விவாகரத்து செய்த மனைவியுடன் சேரும் டான்ஸ் ஹீரோ?
Recommended Video

மும்பை: பாலிவுட் நடிகர் ரித்திக் ரோஷன் தனது முன்னாள் மனைவியுடன் சேரக்கூடும் என்று கூறப்படுகிறது.
பாலிவுட் நடிகர் ரித்திக் ரோஷன் தான் காதலித்து திருமணம் செய்த மனைவி சூசன் கானை கடந்த 2014ம் ஆண்டு விவாகரத்து செய்தார். ரித்திக் எவ்வளவோ சமாதானம் கூறியும் கேட்காமல் விவாகரத்து வாங்கிவிட்டு சென்றார் சூசன்.
போகும்போது மகன்கள் ரிஹான், ரிதானையும் தன்னுடன் அழைத்துச் சென்றார்.

மகன்கள்
விவாகரத்து ஆனாலும் மகன்களுக்காக அவ்வப்போது இருவரும் சந்தித்து பேசுகிறார்கள். வெளிநாட்டுக்கு ஜோடியாக சுற்றுலா சென்று வருகிறார்கள்.

காதல்
ரித்திக் தனது மகன்கள் மற்றும் சூசனை அழைத்துக் கொண்டு அவெஞ்சர்ஸ் படம் பார்க்க சென்றுள்ளார். ரித்திக், சூசன் இடையே மீண்டும் காதல் மலர்வதாக விபரம் அறிந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

பிறந்தநாள்
ரித்திக் ரோஷனின் இளைய மகன் ரிதானின் 10வது பிறந்தநாள் கடந்த 1ம் தேதி கொண்டாடப்பட்டது. சூசன் வீட்டில் நடந்த பார்ட்டியில் ரித்திக் கலந்து கொண்டார். நேரம் கிடைக்கும் போது எல்லாம் மகன்கள், சூசனை சந்திக்கிறார் ரித்திக்.

திருமணம்
ரித்திக்கும், சூசனும் மீண்டும் சேர்வது பற்றி யோசித்துக் கொண்டிருக்கிறார்களாம். பிரிந்தாலும் இருவரும் ஹோட்டல், தியேட்டர், கடற்கரை, வெளிநாடு என்று ஜோடியாக செல்கிறார்கள். அவர்கள் மீண்டும் சேர்ந்தால் நன்றாக இருக்கும் என்கிறார்கள் ரசிகர்கள்.


Click it and Unblock the Notifications











