பிரிந்த போதிலும் மகனின் பிறந்தநாளுக்காக ஒன்று சேர்ந்த நடிகர் ரித்திக், சூசன்
மும்பை: பிரிந்து வாழும் நடிகர் ரித்திக் ரோஷனும், அவரது மனைவி சூசனும் தங்களின் மூத்த மகனின் பிறந்தநாளுக்காக பல மாதங்கள் கழித்து ஒன்று சேர்ந்தனர்.
பாலிவுட் நடிகர் ரித்திக் ரோஷன் சூசனை பல ஆண்டுகள் காதலித்து அதன் பிறகு கடந்த 2000ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு ரிஹான், ரிதான் என்று இரண்டு மகன்கள் உள்ளனர்.
இந்நிலையில் கடந்த டிசம்பர் மாதம் சூசன் ரித்திக்கை விட்டு பிரிந்து சென்றார்.

மகன்கள்
சூசன் கணவனை பிரிந்து தனது தாய் வீட்டுக்கு சென்றபோது 2 மகன்களையும் தன்னுடன் அழைத்துச் சென்றுவிட்டார்.

கவலை
காதல் மனைவி பிரிந்து சென்றதை அடுத்து ரித்திக் கவலையுடனேயே சுற்றிக் கொண்டிருக்கிறார். பேங் பேங் படத்தில் நடிக்கும் அவருக்கு கத்ரீனா கைஃப் தான் ஆறுதல் கூறி வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

மகன் பிறந்தநாள்
இந்நிலையில் சூசன் தனது மூத்த மகன் ரிஹானின் 8வது பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடினார். பிறந்தநாளையொட்டி மும்பை வெர்சாவோ பகுதியில் உள்ள தனது வீட்டில் பார்ட்டி கொடுத்தார்.

முதல் சந்திப்பு
மகனின் பிறந்தநாள் பார்ட்டியில் ரித்திக் கலந்து கொண்டார். சூசனை பிரிந்த பிறகு அவர் தற்போது தான் அவரை மீண்டும் சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சூசன்
ரித்திக்கை பிரிந்த பிறகு சூசன் பல்வேறு பார்ட்டிகளுக்கு சென்று வருகிறார். தான் தற்போது மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











