twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    விக்ரம் வேதா பாக்ஸ் ஆபிஸ் கலெக்‌ஷன்: 5வது நாளில் வசூல் எவ்வளவுன்னு தெரியுமா?

    |

    மும்பை: விஜய் சேதுபதி, மாதவன் நடிப்பில் தமிழில் வெளியான விக்ரம் வேதா திரைப்படம் ப்ளாக் பஸ்டர் ஹிட் அடித்தது.

    விக்ரம் வேதா இந்தி ரீமேக்கையும் புஷ்கர் காயத்ரியே இயக்க ஹிருத்திக் ரோஷன், சயிப் அலிகான் நடித்துள்ளனர்.

    செப்டம்பர் 30ம் தேதி பொன்னியின் செல்வனுடன் வெளியான விக்ரம் வேதா வசூலில் கொஞ்சம் தடுமாறி வருகிறது.

    பாலிவுட்டில் பட்டய கிளப்பிய நம்ம ஊரு 'விக்ரம் வேதா’ இசையமைப்பாளர் சாம்.சி.எஸ்..பிஜிஎம்-ன் ரியல் ஹீரோபாலிவுட்டில் பட்டய கிளப்பிய நம்ம ஊரு 'விக்ரம் வேதா’ இசையமைப்பாளர் சாம்.சி.எஸ்..பிஜிஎம்-ன் ரியல் ஹீரோ

    கோலிட் மாஸ் ஹிட் விக்ரம் வேதா

    கோலிட் மாஸ் ஹிட் விக்ரம் வேதா

    விஜய் சேதுபதி, மாதவன் நடிப்பில் 2017ம் ஆண்டு வெளியான விக்ரம் வேதா, கோலிவுட் ரசிகர்களிடம் சிறப்பான வரவேற்பை பெற்றது. ஆக்சன் த்ரில்லர் ஜானரில் உருவாகியிருந்த இந்தப் படத்தில், விஜய் சேதுபதி, மாதவன் இருவரின் நடிப்பும் ரசிகர்களை சிலிர்க்க வைத்தது. இந்தப் படத்தை புஷ்கர் காயத்ரி தம்பதியினர் இயக்கியிருந்தனர். விக்ரம் வேதா படத்தின் வெற்றியில் பெரும்பங்கு திரைக்கதை தான் என விமர்சகர்கள் கூறினர். சுமார் 12 கோடி பட்ஜெட்டில் உருவான இந்தப் படம் மொத்தம் 60 கோடி வரை வசூலித்து மாஸ் காட்டியது.

    இந்தியில் வெளியான விக்ரம் வேதா

    இந்தியில் வெளியான விக்ரம் வேதா

    விக்ரம் வேதாவுக்கு தமிழில் கிடைத்த சிறப்பான வரவேற்பைத் தொடர்ந்து, இந்தியிலும் ரீமேக் செய்யப்பட்டது. இந்தியிலும் புஷ்கர் காயத்ரி இயக்கிய விக்ரம் வேதா படத்தில், ஹிருத்திக் ரோஷன், சயிப் அலிகான் உள்ளிட்ட பலர் நடித்தனர். விஜய் சேதுபதி கேரக்டரில் ஹிருத்திக் ரோஷனும், மாதவன் ரோலில் சயிப் அலிகானும் நடித்துள்ளனர். தமிழை விட இந்தியில் மிகப் பிரம்மாண்டமாக உருவான இந்தப் படம், செப்டம்பர் 30ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது. .

    கலவையான விமர்சனம்

    கலவையான விமர்சனம்

    இந்நிலையில், விக்ரம் வேதா இந்தி வெர்ஷனுக்கு ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களே கிடைத்துள்ளன. ஐதராபாத், மேற்குவங்கம், மைசூர், ஆந்திரா பகுதிகளில் கலெக்‌ஷன் நன்றாக இருந்தாலும், பாலிவுட் ரசிகர்களிடம் எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்கவில்லை என சொல்லப்படுகிறது. தசரா விடுமுறையால் மட்டும் விக்ரம் வேதா படத்தின் கலெக்‌ஷன் ஓரளவுக்கு நம்பிக்கை கொடுக்கும்விதமாக இருக்கிறதாம். முதல் நாளில் 11 கோடியும், இரண்டாவது நாளில் 13 கோடியும், ஞாயிற்றுகிழமை அன்று 14 கோடியும் வசூல் செய்திருந்தது.

    50 கோடியை கடந்தது

    50 கோடியை கடந்தது

    இந்நிலையில், முதல் வாரத்தை கடந்த நிலையில், விக்ரம் வேதா திரைப்படம் மொத்தம் 50 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. 5 நாட்களில் 50 கோடியை மட்டுமே வசூலித்துள்ளதால் விக்ரம் வேதா குழுவினர் ஏமாற்றம் அடைந்துள்ளனர். பொன்னியின் செல்வன் படம் வெளியான தினத்தில் விக்ரம் வேதாவும் ரிலீஸானதால், ரசிகர்களிடம் பெரிய வரவேற்பு கிடைக்கவில்லை எனவும் சொல்லப்படுகிறது. தமிழ் வெர்ஷனைப் போல அப்படியே எடுக்காமல், இந்தி ரசிகர்களுக்காக பல மாற்றங்கள் செய்து விக்ரம் வேதா வெளியாகியும், வசூலில் தடுமாறி வருவதாகக் கூறப்படுகிறது.

    English summary
    Pushkar Gayatri directed a Hindi remake of Vikram Vedhha released on September 30. The film has received positive to mixed reviews from the audience and critics. Vikram Vedha total collection now stands at 50 crore
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X