க்ரீஷ் 3: ஹைதராபாத் வெப்பத்தால் 600 மாஸ்க்குகளை மாற்றிய ஹிருத்திக்
மும்பை: ஹிருத்திக் ரோஷன் நடிப்பில் அடுத்த மாதம் ரிலீசாக இருக்கும் படம் க்ரீஷ் 3. கடந்த இரண்டு படங்களைப் போலவே, இப்படத்திலும் சூப்பர் ஹீரோவாகவே நடித்துள்ளார் ஹிருத்திக்.
வருடங்களைக் கடந்து தயாராகி வரும் இப்படத்திற்கு ஏற்கனவே ரசிகர்களிடத்தில் எதிர்பார்ப்பு எகிறி இருக்கிறது. இநிலையில் படத்தில் சூப்பர் ஹீரோ ஹிருத்திக் அணிந்து வரும் வித்தியாசமான மாஸ்க் பற்றி சுவாரஸ்யமான தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.

ஸ்பெஷல் மாக்ஸ்....
ஸ்பெஷல் வாக்ஸ் கொண்டு தயாரிக்கப்பட்ட அந்த மாஸ்க், வித்தியாசமான பசை கொண்டு ஹிருத்திக் முகத்தில் ஒட்டி படப்பிடிப்பு நடத்தப்பட்டதாம்.

ரூ8000 மதிப்பிலானவை...
ஒவ்வொரு மாஸ்க்கும் கிட்டத்தட்ட ரூ8000 மதிப்பிலானவை. ஒவ்வொரு மாஸ்க்கையும் ஹிருத்திக் குறைந்தது 5 நாட்கள் வரை உபயோகப் படுத்துவாராம்.

உருகிய மாஸ்க்குகள்...
காலநிலை மாற்றத்தால் உருக்குலைந்து விடும் மாஸ்க்குகளை மாற்றி, புதிய மாஸ்க்கை பயன் படுத்த ஆரம்பித்து விடுவார்களாம்.

உருகிய மாஸ்க்குகள்...
காலநிலை மாற்றத்தால் உருக்குலைந்து விடும் மாஸ்க்குகளை மாற்றி, புதிய மாஸ்க்கை பயன் படுத்த ஆரம்பித்து விடுவார்களாம்.

அதிக வெப்பம்....
இது குறித்து அப்படத்தின் தயாரிப்பாளரும், இயக்குநரும் மற்றும் ஹிருத்திக்கின் தந்தையுமான ராகேஷ் ரோஷன் கூறும்பொழுது, ‘இப்படத்தில் க்ரீஷின் கதாபாத்திரம் விரிவாகச் சொல்லப்பட்டிருக்கிறது. படத்தின் பெரும்பகுதி ஹைதராபாத்தில் படமாக்கப்பட்டது. அங்கு நிலவிய கிளைமேட்டால் விரைவில் மாஸ்க்குகள் உருகி விட்டன. எனவே, கடந்த படத்திற்குப் பயன்படுத்தியதை விட அதிக மாஸ்க்குகள் இப்படத்திற்கு பயன் படுத்த வேண்டியதாகி விட்டது' என்றார்.


Click it and Unblock the Notifications











