2.0 படத்திற்காக காத்திருக்கும் ஹ்ரித்திக் ரோஷன்
மும்பை: ரஜினியின் 2.0 திரைப்படத்தை எதிர்நோக்கி காத்திருப்பதாக பாலிவுட் நடிகர் ஹ்ரித்திக் ரோஷன் தெரிவித்துள்ளார்.
ஷங்கரின் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள படம் 2.0. மிகப் பிரமாண்டமாக லைகா புரடொக்ஷன்ஸ் தயாரித்திருக்கும் இப்படத்தில் அக்ஷய்குமார், எமி ஜாக்சன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

இது தொடர்பாக ஹ்ரித்திக் ரோஷன் ட்வீட் செய்துள்ளார். 2.0 டிரைலர் பார்த்தேன், ஷங்கர் சார் மீண்டும் அதை செய்திருக்கிறார். ஆகையால் இப்படத்திற்காக காத்திருக்கிறேன். ஒட்டு மொத்த படக்குழுவுக்கும் வாழ்த்துக்கள் என ஹ்ரித்திக் ரோஷன் ட்வீட் செய்துள்ளார்.
ரஜினி படத்திற்காக ஹ்ரித்திக் ட்வீட் செய்ததைப் பார்த்த நெட்டிசன்கள், ரஜினிகாந்துடன் ஹ்ரித்திக் ரோஷன் குழந்தை நட்சத்திரமாக நடித்த பகவான் தாதா என்ற இந்தி படத்தின் காட்சிகளை வெளியிட்டு வருகின்றனர்.
இத்திரைப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியானது. டீசர் பார்த்தபோது ஏற்பட்ட சந்தேகங்களில் ரசிகர்களுக்கு தெளிவு கிடைத்தாலும் படம் பார்க்கும் ஆர்வத்தை அதிகப்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











