Ponniyin Selvan 2 - இணையத்தில் வெளியான பொன்னியின் செல்வன் 2 - என்ன இவ்ளோ ஸ்பீடா இருக்காங்க?

சென்னை: Ponniyin selvan 2 (பொன்னியின் செல்வன் 2) பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகம் இன்று திரையரங்குகளில் வெளியான 4 மணி நேரத்துக்குள்ளாகவே இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

எழுத்தாளர் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலுக்கென்று தலைமுறைகள் கடந்தும் பலர் ரசிகர்களாக இருக்கின்றனர். இப்படிப்பட்ட சூழலில் பொன்னியின் செல்வன் நாவலை திரைப்படமாக்கும் முயற்சியில் இறங்கினார் மணிரத்னம். அவருக்கு லைகா துணை நிற்க படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு கடந்த 2020ஆம் ஆண்டு வெளியானது. இதனால் படம் எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு உலக தமிழர்கள் அனைவரிடமும் எழுந்தது.

https://tamil.filmibeat.com/news/fans-asking-what-happened-to-shivani-naryanan-beautiful-eye-brows-107680.html

பொன்னியின் செல்வன் 1: ஐந்து பாகங்கள் கொண்ட நாவலை இரண்டு பாகங்களாக சுருக்கி திரைப்படம் உருவாக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. அதன்படி முதல் பாகமானது கடந்த வருடம் வெளியாகி 500 கோடி ரூபாய் வசூலித்தது. கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். அருண்மொழி சோழன் கடலுக்குள் விழுவது போலவும், அவரை ஊமை ராணி காப்பாற்றுவது போலவும் முதல் பாகம் முடிவடைந்திருந்தது. படக்குழு எதிர்பார்த்த வெற்றியை முதல் பாகம் பெற்றது.

https://tamil.filmibeat.com/news/fans-asking-what-happened-to-shivani-naryanan-beautiful-eye-brows-107680.html

பொன்னியின் செல்வன் 2 ரிலீஸ்: முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகம் ஏப்ரல் 28ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி படமானது இன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது. படத்தை பார்ப்பதற்கு ரசிகர்கள் கூட்டம் கூட்டமாக திரையரங்குக்கு படை எடுத்தனர்.

https://tamil.filmibeat.com/news/fans-asking-what-happened-to-shivani-naryanan-beautiful-eye-brows-107680.html

எப்படி இருக்கிறது?: படத்தை பார்த்த ரசிகர்கள் பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்துக்கு ஓரளவு டீசண்ட்டான விமர்சனத்தையே கொடுத்துவருகின்றனர். அதேசமயம் முதல் பாகத்தில் இருந்த சின்ன சின்ன குறைகளை மணிரத்னம் இதில் போக்கியிருந்தாலும் படத்தில் ஏதோ ஒன்று மிஸ் ஆவதாகவும் ஒரு தரப்பினர் கூறுகின்றனர். ஆனால் அப்படி பேசுபவர்கள் பாகுபலியோடு படத்தை ஒப்பிடுவதால் வரும் கருத்து எனவும் ஒருதரப்பினர் சொல்கின்றனர்.

https://tamil.filmibeat.com/news/fans-asking-what-happened-to-shivani-naryanan-beautiful-eye-brows-107680.html

வசூல் வேட்டை: எது எப்படியா இதுவரை படத்தின் ரிசல்ட் பாசிட்டிவ் என்றே வந்துகொண்டிருக்கிறது. மேலும் வசூலிலும் படம் குறை வைக்காது என்றே திரையரங்க உரிமையாளர்கள் கருதுகிறார்கள். அதேசமயம் கோயம்புத்தூர் உள்ளிட்ட ஊர்களில் முதல் நாள் முதல் காட்சி பார்க்க கூட்டம் அவ்வளவாக வரவில்லை என்ற ஒரு ரிப்போர்ட்டும் ஓடிக்கொண்டிருக்கிறது. இதனால் படத்தின் வசூல் என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இணையத்தில் லீக்: திரையரங்குக்கு வரும் படங்கள் இணையத்தில் லீக்காகிவருவது தொடர்ந்து நடந்துகொண்டே வருகிறது. ஆனால் பொன்னியின் செல்வன் 2 படத்துக்கு கொஞ்சம் விரைவாகவே நடந்திருக்கிறது. அதாவது படம் வெளியான நான்கு மணி நேரத்திற்குள்ளாகவே இந்தப் படம் இணையத்தில் லீக்காகியுள்ளது. அதுதொடர்பான லிங்க்குகள் அதிகம் பகிரப்பட்டுவருகின்றன. இதனால் ரசிகர்களும், படக்குழுவினரும் பெரும் அதிர்ச்சி அடைந்திருக்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X