Hridayapoorvam Review: மோகன்லால், மாளவிகா மோகனனின் ஹிருதயபூர்வம்.. ப்ளூ சட்டை மாறன் விமர்சனம்!

சென்னை: இந்த வாரம் மலையாளத்தில் மோகன்லால் நடித்த ஹிருதயப்பூர்வம் மற்றும் கல்யாணி பிரியதர்ஷன் நடிப்பில் உருவாகியுள்ள லோகா உள்ளிட்ட திரைப்படங்கள் வெளியாகி உள்ளன. இரண்டு படங்களுக்கும் பாசிட்டிவ் விமர்சனங்கள் குவிந்து வருகின்றன. ஹிருதயப்பூர்வம் படத்திற்கு ப்ளூ சட்டை மாறன் எப்படி விமர்சனம் அளித்துள்ளார் என்பதை இங்கே காணலாம்.

70 வயதாகும் இயக்குநர் சத்யன் அந்திக்காட் இயக்கத்தில் மோகன்லால், மாளவிகா மோகனன் நடித்துள்ள ஹிருதயப்பூர்வம் டைட்டிலுக்கு ஏற்றபடி ஹிருதயப்பூர்வமாகவே உள்ளது படத்துக்கான பெரிய பலம் என ப்ளூ சட்டை மாறன் பேசியுள்ளார்.

Hridayapoorvam Review Blue Sattai Maran talks about positives and negatives in the Mohanlal movie
Photo Credit:

படத்தின் முதல் பாதியில் நிறைய நிறைகள் உள்ளதாகவும் இரண்டாம் பாதியில் சில குறைகள் சோதிப்பதாகவும் ப்ளூ சட்டை மாறன் தனது விமர்சனத்தில் குறிப்பிட்டுள்ளார். அவர் சொல்லியிருக்கும் பாசிட்டிவ் மற்றும் நெகட்டிவ்களை இங்கே பார்க்கலாம் வாங்க..

ப்ளூ சட்டை மாறன் ஹிருதயப்பூர்வம் விமர்சனம்: மோகன்லால் இந்த ஆண்டு ஏற்கனவே எம்புரான், தொடரும் என 2 ஹிட் படங்களை கொடுத்த நிலையில், 3வது வெற்றிப் படமாக ஹிருதயப்பூர்வம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. படத்தின் கதையாக ப்ளூ சட்டை மாறன் சொல்லியிருப்பது என்னவென்றால், "ஹீரோ மோகன்லாலுக்கு ஹார்ட்டில் கோளாறு அவருக்கு ஹார்ட் டிரான்ஸ்பிளாண்ட் நடைபெறுகிறது. அதன் பின்னர், அவரை சந்திக்க மாளவிகா மோகனன் வருகிறார். அவருடைய அப்பாவின் இதயத்தை தான் மோகன்லாலுக்கு பொருத்தியுள்ளதாக கூறுகிறார்.

அப்பா இல்லாத நிலையில், அப்பா ஸ்தானத்தில் தனது திருமணத்தை நடத்தி வைக்க மோகன்லாலை அழைக்கிறார். மோகன்லால் அங்கே சென்றாரா? அதன் பின் என்ன ஆனது? என்பது தான் இந்த படத்தின் கதை எனக் கூறியுள்ளார்.

முதல் பாதி சூப்பர்: வயதான இயக்குநர்கள் என்றாலே அவுட்டேட்டட் என இந்த காலத்து பசங்க சொல்ல ஆரம்பித்து விடுகின்றனர். ஆனால், இயக்குநர் சத்யன் அந்திக்காட் 70 வயதிலும் புதுமையான பல விஷயங்களை படத்தில் காட்டி ரசிகர்களை கட்டிப் போடுகிறார். சென்டிமென்ட் படமாக இருந்தாலும் சரியான இடத்தில் நகைச்சுவை காட்சிகளில் படம் முழுக்கத் தூவி பார்வையாளர்களை போரடிக்காமல் பார்க்க வைக்கிறார் என்றார்.

2ம் பாதியில் குறைகள்: ஆனால், 2ம் பாதியில் சில நடிகர்கள் வரும் காட்சிகள் எல்லாம் வேண்டுமென்றே திணிக்கப்பட்டது போன்று இருந்தது. அதையெல்லாம் கொஞ்சம் சரி செய்திருக்கலாம். உறவுமுறை குறித்த சிக்கல் வந்துவிடும் கதையை அழகாக கையாண்ட விதம் சிறப்பு. அடிதடி, ஆக்‌ஷன் எல்லாம் இல்லாமல் ஃபீல் குட் படமாக எடுத்துள்ளார் இயக்குநர் என விமர்சித்துள்ளார். பகத் ஃபாசில் தான் பிடிக்கும் என ஒரு நபர் மோகன்லாலிடம் சொல்லும் காட்சிகளை எல்லாம் இங்கே வைக்க பல ஹீரோக்களுக்கு தைரியமே வராது என்பதையும் சுட்டிக் காட்டியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X