ரித்திக்-சூசன் பிரிய நான் தான் காரணமா?: நடிகர் அர்ஜுன் ராம்பல் விளக்கம்
மும்பை: நடிகர் ரித்திக் ரோஷனை அவரது மனைவி சூசன் பிரிய நான் காரணம் இல்லை என்று நடிகர் அர்ஜுன் ராம்பல் தெரிவித்துள்ளார்.
நடிகர் ரித்திக் ரோஷன் நடிகர் சஞ்சய் கானின் மகளான சூசன் கானை காதலித்து திருமணம் செய்தார். அவர்களுக்கு ரிஹான், ரிதான் என்று 2 மகன்கள் உள்ளனர்.
இந்நிலையில் சூசன் தனது கணவரை பிரிந்துவிட்டார்.

பிரிவு
சூசன் என்னிடம் இருந்து பிரிந்து செல்ல முடிவு செய்துள்ளார். எங்களின் 17 ஆண்டு கால உறவை முடிக்க தீர்மானித்துவிட்டார் என்று ரித்திக் ரோஷன் தெரிவித்துள்ளார்.

ராம்பல்
சூசனுக்கும் நடிகர் அர்ஜுன் ராம்பலுக்கும் இடையே நெருக்கம் அதிகாமானது அவர் ரித்திக்கை பிரிய காரணம் என்ற வதந்தி பாலிவுட்டில் பரவியது.

வெறும் வதந்தி
பாலிவுட்டில் பரவிய வதந்தி ராம்பலின் காதுகளுக்கும் சென்றது. இதை கேட்ட அவர் கவலை அடைந்தார். சூசனும் ரித்திக்கும் பிரிய நான் காரணம் இல்லை. அவர்களின் பிரிவுக்கு நான் காரணம் என்று கூறப்படுவதில் உண்மை இல்லை என்றார் ராம்பல்.

முன்பே
க்ரிஷ் 3 பட ரிலீஸுக்கு முன்பே சூசன் ரித்திக்கை பிரிந்து அவரது தாயின் வீட்டில் தங்கியுள்ளார் என்றும், விரைவில் விவாகரத்து செய்யப் போகிறார் என்றும் செய்திகள் வந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

காதல்
சூசன் என்னை பிரிந்தாலும் அவர் தான் என் வாழ்வின் காதல் என்று ரித்திக் ரோஷன் தெரிவித்துள்ளார். ரித்திக்கிற்கும் கைட்ஸ் பட நாயகி பார்பரா மோரிக்கும் இடையே காதல் என்று செய்திகள் வந்த போதெல்லாம் கணவரை நம்பிய சூசன் தற்போது ரித்திக்கை தனியாக விட்டுவிட்டுச் சென்றுவிட்டார்.


Click it and Unblock the Notifications











