வெப்சீரிஸில் காலடி வைக்கும் ஹிரித்திக் ரோஷன்.. சைஃப் அலி கானை விட பத்து மடங்கு சம்பளம் அதிகமாம்!

மும்பை: பாலிவுட்டின் முன்னணி நடிகர்கள் பலர், வெப்சீரிஸ்களில் நடித்து வருகின்றனர்.

சைஃப் அலி கான், நவாசுதின் சித்திக் நடித்த நெட்பிளிக்ஸ் ஒரிஜினல் தொடரான Sacred Games இரண்டு சீசன்களை கடந்து மிகப்பெரிய வெற்றியை குவித்தது.

இந்நிலையில், டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் உருவாக உள்ள புதிய வெப் தொடரில் ஹிரித்திக் ரோஷன் நடிக்க உள்ளார்.

பாக்ஸ் ஆபிஸ் கிங்

பாக்ஸ் ஆபிஸ் கிங்

பாலிவுட்டின் பாக்ஸ் ஆபிஸ் கிங்காக வலம் வருபவர் நடிகர் ஹிரித்திக் ரோஷன். இந்தியாவின் சூப்பர் ஹீரோ கிரிஷ் ஆகவும், தூம் 2, ஜோதா அக்பர் என ஏகப்பட்ட வெற்றி படங்களை கொடுத்துள்ளார். கடந்த ஆண்டு சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ஹிரித்திக் ரோஷன், டைகர் ஷெராஃப் நடிப்பில் வெளியான வார் திரைப்படம் 400 கோடிக்கும் மேல் வசூலை வாரி குவித்தது.

வெப்சீரிஸ் பக்கம்

வெப்சீரிஸ் பக்கம்

சைஃப் அலி கான், நவாசுதின் சித்திக், ராதிகா ஆப்தே, கியாரா அத்வானி, அபிஷேக் பச்சன், மாதவன் என ஏகப்பட்ட நடிகர்கள் வெப்சீரிஸ் பக்கம் வந்துவிட்டனர். நடிகர் அக்‌ஷய் குமாரும் விரைவிலேயே வெப்சீரிஸ் பக்கம் வர உள்ளார். இந்நிலையில், நடிகர் ஹிரித்திக் ரோஷன் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் உருவாக உள்ள பிரம்மாண்ட வெப்சீரிஸ் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.

பிபிசி டிவி தொடர்

பிபிசி டிவி தொடர்

1993ம் ஆண்டு பிரபல நாவல் ஆசிரியரான ஜான் லெ கேரி எழுதிய தி நைட் மேனேஜர் எனும் நாவலை கடந்த 2016ம் ஆண்டு பிபிசி நிறுவனம் டிவி தொடராக உருவாக்கி இருந்தது. அந்த தொடரை தான் தற்போது டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் நிறுவனம் கைப்பற்றி இந்திய ரசிகர்களுக்கு ஏற்றவாறு உருவாக்க திட்டமிட்டு இருக்கிறது.

தோர் அண்ணன் லோகி

தோர் அண்ணன் லோகி

மார்வெல் படங்களில் வரும் சூப்பர் ஹீரோ தோரின் அண்ணன் கதாபாத்திரமான லோகி கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமான டாம் ஹிடில்ஸ்டன் தான் பிபிசி தயாரித்து வெளியிட்ட நைட் மேனேஜர் தொடரில் நாயகனாக நடித்து இருந்தார். அந்த கதாபாத்திரத்தில் தற்போது ஹிரித்திக் ரோஷன் கலக்க உள்ளார்.

10 மடங்கு அதிகம்

10 மடங்கு அதிகம்

இந்த வெப்சீரிஸில் நடிப்பதற்காக ஹிரித்திக் ரோஷனுக்கு 70 முதல் 80 கோடி வரை சம்பளம் பேசப்பட்டுள்ளதாம். இது, நெட்பிளிக்ஸின் சேக்ரட் கேம்ஸ் தொடரில் நடித்த சைஃப் அலிகான் சம்பளத்தை விட 10 மடங்கு அதிகமாம். ப்ரீத் தொடருக்காக அபிஷேக் பச்சன் வாங்கியதை விட 15 மடங்கு அதிகம். சினிமாவுக்கு நிகராக வெப் தொடருக்கு சம்பளம் கொடுப்பது இந்தியாவில் இது தான் முதல் முறை என்கின்றனர்.

Recommended Video

DD Opens up about Vikram's Dhuruvanatchathiram | Koffee With DD
அக்‌ஷய் குமார் சம்பளம்

அக்‌ஷய் குமார் சம்பளம்

அமேசான் பிரைம் தயாரித்து வரும் தி எண்ட் வெப்சீரிஸில் நடிக்க நடிகர் அக்‌ஷய் குமாருக்கும் இதே அளவு சம்பளம் பேசி இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதெல்லாம் என்ன பாஸ் நம்ம பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க சல்மான் கானுக்கு 200 கோடி கொடுக்கிறாங்களே என்று சொல்பவர்களும் உண்டு. சல்மான் கான் வெப்சீரிஸ் பக்கம் வந்தால் அவரது மார்க்கெட்டே தனி தான்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X