விலகினார் ஆமிர்கான்.. விக்ரம் வேதா இந்தி ரீமேக்கில் இணைந்த சூப்பர் ஹீரோ.. யாரு தெரியுமா?

சென்னை: விக்ரம் வேதா படத்தின் இந்தி ரீமேக்கில் இருந்து நடிகர் ஆமிர்கான் சமீபத்தில் விலகியதாக தகவல் பரவிய நிலையில், தற்போது பாலிவுட்டின் சூப்பர் ஹீரோ இணைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

புஷ்கர்-காயத்ரி இயக்கத்தில் தமிழில் வெளியான விக்ரம் வேதா திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

விஜய்சேதுபதி, மாதவன் லீடு ரோலில் நடித்து இருந்தனர். நடிகர் கதிர், ஷ்ரத்தா ஸ்ரீநாத் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

பிளாக்பஸ்டர் விக்ரம் வேதா

பிளாக்பஸ்டர் விக்ரம் வேதா

ஆர்யாவின் ஓரம் போ படத்தை இயக்கிய புஷ்கர் மற்றும் காயத்ரி தம்பதி இயக்குநர்கள், நடிகர் மாதவன் மற்றும் விஜய்சேதுபதி நடிப்பில் உருவாக்கிய விக்ரம் வேதா திரைப்படம் இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்து மிகப்பெரிய வெற்றியை பெற்றது. பாலிவுட், டோலிவுட் என இந்த படத்தின் ரீமேக் உரிமைக்காக சினிமா உலகம் போட்டிப் போட்டது.

ஷாருக்கானுக்கு ஆசை

ஷாருக்கானுக்கு ஆசை

விக்ரம் வேதா படத்தை பாலிவுட்டில் பண்ண வேண்டும் என நடிகர் ஷாருக்கான் ரொம்பவே ஆசைப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. மேலும், இயக்குநர் வெற்றிமாறன் மற்றும் அட்லி உள்ளிட்டோரிடமும் கதை கேட்டார். இயக்குநர் அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடிக்கவிருப்பது உறுதியாகி உள்ளது.

வெளியேறிய ஆமிர்கான்

வெளியேறிய ஆமிர்கான்

ஆனால், ஷாருக்கான் அந்த படத்தை ஒப்பந்தம் செய்யாத நிலையில், நடிகர் ஆமிர்கான் விஜய்சேதுபதி நடித்த வேதா கதாபாத்திரத்தில் நடிக்க முடிவு செய்து இருந்தார். ஆனால், சில நாட்களுக்கு முன்னதாக விக்ரம் வேதா படத்தில் இருந்து நடிகர் ஆமிர்கான் வெளியேறி விட்டார் என்கிற பரபரப்பு தகவல் வெளியானது.

இவர் தான் வேதா

இவர் தான் வேதா

இந்நிலையில், தற்போது இந்தியன் சூப்பர் ஹீரோ நடிகரான ஹிரித்திக் ரோஷன், விஜய்சேதுபதி நடித்த வேதா கதாபாத்திரத்தில் நடிக்கப் போவதாக தகவல்கள் கசிந்துள்ளன. கூடிய விரைவில் இது தொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்தில் வொண்டர் வுமன் படத்தை தியேட்டரில் பார்த்து பாராட்டியிருந்தார் ஹிரித்திக் ரோஷன்.

விக்ரம் யாரு?

விக்ரம் யாரு?

தமிழில் நடிகர் மாதவன் நடித்த விக்ரம் கதாபாத்திரத்தில் பிரபல பாலிவுட் நடிகர் சைஃப் அலி கான் ஒப்பந்தமாகி உள்ளார். நடிகர் பிரபாஸின் ஆதிபுருஷ் படத்தில் ராவணனாக நடித்து வரும் சைஃப் அலி கான், விக்ரம் கதாபாத்திரத்தில் ஒப்பந்தம் ஆகி இருப்பது குறிப்பிடத்தக்கது. விரைவில் சைஃப் அலி கானின் தாண்டவ் திரைப்படமும் திரைக்கு வருவது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X