பவானி சம்பவ இடத்திலேயே பலியான நிலையில், சையது மற்றும் அமீர் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர்.

இதன் காரணமாக 3 பிரிவுகளின் கீழ் யாஷிகா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். யாஷிகாவும் போலீசில் வாக்குமூலம் அளித்துள்ளார். இருப்பினும் சிசிடிவி பதிவுகள் அடிப்படையில் என்ன நடந்தது என விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அதே சமயம் விபத்து நடந்த பகுதியில் சிசிடிவி கேமிராக்கள் வேலை செய்யவில்லை என்றும் கூறப்படுகிறது.

விபத்து நடந்தது எப்படி

விபத்து நடந்தது எப்படி

இந்நிலையில் விபத்து நடந்தது எப்படி, யாஷிகாவும் அவரது தோழியும் செய்த தவறு என்ன, காருக்குள் இருந்த தோழி வெளியே தூக்கி வீசப்பட்டது எப்படி, உண்மையில் அப்படி என்ன தான் நடந்தது என்பது போன்ற அதிர வைக்கும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

யாஷிகா செய்த தவறு

யாஷிகா செய்த தவறு


லேட்டஸ்ட்டாக வெளியான தகவலின் படி, மகாபல்லிபுரத்தில் மிட்நைட் பார்ட்டி முடித்து விட்டு யாஷிகா, பவானி, ஆண் நண்பர்கள் இருவரும் காரில் சென்னை திரும்பி உள்ளனர். யாஷிகா தான் காரை ஓட்டி வந்துள்ளார். ஆனால் சீட் பெல்ட் அணியவில்லை. இதே போல் பவானியும் முன் சீட்டில் அமர்வதாக கூறி, சீட் பெல்ட் அணியாமல் வந்துள்ளார்.

உயிர் தப்பிய நண்பர்கள்

உயிர் தப்பிய நண்பர்கள்

பின் சீட்டில் இருந்த சையது மற்றும் அமீர் சீட் பெல்ட் அணிந்திருந்ததால் அவர்கள் லேசான காயங்களுடன் உயிர் தப்பி உள்ளனர். காரில் மிகவும் சத்தமாக பாட்டு போட்டு ஒலிக்கப்பட்டு, காரின் சன் ரூஃப்பும் திறந்திருந்துள்ளது.

விபத்து இப்படி தான் நடந்ததா

விபத்து இப்படி தான் நடந்ததா


சினிமாவில் வருவது போல் சன் ரூஃப் வழியாக தலையை காருக்கு வெளியே காட்டி, நடனமாடியபடி வந்துள்ளார் பவானி. அவரின் ஆடைகள் காற்றில் பறந்தபடி இருந்துள்ளது. தவறுதலாக பவானியின் ஆடை, கார் ஓட்டிக் கொண்டிருந்த யாஷிகாவின் முகத்தை மறைத்துள்ளது.

இவ்வளவு வேகத்தில் கார் ஓட்டினாரா

இவ்வளவு வேகத்தில் கார் ஓட்டினாரா

இதனால் கட்டுப்பாட்டை இழந்த கார், மீடியனில் மோதி விபத்திற்குள்ளாகி உள்ளது. யாஷிகா காரை 140 கி.மீ., வேகத்தில் இயக்கியதாக கூறப்படுகிறது. கார் வந்த வேகத்தில் மீடியனில் பலமாக மோதியதால், சன் ரூஃப் வழியாக பவானி காருக்கு வெளியே தூக்கி வீசப்பட்டுள்ளார்.

சாலையில் வீசப்பட்ட பவானி

சாலையில் வீசப்பட்ட பவானி

சாலையில் வேகமாக வீசப்பட்ட பவானி, ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். காரும் பலமாக மோதியதுடன் சில முறை உருண்டு கிடந்துள்ளது. அதனால் தான் யாஷிகாவிற்கு இவ்வளவு மோசமாக காயம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

குமுறும் நெட்டிசன்கள்

குமுறும் நெட்டிசன்கள்

விபத்திற்குள்ளான யாஷிகா Tata Harrier காரில் சென்றுள்ளார். இது 6 ஏர்பேக்குகளைக் கொண்ட கார் வகை. சீட்பெல்ட் அணிந்திருந்தால் இந்த அளவிற்கு மோசமாக யாஷிகாவிற்கு அடிபட்டிருக்காது. அவரது தோழியும் உயிர் பிழைத்திருப்பார் என சமூக வலைதளங்களில் பலர் கருத்து கூறி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X