கிரிஷ் 4.. நான்கு வேடங்களில் நடிக்கிறாரா ஹிருத்திக் ரோஷன்..? இயக்குனர் ராகேஷ் ரோஷன் விளக்கம்!

By

சென்னை: கிரிஷ் 4 படத்தில் 4 வேடங்களில் ஹிருத்திக் ரோஷன் நடிக்க இருப்பதாக வந்த தகவலுக்கு அவர் தந்தை விளக்கம் அளித்துள்ளார்.

ஹிருத்திக் ரோஷன் நடிப்பில் வெளியான சூப்பர் ஹீரோ படம் கிரீஷ். இந்தப் படத்தை அவர் அப்பா ராகேஷ் ரோஷன் தயாரித்து இயக்கினார்.

இதன் முதல் பாகமாக, கோய் மில் ஹயா என்ற படத்தை இயக்கி இருந்தார். அதன் தொடர்ச்சியாக கிரிஷ் படத்தை எடுத்தார்.

சூப்பர் ஹீரோ படங்கள்

சூப்பர் ஹீரோ படங்கள்

கிரிஷ் படத்தில் பிரியங்கா சோப்ரா, நஸ்ருதீன் ஷா, பிரீத்தி ஜிந்தா, சரத் சக்சேனா உட்பட பலர் நடித்திருந்தனர். இந்தப் படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்தியாவில் வெளியான சூப்பர் ஹீரோ படங்களில் இது கவனிக்கப்பட்டது. இதையடுத்து இதன் தொடர்ச்சிகளை இயக்க முடிவு செய்தார், ராகேஷ் ரோஷன்.

ஹிருத்திக் ரோஷன்

ஹிருத்திக் ரோஷன்

அடுத்து கிரீஷ் 2, 3 படங்களை இயக்கினார். இந்தப் படங்களில் ஹிருத்திக் ரோஷன் ஹீரோவாக நடித்தார். கிரிஷ் 3 படத்தில் கங்கனா ரனவத், விவேக் ஓபராய் உட்பட பலர் நடித்திருந்தனர். இந்தப் படங்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்தன. வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றன. தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் டப் செய்யப்பட்டும் இந்தப் படங்கள் வெளியாயின.

கிரிஷ் நான்காவது பாகம்

கிரிஷ் நான்காவது பாகம்

இதையடுத்து இதன் 4 மற்றும் 5 பாகங்களை இயக்க இருப்பதாக ராகேஷ் ரோஷன் கடந்த சில வருடங்களுக்கு முன் கூறியிருந்தார். கிரிஷ் 4 படம் 2020-ஆம் ஆண்டு கிறிஸ்துமஸ் அன்று ரிலீஸாகும் என ட்விட்டரில் கடந்த 2018 ஆம் ஆண்டு தெரிவித்திருந்தார். ஆனால் இந்தப் படம் தொடங்கப் படவில்லை. இந்நிலையில் கிரிஷ் படத்தின் 4 வது பாகம் பற்றிய தகவல்கள் கடந்த சில நாட்களுக்கு முன் வெளியாகின.

ஸ்கிரிப்ட் முடியவில்லை

ஸ்கிரிப்ட் முடியவில்லை

அதில், ஹிருத்திக் ரோஷன் 4 வேடங்களில் நடிக்க இருப்பதாகவும் கூறப்பட்டன. இந்நிலையில் இதை மறுத்துள்ளார், ராகேஷ் ரோஷன். 'இந்தப் படத்தின் ஸ்கிரிப்ட் இன்னும் முடியவில்லை. அதற்கான வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றன. முடிந்ததும் நானே அறிவிக்கிறேன். அதற்கு முன் தேவையில்லாத கற்பனை செய்திகளை பரப்ப வேண்டாம் என்று கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X