கார்த்தியின் கைதி இந்தி ரீமேக்... இந்த ஹீரோதான் நடிக்கிறாராம்... விரைவில் அறிவிப்பு வருமாமே!
Recommended Video
சென்னை: கைதி இந்தி ரீகேக்கில் இந்த முன்னணி இந்தி ஹீரோதான் நடிப்பார் என்று கூறப்படுகிறது.
கார்த்தி, நரேன், தீனா, ஜார்ஜ் மரியான், அர்ஜுன் தாஸ், ரமணா, ஹரிஷ் உத்தமன் உட்பட பலர் நடித்த படம், கைதி.
ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரபு, எஸ்.பிரகாஷ்பாபு தயாரித்திருந்த இந்தப் படத்துக்கு சாம் சி.எஸ்.இசை அமைத்திருந்தார். சத்யன் சூர்யன் ஒளிப்பதிவு செய்திருந்தார்.

லோகேஷ் கனகராஜ்
மாநகரம் பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கி இருந்த இந்தப் படம், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ரிலீஸ் ஆனது. தமிழில் சூப்பர் ஹிட்டான இந்தப் படம், தெலுங்கில் டப் செய்தும் வெளியிடப்பட்டது. அங்கும் ஹிட்டானது. கதாநாயகி இல்லாமல் உருவான இந்தப் படத்தின் வெற்றி, திரையுலகினரை திரும்பிப் பார்க்க வைத்தது.

இந்தியில் கைதி
இந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க முயற்சிகள் நடந்து வருகின்றன. கைதி படத்தின் இந்தி ரீமேக் உரிமையை வாங்க கடும் போட்டி நிலவியது. இந்நிலையில் டிரீம் வாரியர் பிக்சர்ஸ் எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு, எஸ்.ஆர்.பிரபு ஆகியோர் ரிலையன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து இந்தியில் கைதி படத்தை தயாரிக்கின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன் இது உறுதி செய்யப்பட்டது.

பெரிய ஹீரோ
இந்தி 'கைதி'யையும் லோகேஷ் கனகராஜ் இயக்குவார் என கூறப்படுகிறது. இந்நிலையில் இந்தி ரீமேக்கில் பிரபல இந்தி ஹீரோ, சல்மான்கான் நடிக்க இருப்பதாக, சமூக வலை தளங்களில் தகவல் பரவியது. ஆனால், அது உறுதிப்படுத்தப் படவில்லை. இதுகுறித்து எஸ்.ஆர்.பிரபு கூறும்போது, 'இந்தி ரீமேக்கில் பெரிய ஹீரோ ஒருவர் நடிப்பார். ஆனால், யாரும் இறுதி செய்யப்படவில்லை' என்று கூறியிருந்தார்.

ஹிர்த்திக் ரோஷன்
இதற்கிடையே, இந்த படத்தின் ரீமேக்கில் ஹிர்த்திக் ரோஷன் அல்லது ரன்வீர் சிங் ஆகியோரில் ஒருவர் நடிப்பார்கள் என்று கூறப்பட்டது. 'இருவரும் ரிலையன்ஸ் நிறுவனத்தின், சாய்ஸில் இருக்கிறார்கள். கால்ஷீட் மற்றும் சம்பள பிரச்னை சரியாக அமைந்தால் இதில் ஒருவர் கண்டிப்பாக நடிப்பார் என்று படக்குழு தெரிவித்திருந்தது. இந்நிலையில் ஹிர்திக் ரோஷன் உறுதி செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











