twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    100 நாட்களை கடந்த Hridayam திரைப்படம்… மோகன்லால் பதிவிட்ட போஸ்டர்

    |

    கேரளா : நடிகர் மோகன்லால் மகன் பிரணவ் மோகன்லால் கதாநாயகனாக நடித்த படம் Hridayam. ரொமாண்டிக் காதல் கதையாக எடுக்கப்பட்ட இந்த படத்தை இயக்கியவர் வினித் சீனிவாசன்.

    ஜனவரி மாதம் ரிலீஸ் ஆன இந்த படம் 100 நாட்களை கடந்து இருப்பதால் இதை படக்குழுவினர் தங்களது வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர். நடிகர் மோகன்லால் இதன் 101 வது நாள் போஸ்டரை பகிர்ந்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

    நடிகர் விவேக் பெயரில் சாலை...இப்படி தான் வந்தது...முழு சம்பவத்தை நெகிழ்ச்சியுடன் சொன்ன பிரபலம் நடிகர் விவேக் பெயரில் சாலை...இப்படி தான் வந்தது...முழு சம்பவத்தை நெகிழ்ச்சியுடன் சொன்ன பிரபலம்

     வினித் சீனிவாசன்

    வினித் சீனிவாசன்

    வினித் சீனிவாசன் மலையாளத்தில் பன்முகத் திறமை கொண்ட ஒரு நட்சத்திரம். பின்னணிப் பாடகராக, நடிகராக, இயக்குனராக, திரைக்கதை எழுத்தாளராக, தயாரிப்பாளராக, இசையமைப்பாளராக, டப்பிங் ஆர்டிஸ்டாக ஜொலிப்பவர். இவர் திரைக்கதையாசிரியர் ஸ்ரீனிவாசன் மகனாவார். 2008ஆம் ஆண்டு சைக்கிள் படத்தின் மூலம் மலையாள திரைத்துறையில் அறிமுகமான இவர் பல படங்களில் கதாநாயகனாகவும் பல படங்களில் இயக்குனராகவும் தொடர்ந்து பயணித்து வருபவர். தற்போது அவர் இயக்கிய சூப்பர் ஹிட்டான படம் Hridayam. இந்த ஆண்டின் முதல் சூப்பர் ஹிட் படம் என இதை சொல்லலாம். காதல் கதையை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட இந்த படம் இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

     பிரணவ மோகன்லால்

    பிரணவ மோகன்லால்

    நடிகர் மோகன்லால் மகனான பிரணவ மோகன்லால் Unnaman படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். அதற்கு பிறகு கெஸ்ட் ரோலில் சில படங்களில், துணை இயக்குனராக சில படங்களில் பணியாற்றிய பிரணவ் மோகன்லால் கதாநாயகனாக 2018ஆம் ஆண்டு ரிலீசான Aadedi படத்தில் அறிமுகமானார். அந்த படத்திற்கு பிறகு இரண்டு படங்களில் நடித்தாலும் பெரிதாக பேசப்படவில்லை. தற்போது Hridayam படத்தில் நடித்து ஒட்டுமொத்தமாக ரசிகர்கள் உள்ளத்தில் இடம் பிடித்துள்ளார். ரொமாண்டிக் காதல் கதை களத்தில் நடித்துள்ள இவர் இளைஞர்களின் மன நிலையைப் பிரதிபலிப்பதாக ரசிகர்கள் சிலாகித்துப் பேசி வருகின்றனர்.

     Hridayam படத்திற்கான வரவேற்பு

    Hridayam படத்திற்கான வரவேற்பு

    மிகவும் சாதாரணமாக ரிலீஸான Hridayam திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்று வசூலை அள்ளிக் குவித்தது. பல பத்திரிகைகள் தங்களது விமர்சனங்களில் படத்தை புகழ்ந்து தள்ளின. பிரேமம் படத்தை இயக்கிய அல்போன்ஸ் புத்திரன் பிரேமம் படத்தை விடவும் இது சிறந்த படம் என குறிப்பிட்டார். Hridayam ஒரு உண்மையான பதின்மவயது திரைப்படம் என பாராட்டி டைம்ஸ் ஆப் இந்தியா ஐந்துக்கு 3.5 புள்ளிகள் கொடுத்துள்ளது. Hridayam திரைப்படத்தில் கல்யாணி பிரியதர்ஷன் மற்றும் தர்ஷன் ராஜேந்திரன் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். இப்படத்தில் பெயர் குறிப்பிடப்படாமல் பலர் தங்களது இயல்பான நடிப்பால் படத்தை மெருகேற்றி உள்ளனர். இதில் ராஜ கணேஷ் எனும் தமிழ் நடிகர் ஒரு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவர் தமிழில் பல குறும்படங்களை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

     ஒட்டுமொத்த உரிமையை வாங்கிய கரன் ஜோகர்

    ஒட்டுமொத்த உரிமையை வாங்கிய கரன் ஜோகர்

    Hridayam படத்தின் வெற்றி தென்னிந்தியாவில் மட்டுமில்லாமல் இந்தியா முழுவதும் ஓங்கி ஒலித்து கொண்டிருக்கிறது. இந்தியில் பிரபல இயக்குனர் மற்றும் தயாரிப்பாளரான கரன் ஜோகர் Hridayam படத்தின் தமிழ், தெலுங்கு, இந்தி உரிமையை வாங்கினார். மார்ச் 25ஆம் தேதி தர்மா என்டர்டைன்மென்ட் மற்றும் பாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் Hridayam படத்தின் உரிமைகளை பெற்றதை பகிர்ந்தனர். இதைக் குறிப்பிட்டு " மிகவும் சந்தோஷமாகவும் மிகவும் பெருமையாகவும் இருக்கிறது. Hridayam படத்தின் தமிழ் தெலுங்கு ஹிந்தி உரிமைகளை வாங்கி உள்ளோம் என கரன் ஜோகர் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டார். இன்று Hridayam பணத்தின் 101 நாளை கொண்டாடும் விதமாக படக்குழுவினர் படத்தில் பங்கேற்ற திரைக்கலைஞர்கள் போட்டோக்கள் அடங்கிய ஒரு போஸ்டரை வெளியிட்டு தங்களது மகிழ்ச்சியை தெரிவித்து வருகின்றனர். இவர்களைப் போலவே நடிகர் மோகன்லால் அதை ஷேர் செய்து தனது மகிழ்ச்சியை தெரிவித்து இருக்கிறார்.

    English summary
    Hridayam Movie Crossed 100 Days , Mohanlal Posted a Poster
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X