ரூ.15 கோடி வரி கட்டிய ஹிருத்திக்
பாலிவுட் இளம் சூப்பர் ஸ்டார் ஹிருத்திக் ரோஷன் ரூ. 15 கோடி வருமான வரி கட்டி சாதனை படைத்துள்ளார்.
இந்தித் திரையுலகிலேயே அதிக அளவு வருமான வரி கட்டி வருபவர் எப்போதுமே ஷாருக் கான்தான். ஆனால் இப்போது ஷாருக்கை முந்தியுள்ளார், ஹிருத்திக்.2006-07ம் ஆண்டில் தனது வருமானத்திற்கான வரியாக ரூ. 15.10 கோடியைக் கட்டியுள்ளார் ரோஷன். இது ஒரு புதிய சாதனையாகும்.
பாலிவுட்டில் தனி நபராக அதிக அளவுக்கு வரி கட்டியவர் ரோஷன்தான்.
2வது இடத்தில் ஷாருக்கான் தான் உள்ளார். அவர் ரூ. 14 கோடி வரியைக் கட்டியுள்ளார்.
இவர்களுக்கு அடுத்த இடங்களில் அக்ஷய் குமார், கரீனா கபூர், சச்சின் டெண்டுல்கர், ஜான் ஆப்ரகாம் ஆகிேயார் உள்ளனர். இவர்களது வருமான வரியும் கோடிக்கணக்கில்தான்.
நம்ம ஊரில் யாருப்பா அதிக வரி கட்டப் போவது?
Comments
akshaykumar அக்ஷய் குமார் கரீனா கபூர் கோடி சச்சின் டெண்டுல்கர் ஜான் ஆப்ரகாம் வரி ஷாருக்கான் cinema bollywood hrithick income kareena roshan salman sharhuk tax


Click it and Unblock the Notifications