Fighter Box Office: ஹ்ரித்திக் ரோஷன் வான் சாகசம் கை கொடுத்ததா?.. ஃபைட்டர் முதல் நாள் வசூல் எவ்வளவு?

மும்பை: ஹ்ரித்திக் ரோஷனை வைத்து வார் படத்தை இயக்கிய சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் மீண்டும் ஹ்ரித்திக் ரோஷன் நடித்து வெளியான படம் தான் ஃபைட்டர். இந்த படத்தில் தீபிகா படுகோன் மற்றும் அனில் கபூர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். குடியரசு தினத்தை முன்னிட்டு ஜனவரி 25ம் தேதி வெளியான இந்த படம் முதல் நாளில் நல்ல ஓபனிங் உடன் தொடங்கியிருக்கிறது.

ஹ்ரித்திக் ரோஷன் கடந்த ஜனவரி 10ம் தேதியுடன் 50 வயதை கடந்துள்ளார். இந்த வயதிலும் சிக்ஸ் பேக் வைத்துக்கொண்டு வேற லெவல் பாடியுடன் ஒட்டுமொத்த ரசிகர்களையும் தன் பக்கம் கவர்ந்து இழுத்து வருகிறார். இன்னொரு பக்கம் நடிகை தீபிகா படுகோன் பதான் படத்தை விட 10 மடங்கு அதிக கவர்ச்சியை ஃபைட்டர் படத்தில் காட்டி மெர்சல் செய்துள்ளார்.

Hrithik Roshans Fighter Day 1 Worldwide Box Office reports are here

பாசிட்டிவ் விமர்சனம்: கடந்த ஆண்டு பதான் படம் வெளியாகி நல்ல பாக்ஸ் ஆபிஸ் வசூலை ஈட்டிய நிலையில், ஃபைட்டர் படத்துக்கும் பாசிட்டிவ் விமர்சனங்கள் கிடைத்துள்ளன. பாலிவுட் மீண்டும் ரீமேக் படங்களை நம்பாமல் தங்களின் திறமைகளை நிரூபித்து கடந்த ஆண்டு பாக்ஸ் ஆபிஸில் மீண்டும் முதலிடத்தை பிடித்த நிலையில், இந்த ஆண்டும் ஜனவரி மாதமே வசூல் வேட்டை நடத்த ஆரம்பித்து விட்டது என்கின்றனர். ஃபைட்டர் ஜெட் விமானங்கள் இந்திய நாட்டுக்காக எப்படி தங்கள் வாழ்க்கையை அர்ப்பணிக்கின்றனர் என்கிற கதையை மையப்படுத்தி இந்த ஃபைட்டர் உருவாகி உள்ளது.

முதல் நாள் வசூல்: பதான் படம் போலவே ஃபைட்டர் படமும் பான் இந்தியா படமாக உருவாகி உள்ளது. ஆனால், பெரியளவில் இந்த படத்துக்கு தென்னிந்தியாவில் ஹ்ரித்திக் ரோஷன் படக்குழுவினர் புரமோஷனே செய்யவில்லை. அதனால், பாலிவுட்டில் மட்டும் தான் இந்த படத்துக்கு ஓபனிங் கிடைத்திருக்கிறது. முதல் நாளில் அதிகபட்சமாக 23 முதல் 27 கோடி வரை இந்தியளவில் இந்த படம் வசூல் செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. முதல் நாள் வசூல் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை தயாரிப்பு நிறுவனம் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உலகளவில் எவ்வளவு வசூல்: ஹ்ரித்திக் ரோஷன், தீபிகா படுகோன் கெமிஸ்ட்ரியில் பக்காவாக வெளியாகி உள்ள ஃபைட்டர் திரைப்படம் வெளிநாடுகளிலும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. 1 மில்லியன் டாலர் வரை வெளிநாடுகளில் இந்த படம் முதல் நாளில் வசூல் செய்திருப்பதாக கூறுகின்றனர். ஒட்டுமொத்தமாக 33 முதல் 35 கோடி வசூல் வரை ஃபைட்டர் படம் ஈட்டியுள்ளதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளன.

குடியரசு தின விடுமுறை: குடியரசு தினம் விடுமுறை தினம் என்பதால் ஒட்டுமொத்தமாக 30 கோடி ரூபாய்க்கும் மேல் இந்தியாவிலேயே இன்று ஃபைட்டர் படம் வசூல் ஈட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை என தொடர்ந்து விடுமுறை நாட்கள் என்பதால் 100 முதல் 150 கோடி ரூபாய் வசூலை இந்த படம் முதல் 4 நாட்களில் ஈட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஷாருக்கானின் ரேஞ்ச் அளவுக்கு ஹ்ரித்திக் ரோஷனுக்கு முதல் நாள் ஓப்பனிங் இருக்காது என்பது தெரிந்த விஷயம் தான். அதே போலத்தான் ஃபைட்டர் வசூல் முதல் நாளிலேயே 100 கோடி வசூலை ஈட்டவில்லை.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X