»   »  ஒரு வார்த்தை கேட்க நடிகை கங்கனா பின்னாடி 6 மாதம் சுற்றிய நடிகர் ரித்திக் ரோஷன்

ஒரு வார்த்தை கேட்க நடிகை கங்கனா பின்னாடி 6 மாதம் சுற்றிய நடிகர் ரித்திக் ரோஷன்

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: நடிகர் ரித்திக் ரோஷன் தனது க்ரிஷ் 3 படத்தில் கங்கனாவை நடிக்க வைக்க அவருக்காக 6 மாதம் காத்திருந்தது தெரிய வந்துள்ளது.

பாலிவுட் நடிகர் ரித்திக் ரோஷன் நடிகை கங்கனா ரனாவத்தை காதலித்து பிரிந்துவிட்டார். இந்நிலையில் கங்கனாவுக்கும், ரித்திக்கிற்கும் இடையே வார்த்தைகளால் மோதல் ஏற்பட்டு ஒருவருக்கொருவர் வக்கீல் நோட்டீஸ் அனுப்பும் அளவுக்கு வந்துவிட்டது.

இந்நிலையில் இது குறித்து கங்கனாவின் நெருங்கிய தோழி கூறுகையில்,

கைட்ஸ்

கைட்ஸ்

2009ம் ஆண்டு கைட்ஸ் படத்தில் நடிக்கையில் வாழ்வில் பல பிரச்சனைகளை சந்தித்துக் கொண்டிருந்த ரித்திக் மற்றும் கங்கனா இடையே நட்பு ஏற்பட்டது. அப்போது ரித்திக்கின் திருமண வாழ்வில் பிரச்சனையாக இருந்தது.

ரித்திக்

ரித்திக்

ரித்திக் மற்றும் கைட்ஸ் பட நடிகை பார்பரா மோரிக்கும் இடையேயான காதலும் ஒர்க் அவுட் ஆகவில்லை. அப்போது கங்கனாவுக்கும் சில பிரச்சனைகள் இருந்தன. அதனால் ஒருவருக்கு ஒருவர் ஆறுதல் கூறிக் கொண்டனர். அப்படியே நல்ல நண்பர்களாகிவிட்டனர். அந்த நட்பு மெதுவாக காதலாக மாறியது.

க்ரிஷ் 3

க்ரிஷ் 3

ரித்திக் தனது க்ரிஷ் 3 படத்தில் நடிக்குமாறு கங்கனாவிடம் கேட்க அவர் மறுத்துவிட்டார். ரித்திக் தன் மீது ஓவர் அக்கறை காட்டுவது அவருக்கு அசவுகரியமாக இருந்தது. ஆனால் ரித்திக் அவரை விடுவதாக இல்லை. ஆறு மாதமாக கங்கனாவின் பின்னாடி அலைந்து ஒரு வழியாக அவரை க்ரிஷ் 3 படத்தில் நடிக்க சம்மதிக்க வைத்தார்.

சூசன்

சூசன்

க்ரிஷ் 3 படத்தில் நடிக்க ஒப்புக் கொண்ட பிறகே ரித்திக், கங்கனா இடையேயான உறவு துவங்கியது. தானும், தனது மனைவி சூசனும் தனித்தனி அறையில் தூங்குவதாக ரித்திக் கங்கனாவிடம் கூறினார். ஆனால் சூசனை தான் ஒரு போதும் விவாகரத்து செய்யப் போவது இல்லை என்று ரித்திக் கூறியதால் கங்கனா தனது உறவு குறித்து வெளியே தெரிவிக்கவில்லை.

திருமணம்

திருமணம்

2013ம் ஆண்டு டிசம்பர் மாதம் ரித்திக் கங்கனாவுக்கு போன் செய்து தான் தனது மனைவியை விவாகரத்து செய்வதாக கூறினார். அப்போது கங்கனா சுவிட்சர்லாந்திலும், ரித்திக் அமெரிக்காவிலும் இருந்தனர். விவாகரத்திற்கு பிறகு கங்கனாவை திருமணம் செய்ய விரும்புவதாக ரித்திக் தெரிவித்தார்.

பாரீஸ்

பாரீஸ்

ரித்திக் பாரீஸில் வைத்து கங்கனாவை தன்னை திருமணம் செய்யத் தயாரா என்று கேட்டார். கங்கனாவும் சந்தோஷத்தின் உச்சத்தில் இருந்தார். ஆனால் அதில் இருந்து அவர்கள் இடையேயான உறவு மோசமாகத் தான் சென்று பிரிந்துவிட்டனர்.

English summary
Actress Kangana Ranaut's close friend said that actor Hrithik Roshan chased the Queen actress for 6 months to make her say yes to Krrish 3.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil