உள்ளாடை விளம்பரத்துக்கு இவ்வளவு பெரிய கட்-அவுட்டா.. கிம் கர்தாஷியனே ஆடிப் போய்ட்டாரே!

லாஸ் ஏஞ்சல்ஸ்: அமெரிக்காவின் சூப்பர் மாடல் அழகியான கிம் கர்தாஷியன், அழகு சாதன பொருட்கள் மற்றும் உள்ளாடைகள் விற்பனை என கொடிகட்டி பறக்கிறார்.

Recommended Video

தாங்க்ஸ்கிவ்விங் கொண்டாடிய த்ரிஷா, பிரியங்கா மற்றும் பல திரை பிரபலங்கள்- வீடியோ

அடுத்த அமெரிக்க அதிபராக அவரது கணவர் கன்யே வெஸ்ட் போட்டியிடப் போவதாக அறிவித்து உலகளவில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை உண்டு செய்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், கிம் கர்தாஷியனின் உள்ளாடை விளம்பர கட்-அவுட் ஒன்று மிகப்பெரிய பில்டிங்கில் இடம்பெற்று இருக்கிறது.

உலகளவில் பிரபலம்

உலகளவில் பிரபலம்

கீப்பிங் அப் வித் கர்தாஷியன்ஸ் எனும் அமெரிக்க ரியாலிட்டி ஷோ மூலம் பிரபலமானவர் கிம் கர்தாஷியன். எக்குத்தப்பான அவரது அழகால் சர்வதேச ரசிகர்களை மட்டுமின்றி பல ஹாலிவுட் நடிகர்களே வியந்து பார்க்கும் அளவுக்கு உலகளவில் பிரபலமானவர். டிவி நடிகையாக மட்டும் இல்லாமல், அழகு சாதன பொருட்கள் மற்றும் உள்ளாடைகளை விற்பனை செய்து மிகப்பெரிய தொழிலதிபராகவும் திகழ்கிறார்.

186 மில்லியன் ரசிகர்கள்

186 மில்லியன் ரசிகர்கள்

நம்ம ஊரில் 11 மில்லியன் ரசிகர்களை பெற்றதற்கே இரண்டு கால்களை மேலே தூக்கிக் காட்டி அலம்பல் செய்யும் நடிகைகள் மத்தியில் சர்வதேச அளவில் 186 மில்லியன் ரசிகர்களுடன் ஒரு தனி இன்ஸ்டாகிராம் சாம்ராஜ்யத்தையே கிம் கர்தாஷியன் நடத்தி வருகிறார். பல பாலிவுட் நடிகைகளும் இவரது ரசிகை என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்கிம்ஸ்

ஸ்கிம்ஸ்

கிம் கர்தாஷியன் S(KIM)S எனும் புதிய உள்ளாடைகளை அறிமுகப்படுத்தி வருகிறார். அதற்காக அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், அந்த உள்ளாடைகளை மட்டும் அணிந்து கொண்டு அவர் கொடுத்து இருக்கும் ஹாட் போஸ்கள் 2.5 மில்லியன் லைக்குகளுக்கும் மேல் பெற்று தீயாய் பரவி வருகின்றன.

பெரிய கட்-அவுட்

பெரிய கட்-அவுட்

மேலும், வரும் ஆகஸ்ட் 27ம் தேதி இந்த ஸ்கிம்ஸ் உள்ளாடைகள் விற்பனைக்கு வர உள்ளதாகவும், அதற்கான எதிர்பார்ப்பு எப்படி இருக்கிறது என்றால், அடுத்த புகைப்படத்தில் உள்ள கட்-அவுட்டை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள் என அந்த புகைப்படத்தையும் ஷேர் செய்துள்ளார். மிகப்பெரிய கட்டிடம் ஒன்றில் அவரது உள்ளாடை விளம்பர போஸ் கட்-அவுட் இடம்பெற்று இருப்பது ரசிகர்களை ஆச்சர்யப்பட வைத்துள்ளது.

என்ன ஸ்பெஷல்

என்ன ஸ்பெஷல்

பெண்களுக்கான உள்ளாடைகள், லெக்கின்ஸ் என அனைத்து வகையான உடைகளை விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளார் கிம் கர்தாஷியன். அந்த ஆடைகளில் SKIMS என்ற வார்த்தை உடை முழுவதும் அச்சிடப்பட்டு இருப்பது அதில் கூடுதல் ஸ்பெஷல் என்கின்றனர். சமீபத்தில், குடும்ப பிரச்சனையில் சிக்கித் தவித்த கிம் மீண்டும் பிசினஸில் கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளார்.

போட் ரைடிங்

போட் ரைடிங்

முன்னதாக தனது மகளுடன் ரப்பர் போட் ஒன்றில் பயணம் செய்யும் புகைப்படங்களை பகிர்ந்து வைரலாக்கி இருந்தார் இந்த சூப்பர் மாடல். லாக்டவுன் தளர்வு காரணமாக சுற்றுலா சென்ற இவர், அதன் புகைப்படங்களையும் பதிவிட்டு, 4 மில்லியன் லைக்குகளை அள்ளி இருந்தது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X