War 2 Trailer: ரெண்டு பேருமே ஹீரோவா?.. ரசிகர்களை குழப்பிய வார் 2 டிரைலர்.. கூலி தாக்கு பிடிக்குமா?
மும்பை: அயன் முகர்ஜி இயக்கத்தில் ஹ்ரித்திக் ரோஷன், ஜூனியர் என்டிஆர், கியாரா அத்வானி நடிப்பில் உருவாகியுள்ள வார் 2 படத்தின் டிரைலர் சற்றுமுன் தமிழ், இந்தி, தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் வெளியாகி உள்ளது. வரும் ஆகஸ்ட் 14ம் தேதி ரஜினிகாந்தின் கூலி படத்துடன் பான் இந்திய அளவில் இந்த படம் போட்டி போடுகிறது.
டாம் க்ரூஸுக்கே சவால் விடும் அளவுக்கு விமானத்தில் நடைபெறும் சண்டைக் காட்சிகளில் ஹ்ரித்திக் ரோஷன் மற்றும் ஜூனியர் என்டிஆர் மாஸ் காட்டுகின்றனர். ஆனால், என்னதான் இருந்தாலும், அவை சிஜி காட்சிகள் என்பது தெள்ளத்தெளிவாக தெரிகிறது.

சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் வெளியான வார் படம் மிகப்பெரிய வெற்றியை ஹ்ரித்திக் ரோஷனுக்கு அளித்த நிலையில், அதன் 2ம் பாகத்தை அயன் முகர்ஜி முதல் பாகத்தை விட இன்னமும் பிரம்மாண்டமாக உருவாக்கியுள்ளார் என்பது டிரைலரை பார்த்தாலே தெரிகிறது.
இந்தியா ஃபர்ஸ்ட்: வார் படத்திலும் ஹ்ரித்திக் ரோஷன் மற்றும் டைகர் ஷெராஃப் இடையே மோதல் காட்சிகள் அதிகம் இருக்கும். ஹ்ரித்திக் ரோஷனின் டீமில் இருந்த டைகர் ஷெராஃப் எப்படி வில்லனாக மாறினார் என்பதற்கு சூப்பரான காட்சிகளை வைத்திருப்பார்கள். இந்நிலையில், இந்த படத்திலும் ஜூனியர் என்டிஆர் அப்படி மாறி நடித்தால் நல்லா இருக்காதே என்கிற பேச்சுக்கள் அடிபட்டு வந்த நிலையில், ஹ்ரித்திக் ரோஷன் மற்றும் ஜூனியர் என்டிஆர் இருவருமே இந்தியா ஃபர்ஸ்ட் என சொல்வதும், இருவரும் நாட்டுக்கான சீக்ரெட் மிஷனில் சாதிக்கத் துடிக்கும் போர் வீரர்கள் என்பதையும் காட்டி யாருப்பா ஹீரோ, யாருப்பா வில்லன் ரெண்டு பேருமே ஹீரோவா என்கிற ஏகப்பட்ட கேள்விகளை இந்த டிரைலர் எழுப்பியிருக்கிறது.
ஜூனியர் என்டிஆர் வில்லன் இல்லையா?: வார் 2 படத்தில் ஜூனியர் என்டிஆர் தான் மெயின் வில்லன் என்றதும் பாகிஸ்தானுக்காக அவர் ஹ்ரித்திக் ரோஷனிடம் சண்டை போடுவார் என்றே பலரும் எதிர்பார்த்தனர். ஆனால், அவரும் இந்தியாவுக்காக ஹ்ரித்திக் ரோஷனிடம் சண்டை போட ஒரு வேளை இந்த படத்தில் ஹ்ரித்திக் ரோஷனை டபுள் ஆக்கிவிட்டார்களா என்கிற கேள்விகளும் எழுகிறது. ஆனால், கண்டிப்பாக படத்தில் அதற்கான ட்விஸ்ட் சரியான இடத்தில் வெளிப்படும் என்றும் இருவரையும் தாண்டி ஒரு பெரிய வில்லனை காட்டுவார்கள் என்றே தெரிகிறது என எதிர்பார்க்கலாம்.

கியாரா அத்வானி ஓவர் கவர்ச்சி: வார் படத்தில் வாணி கபூரும், ஃபைட்டர் படத்தில் தீபிகா படுகோனேவும் ஹ்ரித்திக் ரோஷனுடன் இணைந்து கிளாமர் காட்சிகளில் நடித்திருப்பார்கள். திருமணமாகி குழந்தையை பெற்ற நடிகை கியாரா அத்வானி பிகினியில் வரும் அந்த ஒரு சீனே டிரைலரில் அதிகளவில் ரிப்பீட் மோடிலும் பாஸ் செய்யப்பட்டும் தற்போது பார்க்கப்பட்டு வருகிறது. மேலும், ஹ்ரித்திக் ரோஷனுடன் லிப் லாக் கிஸ் எல்லாம் அடித்து திருமணமானால் கூட நடிகைகள் நடிப்புக்காக எந்தளவுக்கு வேண்டுமானாலும் தாராளம் காட்டலாம் என்பதை நிரூபித்துள்ளார். பல நடிகைகள் திருமணத்துக்குப் பிறகு நோ லிப் லாக், நோ கிளாமர் என போர்டு வைப்பதால் தான் ஹீரோக்கள் அவர்களை ஒதுக்குகின்றனர் என்றும் கூறுகின்றனர்.
கூலிக்கு ஆபத்தா?: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள கூலி படத்துக்கு போட்டியாக வார் 2 திரைப்படம் வெளியாகிறது. பாலிவுட் மற்றும் டோலிவுட்டில் கண்டிப்பாக பெரிய கலெக்ஷனை அள்ளி கூலி படத்துக்கு பாக்ஸ் ஆபீஸில் கடுமையான போட்டியை வார் 2 கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதையும் தாண்டி லோகேஷ் கனகராஜ் ரஜினிகாந்தை வைத்து என்ன சம்பவம் செய்யப் போகிறார் என்பதை பார்க்க ரசிகர்கள் வெயிட்டிங்.


Click it and Unblock the Notifications











