கொரோனாவால் இணைந்த குடும்பம்.. பிரபல ஹீரோவின் விவாகரத்து மனைவி, வீடு தேடி வந்தார்.. எல்லாம் அதுக்காக!

By

மும்பை: பிரபல ஹீரோவின் விவாகரத்தான மனைவி, வீடு தேடி வந்ததை நெகிழ்ச்சியாகக் குறிப்பிட்டிருக்கிறார், அந்த ஹீரோ.

Recommended Video

Unimaginable! Hrithik Roshan joins Ex-Wife Sussanne Khan

சினிமாவில் நடிகர், நடிகைகள் காதலித்து திருமணம் செய்துகொள்வது வழக்கமானதுதான். அதே நேரம் விவாகரத்தும் தெரிந்த விஷயம்தான்.

காதலர்களாக ஒன்றாக இருக்கும் நடிகர், நடிகைகள், திருமணமான சில வருடங்களில் விவாகரத்து பெற்று விடுகின்றனர்.

ஹிர்த்திக் ரோஷன்

ஹிர்த்திக் ரோஷன்

அப்படி விவாகரத்து பெற்றவர்கள் பிரபல இந்தி ஹீரோ ஹிர்த்திக் ரோஷனும் அவர் மனைவி சுஸானே கானும். ஆரம்பத்தில் அப்பா ராகேஷ் ரோஷன் இயக்கிய படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றிய ஹிர்த்திக், கஹோனா பியார் ஹை என்ற படம் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். இதை ராகேஷ் ரோஷன் இயக்கினார். அமீஷா படேல் ஹீரோயினாக நடித்திருந்தார்.

பேஷன் டிசைனர்

பேஷன் டிசைனர்

இதையடுத்து மிஷன் காஷ்மீர், யாதீன், கபி குஷி கபி கம், கிர்ஷ், தூம் 2, மொகஞ்சதாரோ, காபில் உட்பட பல படங்களில் நடித்துள்ளார் ஹிர்த்திக். இவர் நடித்து கடந்த வருடம் ரிலீஸ் ஆன, சூப்பர் 30 படம் சூப்பர் ஹிட்டானது. அடுத்து வெளியான வார் படமும் வரவேற்பை பெற்றது. இவரும் பேஷன் டிசைனரான சுஸானே கானும் கடந்த இரண்டாயிரமாவது ஆண்டில் காதலித்து திருமணம் செய்துகொண்டனர்.

விவாகரத்து

விவாகரத்து

இவர்களுக்கு ரேஹான், ரிதான் என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். இந்நிலையில், கடந்த 2013 ஆம் ஆண்டு இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தனர். 2014 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்றனர். இதையடுத்து தனித்தனியாக வசித்து வருகின்றனர். குழந்தைகள் ஹிர்த்திக் ரோஷனுடன் வளர்ந்து வருகின்றனர்.

ஊரடங்கு உத்தரவு

ஊரடங்கு உத்தரவு

இந்நிலையில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, ஏப்ரல் 14 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சினிமா படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. ஷூட்டிங்குகள் நடக்கவில்லை. இதனால் சினிமா பிரபலங்கள் வீட்டுக்குள் முடங்கியுள்ளனர். இந்த நாட்களில் தனது குடும்பத்துடன் நேரத்தை செலவிட்டு வருகின்றனர். இதற்கிடையே, சுஸானேவும், இந்த நேரத்தை பிள்ளைகளுடன் செலவழிக்கலாம் என்று முடிவு செய்தார்.

கற்பனைக்கு எட்டாதது

இதையடுத்து ஹிர்த்திக் ரோஷனின் வீட்டுக்கு அவர் வந்துள்ளார். இதுபற்றி இன்ஸ்டாகிராமில் நெகிழ்ச்சியாகக் குறிப்பிட்டுள்ள ஹிர்த்திக் ரோஷன், கொரோனாவால் லாக் டவுன் ஆகியுள்ள நிலையில், என் குழந்தைகளிடம் இருந்து பிரிந்து இருப்பது என்பது பெற்றோராக, கற்பனைக்கு எட்டாதது. சமூக விலகல் உள்ளிட்ட விஷயங்களால் உலகம் ஒன்றாக வருவதைப் பார்க்க முடிவதில் மகிழ்ச்சி.

தற்காலிகமாக

தற்காலிகமாக

மனிதகுலம் ஒன்றிணைவதைப் பற்றி உலகம் பேசிக்கொண்டிருக்கும்போது, பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுடன் இருப்பதை பகிர்ந்துகொள்ளும் யோசனையையும் இது பிரதிபலிப்பதாக நினைக்கிறேன். என் முன்னாள் மனைவி சுஸானே, குழந்தைகளுடன் நேரத்தைச் செலவிட, தற்காலிகமாக என் வீட்டுக்கு வந்துள்ளார். நன்றி சுஸானே. அவர்களுக்காக நாங்கள் உருவாக்கும் கதையை, எங்கள் குழந்தைகள் சொல்வார்கள்' என்று தெரிவித்துள்ளார். இதை ரசிகர்கள் வரவேற்றுள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X