சுஷாந்த் கணக்கிலிருந்து பெரிய தொகை ரியா சக்ரபர்த்திக்கு அனுப்பப்பட்டுள்ளது.. உறவினர் பகீர் தகவல்!

சென்னை: நடிகர் சுஷாந்த் சிங் வங்கி கணக்கில் இருந்து ரியா சக்ரபர்த்தியின் வங்கி கணக்குக்கு ஒரு பெரிய தொகை அனுப்பப்பட்டுள்ளதாக சுஷாந்தின் கஸினான நீரஜ் குமார் சிங் தெரிவித்துள்ளார்.

Recommended Video

Sushan Singh வழக்கில் Mahesh Bhatt யை விசாரித்த Bandra Police

பிரபல பாலிவுட் நடிகரான சுஷாந்த் சிங் ராஜ்புட் கடந்த மாதம் 14ஆம் தேதி மும்பை பாந்த்ரா பகுதியில் உள்ள தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

அவரது மரணம் நாடு முழுக்க பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. சுஷாந்தின் மரணத்திற்கு பாலிவுட்டில் உள்ள கேங் அரசியலே காரணம் கூறப்பட்டது.

விசாரணை

விசாரணை

சுஷாந்த் சிங் மரணம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சுஷாந்தின் குடும்பத்தினர், சுஷாந்துக்கு சிகிச்சையளித்த மருத்துவர், அவரது காதலி ரியா சக்ரபர்த்தி உள்ளிட்ட பலரிடம் ஏற்கனவே விசாரணை நடத்தப்பட்டது.

ரியா மீது புகார்

ரியா மீது புகார்

இந்நிலையில் பாலிவுட்டின் முன்னணி தயாரிப்பாளர்களான கரன் ஜோகர் மற்றும் மகேஷ் பட் ஆகியோரிடம் நேற்று போலீசார் விசாரணை நடத்தினர். அவர்கள் அளித்த தகவல்களை பதிவு செய்து கொண்டனர். இதனை இந்த வழக்கின் அதிரடி திருப்பமாக சுஷாந்தின் தந்தை, சுஷாந்தின் காதலியான ரியா சக்ரபர்த்தி மீது போலீஸில் புகார் அளித்தார்.

பொருளாதார நெருக்கடி

பொருளாதார நெருக்கடி

அதில், ரியா சக்ரபர்த்தி, 15 கோடி ரூபாய் பணத்தை சுஷாந்தை ஏமாற்றி, வேறு ஒரு அக்கவுண்ட்டுக்கு மாற்றியுள்ளதாக குற்றம்சாட்டியுள்ளார். மேலும் ரியாவும் இன்னும் சிலரும் சேர்ந்து பொருளாதார ரீதியாகவும் மன ரீதியாகவும் பெரும் அழுத்தத்தை கொடுத்துள்ளதாகவும் கூறியுள்ளார்.

சுஷாந்தின் உறவினர்

சுஷாந்தின் உறவினர்

இதனால் சுஷாந்த் மரண வழக்கு சூடுபிடித்துள்ள நிலையில் சுஷாந்தின் உறவினரும் பல பகீர் புகார்களை கூறியுள்ளார். அதாவது மறைந்த நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் உறவினரும், பாஜக எம்எல்ஏவுமான நீரஜ் குமார் சிங் பப்லு, சுஷாந்த் கணக்கிலிருந்து நடிகை ரியா சக்ரபர்த்தியின் கணக்குக்கு ஒரு பெரிய தொகை மாற்றப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்.

மோசடி செய்யப்பட்டுள்ளது

மோசடி செய்யப்பட்டுள்ளது

நடிகை ரியா சக்ரபர்த்தி, சுஷாந்த் சிங் ராஜ்புத் ஆகிய இருவருக்கும் சில நிறுவனங்களுக்கு கூட்டுக் கணக்குகள் உள்ளன, இதன் மூலம் ரியா சக்ரபர்த்தியின் தரப்பிலிருந்து மோசடி செய்யப்பட்டுள்ளது என்று எஃப்ஐஆரில் தெரிவிக்கப்பட்டுள்ளது என்றும் பப்லு கூறியுள்ளார். மேலும் கூறுகையில், இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி அனைத்தையும் வெளியே கொண்டு வருவார்கள் என்றும் கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X