ஹிரித்திக் ரோஷனின் புதிய காதலி இவங்க தானா? நண்பன் பட பாணியில் காதலை சொல்லிட்டாங்களே!

மும்பை: பிரபல பாலிவுட் நடிகர் ஹிரித்திக் ரோஷனின் புதிய காதலி குறித்த பரபரப்பு தகவல்கள் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

பாலிவுட் நடிகர் சஞ்சய் கானின் மகள் சூசேன் கானை கடந்த 2000ம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட ஹிரித்திக் ரோஷன் பின்னர் அவரை விவாகரத்து செய்தார்.

கங்கனா ரனாவத்துக்கும் ஹிரித்திக் ரோஷனுக்கும் இடையே காதல் என ரூமர்கள் கிளம்பின. பின்னர் இருவருக்கும் இடையே மிகப்பெரிய சட்ட மோதலும் வெடித்தன. இந்நிலையில், ஹிரித்திக் ரோஷனின் புதிய காதல் குறித்த கன்ஃபார்ம் ஆன தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஹிரித்திக் ரோஷன்

ஹிரித்திக் ரோஷன்

பாலிவுட் நடிகர் ஹிரித்திக் ரோஷனுக்கு 48 வயதாகிறது. பிரபல பாலிவுட் இயக்குநர் ராகேஷ் ரோஷனின் மகனான ஹிரித்திக் ரோஷன் அப்பாவின் படங்களில் சிறு வயதில் இருந்தே குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். 2000ம் ஆண்டு வெளியான கஹோ நா பியார் ஹை படத்தின் மூலம் பாலிவுட்டில் ஹீரோவாக அறிமுகமானார்.

சூப்பர் ஹீரோ

சூப்பர் ஹீரோ

சக்திமானுக்கு பிறகு இந்தியாவின் சூப்பர் ஹீரோ என்றால் அது ஹிரித்திக் ரோஷனின் க்ரிஷ் கதாபாத்திரம் தான். 2003ம் ஆண்டு வெளியான கொய் மில் கயா படத்தின் தொடர்ச்சியாக 2006ம் ஆண்டு வெளியான க்ரிஷ் முதல் பாகம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அதன் பின்னர் 2013ம் ஆண்டு கங்கனா ரனாவத் உடன் க்ரிஷ் 3 படத்திலும் சூப்பர் ஹீரோவாக நடித்து அசத்தினார் ஹிரித்திக் ரோஷன்.

தூம் 2

தூம் 2

2006ம் ஆண்டு வெளியான தூம் 2 திரைப்படம் இன்றளவும் ஹிரித்திக் ரோஷனுக்கு மிகப்பெரிய படமாக உள்ளது. யாஷ்ராஜ் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவான இந்த படத்தில் மிஸ்டர் A கதாபாத்திரத்தில் வித வித கெட்டப்புகளை போட்டு நடித்து மிரட்டி இருப்பார் ஹிரித்திக் ரோஷன். ஏ.ஆர். ரஹ்மான் இசையில் வெளியான தூமச்சாலே பாடல் மிகப்பெரிய ஹிட் அடித்தது.

திருமணமும் விவாகரத்தும்

திருமணமும் விவாகரத்தும்

ஹீரோவாக அறிமுகமான 2000ம் ஆண்டே சூசேன் கானை திருமணம் செய்து கொண்டார் நடிகர் ஹிரித்திக் ரோஷன். ஹிரேஹன் ரோஷன் (16 வயது), ஹிரிதன் ரோஷன் (14 வயது) என இரு மகன்கள் இந்த தம்பதியினருக்கு உள்ளனர். ஆனால், கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2014ம் ஆண்டு 14 ஆண்டு திருமண பந்தத்தை முறித்துக் கொண்டார் ஹிரித்திக் ரோஷன்.

கங்கனா ரனாவத்துடன் மோதல்

கங்கனா ரனாவத்துடன் மோதல்

2010ம் ஆண்டு வெளியான கைட்ஸ் படத்தில் ஹிரித்திக் ரோஷன் மற்றும் கங்கனா ரனாவத் இணைந்து நடித்திருந்தனர். அந்த படத்தில் நடித்த போது இருவரும் காதலித்து வந்ததாக வதந்திகள் கிளம்பின. பின்னர், கிரிஷ் 3ம் பாகத்திலும் இருவரும் இணைந்து நடித்தனர். ஹிரித்திக் ரோஷன் பற்றி கங்கனா ரனாவத் பேட்டி ஒன்றில் சொன்ன கமெண்ட் இருவருக்கும் இடையே பிரச்சனையை கிளப்பியது.

ஹிரித்திக் ரோஷனின் புதிய காதல்

ஹிரித்திக் ரோஷனின் புதிய காதல்

இந்நிலையில், சபா ஆஸாத் எனும் 31 வயது இளம் நடிகையுடன் நடிகர் ஹிரித்திக் ரோஷன் காதலில் விழுந்துள்ளார் என்கிற தகவல் பாலிவுட்டில் கடந்த சில நாட்களாகவே காட்டுத் தீ போல பரவி வருகிறது. இருவரும் டேட்டிங் சென்ற புகைப்படங்களையும் சோஷியல் மீடியாவில் நெட்டிசன்கள் ஷேர் செய்து வருகின்றனர்.

கன்ஃபார்ம் பண்ண நடிகை

கன்ஃபார்ம் பண்ண நடிகை

இந்நிலையில், 'மினிமம்' எனும் படத்தில் இணைந்துள்ள நடிகை சபா ஆஸாத்துக்கு ஹிரித்திக் ரோஷன் ஸ்பெஷலாக பாராட்டுத் தெரிவித்துள்ளார். அப்போது, அதற்கு பதில் அளித்த நடிகை சபா ஆஸாத், 'Mon Amour' என போட்டுள்ள கமெண்ட் மூலம் நடிகைக்கும் ஹிரித்திக் ரோஷனுக்கும் இருக்கும் காதல் உண்மை தான் என்பது கன்ஃபார்ம் ஆகி உள்ளதாக கூறப்படுகிறது.

நண்பன் பட பாணியில்

நண்பன் பட பாணியில்

ஷங்கர் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான நண்பன் படத்தில் அஸ்க்கு அஸ்க்கு பாடலில் இடம்பெறும் ஆமர் என்கிற வார்த்தையை சபா ஆஸாத் பயன்படுத்தி உள்ள நிலையில், பிரெஞ்சு மொழியில் ஆமர் என்றால் காதல் என்பதால் இருவருக்கும் இடையே காதல் தீ பற்றிக் கொண்டதை உறுதி செய்துள்ளார் என நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். இதுதொடர்பாக ஹிரித்திக் ரோஷன் இன்னமும் எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை. இருவரும் விரைவில் தங்கள் காதலை அறிவிப்பார்களா? திருமணம் எப்போது என ஏகப்பட்ட யூகங்கள் கிளம்பி உள்ளன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X