War 2 X Review: கூலிக்கு சரியான சவால் கொடுக்குதா வார் 2.. படம் எப்படி இருக்கு? ட்விட்டர் விமர்சனம்!
மும்பை: ஹ்ரித்திக் ரோஷன், ஜூனியர் என்.டி.ஆர் ஆகியோர் இணைந்து நடித்து உருவாகியுள்ள படம் வார் 2. ஆர்.ஆர். ஆர். படத்திற்கு பின்னர் ஜூனியர் என்.டி.ஆர் பான் இந்தியா ஸ்டாராக உயர்ந்துவிட்டார். யாஷ் ராஜ் பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள வார் 2 படத்தை அயான் முகர்ஜி இயக்கியுள்ளார். படத்தில் நடிகை கியாரா அத்வானி உச்சபட்ச கவர்ச்சியாக நடித்துள்ளார். படத்திற்கு உலகம் முழுவதும் நல்ல எதிர்பார்ப்பு இருந்து வந்த நிலையில், படம் இன்று அதாவது ஆகஸ்ட் 14ஆம் தேதி ரிலீஸ் ஆகியுள்ளது. படம் பார்த்த ரசிகர்கள் பலரும் தங்களது விமர்சனத்தை எக்ஸ் பக்கத்தில் தெரிவித்து வருகிறார்கள்.
ரசிகர் ஒருவர் தனது எக்ஸ் பக்கத்தில், " படத்தின் டீசரிலோ, டிரைலரிலோ படக்குழு எதையும் வெளிக்காட்டவில்லை. படத்தின் முதல் பாதி நம்மை இருக்கையின் நுனிக்கே அழைத்துக் கொண்டு வந்துவிடும். பின்னணி இசை நன்றாக உள்ளது. சண்டைக் காட்சிகளை பெரிய திரையில் பார்ப்பதற்கு நன்றாக உள்ளது. இதுவரை வந்த பாலிவுட் படங்களில் குறிப்பாக ஸ்பை சப்ஜெக்ட் படங்களில் வார் 2 மொத்தமாகவே வித்தியாசமான படம்" என பதிவிட்டுள்ளார்.
மற்றொரு ரசிகர் கூறுகையில், படத்தின் இரண்டாம் பாதியும் நன்றாகத்தான் உள்ளது. ஆனால் சில காட்சிகள் ஒர்க் அவுட் ஆகவில்லை. அதேபோல், திரைக்கதையை யூகிக்க முடிகிறது. ஹ்ரித்திக் ரோஷன் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் ஆகியோர் தங்களது கதாபாத்திரங்களை மிகச் சிறப்பாக செய்துள்ளார்கள். குறிப்பாக ஜூனியர் என்.டி.ஆரின் கதாபாத்திரமும், அந்த கதாபாத்திரத்தில் அவர் நடித்த விதமும் சிறப்பாக உள்ளது. படம் வெற்றி அடையும். ஆனால் பாக்ஸ் ஆபிஸில் எந்த அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை கூலி படத்தின் விமர்சனத்தை பொறுத்துதான் சொல்ல முடியும்" எனப் பதிவிட்டுள்ளார்.

இன்னொருவர் கூறுகையில், " ஜூனியர் என்.டி.ஆர் படத்தின் தூணாக உள்ளார். அவரது கதாபாத்திரமும் அதற்கு அவர் நடித்த விதமும் சிறப்போ சிறப்பு. படம் நன்றாக உள்ளது. பாலிவுட் சினிமா உலகில் இந்த படம் மாஸ்டர் பீஸாக இருக்கும்" என்று பதிவிட்டுள்ளார். " இருவருக்கும் என்ட்ரி, சண்டைக் காட்சிகள் கிளைமேக்ஸ் என மொத்த படமும் பிரமாதமாக உள்ளது என்று பதிவிட்டுள்ளார். வார் 2 படத்தின் ரிலீஸை ஒட்டி வார் 2 மற்றும் வார் 2 ரிவ்யூவ் என்ற ஹேஷ்டேக்குகள் ட்விட்டர் பக்கத்தில் டிரெண்ட்டாகிக் கொண்டு உள்ளன.


Click it and Unblock the Notifications











