Ajith Prashanth Neel: பிரசாந்த் நீலுக்கு ஆஃபர் கொடுத்த அஜித்... சீக்ரெட்டாக இணையும் ஏகே 65 கூட்டணி!
சென்னை: அஜித்தின் விடாமுயற்சி ஷூட்டிங் வேகமாக நடைபெற்று வருகிறது. மகிழ் திருமேனி இயக்கும் இந்தப் படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. இதனைத் தொடர்ந்து அஜித் நடிக்கவுள்ள அடுத்த இரண்டு படங்களில் இயக்குநர்கள் குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன. அதேபோல், அஜித்தின் ஏகே 65 படத்தின் இயக்குநர் பற்றியும் அமர்க்களமான அப்டேட் கிடைத்துள்ளது.
அஜித்தின் ஏகே 65 சீக்ரெட் காம்போ: கோலிவுட் ரசிகர்களால அல்டிமேட் ஸ்டார், தல என கொண்டாடப்படுபவர் அஜித் குமார். எந்தவித சினிமா பின்னணியும் இல்லாமல் ஹீரோவான அஜித், தற்போது தமிழில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. அடிக்கடி பைக் ரேஸ், பைக் டூர் என பிஸியாகிவிடும் அஜித், இப்போது அடுத்தடுத்து படங்களில் கமிட்டாகி வருகிறார்.

துணிவு வெளியாகும் முன்பே லைகா நிறுவனம் தயாரிப்பில் ஏகே 62 படத்தில் கமிட்டாகிவிட்டார். இப்போது விடாமுயற்சி படப்பிடிப்பு முடியும் முன்னரே ஏகே 63 கூட்டணியை உறுதி செய்துவிட்டாராம். அதன்படி அஜித்தின் ஏகே 63 படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது. அதேபோல், ஏகே 64 படத்தை வெற்றிமாறன் இயக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தக் கூட்டணி கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டதாக தெரிகிறது.
இந்த இரண்டு படங்களை விடவும் அஜித்தின் ஏகே 65 தான் இப்போது கோலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது தனது ஏகே 65 படத்துக்காக இயக்குநர் பிரசாந்த் நீலுக்கு அஜித் ஆஃபர் கொடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது. உக்ரம் திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமான பிரசாந்த் நீல், அடுத்தடுத்து கேஜிஎஃப் 1, கேஜிஎஃப் 2 படங்கள் மூலம் இந்தியளவில் முன்னணி இயக்குநராக விஸ்வரூபம் எடுத்தார்.
இப்போதும் பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ் நடித்துள்ள சலார் திரைப்படம் வெளியாகி மரண மாஸ் ஹிட் கொடுத்துள்ளது. ஹோம்பலே ஃபிலிம்ஸ் தயாரிப்பில் பான் இந்தியா படமாக வெளியான சலார், முதல் நாளில் 175 கோடி ரூபாய் வரை வசூலித்துள்ளதாக பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனையடுத்து ஜூனியர் என்.டி.ஆரின் NTR31 படத்தை இயக்கவுள்ளார் பிரசாந்த் நீல். ஆனால் அதன் பின்னர் பிரசாந்த் நீல் இயக்கும் படம் குறித்து இதுவரை அப்டேட் வெளியாகவில்லை.

கேஜிஎஃப் 3, சலார் இரண்டாம் பாகம் என பிரசாந்த் நீல் லைன்-அப் பெரிதாக இருந்தாலும், கமல்ஹாசனுடன் இணையலாம் என சொல்லப்பட்டது. ஆனால் இப்போது அஜித்துடன் இணைய முடிவு செய்துள்ளாராம் பிரசாந்த் நீல். அதன்படி அஜித்தின் ஏகே 65 படத்தை பிரசாந்த் நீல் இயக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஒருவேளை அஜித் - பிரசாந்த் நீல் இணைந்தால் கோலிவுட்டில் பாக்ஸ் ஆபிஸ் ரெக்கார்டுகளை ஏகே 65 பிரேக் செய்யும் என இப்போதே ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். ஆனாலும் இதுகுறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்புகள் இப்போதைக்கு வெளியாகுமா எனத் தெரியவில்லை.


Click it and Unblock the Notifications











